… நல்வினைப் பயனை உயிர்கள் அனுபவிக்கும்படி அளித்துத் தீவினைப் பயனை அவன் ஏற்றுக் கொள்கிறான். கரியமிடறு அந்தக் கருணைக்கு அடையாளமாகத் திகழ்கின்றது… இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவையாகிய கொலைத்தண்டனைக்கு உரிய கழுமரத்தைக் காட்டிலும் இறைவனின் நீலகண்டம் அவனின் பேராற்றலுக்கும் பெருங்கருணைக்கும் அடையாளமாக, மானுடரின் பாவக்கழுவாய்ச் சின்னமாகப் பெரிதும் திகழ்கின்றது …
View More பேராற்றலின், பெருங்கருணையின் சின்னம்: திருநீலகண்டம்Category: இந்து மத விளக்கங்கள்
போகப் போகத் தெரியும் – 23
சமூக விடுதலை என்ற சாயத்தைப் பூசிக்கொண்ட தலைவர்கள், உண்மையில் செய்ததெல்லாம் அங்க வர்ணனைகளின் பங்கு வர்த்தகம்தான்… ஆபாசக் குப்பைகள் அரசியல் அந்தஸ்து பெற்றது தமிழகத்தில்தான். எழுச்சியோடு உருவான படைப்புகள் சாதி அடையாளங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான்.
View More போகப் போகத் தெரியும் – 23காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1
கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன… உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது.
View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியதா?
“பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் தேசியப் பிரார்த்தனையாகவும், தேசிய மந்திரமாகவும் இருந்துவருகிற காயத்ரி மந்திரத்தைப் பொதுவுடைமையாக்க வேண்டும். பால்வேற்றுமையின்றி, பிறப்பு வேற்றுமையின்றி அதைப் பயன்படுத்தக் கூடியவர்களுக்கெல்லாம் அதை உரியதாக்க வேண்டும்” என்கிறார் சுவாமி சித்பவானந்தர்.
View More காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியதா?கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம்
அடிப்படை நாணயமற்ற நபர்களைக் கொண்ட சர்ச்சுகளும் மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர். இவற்றில், இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation) முன்னரே உண்டு என்ற போதும் தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது. அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்; ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்….
View More கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம்எம் தெய்வங்கள் – கடவுளரும் விலங்குகளும்
ஒவ்வொரு மதமும் தனக்கெனக் குறியீடுகளைக் கொண்டிருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டு இருக்கும் இயேசு என்ற கிறிஸ்துவர்களின் தெய்வம், கிறிஸ்துவர்களுக்கு இயேசுவின் தியாகத்தை நினைவு கூர்வதைப் போலவே இந்துக்களான நாங்களும் குறியீடுகளைப் பயன்படுத்துகிறோம்…
View More எம் தெய்வங்கள் – கடவுளரும் விலங்குகளும்எம் தெய்வங்கள் – குலதெய்வம்
தமது ஒரே கடவுள் தவிர மற்றதெல்லாம் சாத்தான் என்பதுதான் மிகவும் மோசமான சிலை/உருவ வழிபாடு. ஏனெனில், ஒரே கடவுள் என்பது கடவுளை மனிதர்களைப் போன்றே கருதுவதன் மூலமாக ஏற்படுகிறது. இது சில மனிதர்களின் மனதில் எழுந்த விபரீத கற்பனை மயக்கமாகும்…
View More எம் தெய்வங்கள் – குலதெய்வம்மஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்
திறமையைக் காட்டுகிறேன் என்று வந்த சமயத்தில் யாரும் ‘அப்பன் பேர் என்ன, நீ என்ன பிறப்பு’ என்று கேட்கவில்லை. ‘என்கூட ஒண்டிக்கு ஒண்டி வா’ என்று அறைகூவும்போது, இளவரசனோடு மோதவேண்டுமானால், உன் தகுதி என்ன என்று கேட்டார்கள். கேட்கத்தான் கேட்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த ஜனநாயக சூழலை மறந்துவிட்டு, அரசர்கள் ஆண்ட அந்த சூழலுக்கு மனத்தை எடுத்துச் சென்று, அந்தச் சூழலில் இந்தக் கணத்தை நிறுத்திப் பாருங்கள்.
View More மஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்மஹாபாரத உரையாடல்கள் – 003 கர்ணன்
ஆகவே, கர்ணன் பிறப்பால் உயர்குடியில் தோன்றி, வளர்ப்பால் தாழ்ந்தவனாகி, அதன் காரணத்தாலேயே தனக்கு இயற்கையாகக் கிட்டியிருக்கவேண்டிய உரிமைகளை எல்லாம் இழந்துவிட்டான் என்று விவரிப்பது a mere sympathy seeking argument and has got no validity more than that.
View More மஹாபாரத உரையாடல்கள் – 003 கர்ணன்மஹாபாரத உரையாடல்கள் – 002 கர்ணன்
துரோணர் சாதியைக் காரணம் காட்டிக் கர்ணனுக்குக் கற்பிக்க மறுப்பதாக பவன்ஸ் பதிப்பில் கமலா சுப்பிரமணியம் எழுதியிருப்பதும், விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதும், இந்தக் கட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால் எழுந்துள்ள பேச்சுகள். இவற்றுக்கு அடிப்படை இல்லை.
View More மஹாபாரத உரையாடல்கள் – 002 கர்ணன்