பசித்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது. சிசுவின் குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது. ஆவின் பாலை உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால் நக்கிக் கொடுத்தது. இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படப் பசி நேரத்தில் சிசு அழத் தொடங்கியதும் எங்கிருந்தாலும் அதன் குரல்கேட்டு ஓடிவரும் பசு பாலைப் பொழிந்து அதன் பசியைப் போக்கும்.
View More ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14Category: இலக்கியம்
அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13
‘அரண்மனைக்கு ஒரு புதிய யானையை வாங்கியிருந்தோம், அய்யனே! அன்று வீரை மதுவருந்திய களிப்பில் இருந்தாள். எனவே எவ்வித முன்னெச்சரிக்கை, பாதுகாப்பின்றி அந்தப் பழகாத யானை அருகில் போய்விட்டாள். யானை அவளைத் தனது துதிக்கையால் காலில் போட்டு மிதித்துவிட்டது. ஒருநொடிப் பொழுதில் வீரை உயிரை இழந்தாள். உங்களுக்குதான் தெரியுமே, தாரை தனது சகோதரிமேல் உயிருக்கு உயிராக இருந்தாள் என்று. யானை மிதிபட்டுத் வீரை உயிரிழந்தாள் என்பதைக் கேள்விப்பட்ட மறுவினாடியே தாரை துக்கத்தில் உயிர் இழந்தாள். என்னுடைய இரண்டு தேவிகளையும் இழந்து நான் வாடுகிறேன்.
View More அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12
என்னுடைய தேசத்தில் நல்லறங்கள்செய்வதால் வளமையான வாழ்வினைப்பெற்று மாடமாளிகைகளில் வசிக்கும் செல்வந்தர்கள் நிறைய உள்ளனர். அந்தச் செல்வந்தர்களின் இல்லங்களின்முன் நின்று நைந்துபோன கந்தல் ஆடைகளை அணிந்து, மழை வெயில் பாராமல் நிற்கவும் முடியாமல் பிச்சைகேட்டு அழைக்கவும் நாணப்பட்டுப் பசியில்வாடும் வறியவர்கள் பலர் உள்ளனர். பெற்ற குழந்தை பசியால் வாடியவுடன் ஈன்ற தாயின் முலைக்காம்புகள் தானே சுரப்பதுபோல, வறியவர்களின் பசிப்பிணியைக் கண்டு இந்த அட்சய பாத்திரமானது தானே உணவு சுரக்கச்செய்யும் திறனை நேரில் காண விழைகிறேன்.
View More பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11
“உயர்ந்த விதை நெல்லாகிய கந்தச்சாலி பயன்தர, அதிலிருந்து நாற்றுகள் கிளம்பி நல்ல அறுவடையை அளிக்க வேண்டும். அதைவிட்டு வெம்மையான பாலைவனத்தில் வெந்து மாவாகி உதிர்ந்து விட்டால் என்ன பயன்? அதைப்போல, புத்ததர்மத்தின் வழிநின்று இந்த உலகிற்குப் பயன்தரவேண்டிய நீ முற்பிறவியின் தொடர்ச்சியாக உதயகுமாரன் பின்னால் மனதை அலையவிட்டால் என்ன செய்வதென்றுதான் உன்னை இங்குக்கொண்டுவந்து விட்டேன்.”
View More மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10
மணிமேகலையின் உடல் சிலிர்த்தது. இதென்ன இப்படி ஒரு நினைவு? முற்பிறவியில் இராகுலன் என்ற அரசகுமாரன் தன் கணவனாக அமையப்பெற்று கொடிய நாகம் தீண்டி இறந்து விட்டான், அவன் மனைவியாகிய தானும் அவனுடன் தீயில் வீழ்ந்து மாய்ந்து. மணிமேகலை என்ற பெயருடன் காவிரி பூம்பட்டிணத்தில் பிறந்திருக்கிறோம் என்றால், இராகுலனும் மறுபிறவி எடுத்திருக்க வேண்டுமே, அவன் யாராக இருக்கும் என்ற ஐயம் அவளுக்கு எழுந்தது.
View More பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]
புத்தபிரானுக்கு என்று வடிவமைக்கப்பட்ட பத்மபீடிகை அது. மரங்கள் அதன்மீது மணமில்லாத மலர்களைச் சொரிவதில்லை. பறவைகள் அதன்மேல் அமர்ந்து சப்தம் எழுப்பவோ, எச்சமிடவோ செய்யவில்லை. தேவர் தலைவன் இந்திரனால் புத்தபெருமானுக்கென்று சிறப்புடன் செய்துகொடுக்கப்பட்ட பீடிகை அது. அதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், அதனைக் காண்பவர்களுக்குத் தங்களது முந்தையப் பிறப்புகளை நினைவுபடுத்தும் தன்மையேயாகும்.
View More மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]
எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர்.
View More துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]
எரிப்பவர்களும்,கொண்டுவந்து கிடத்துபவர்களும், குழிபறித்து அதில் இறந்த உடல்களை இடுவோரும், பள்ளத்தில் உடலைப் போடுபவர்களும், முதுமக்கள் தாழியில் போட்டுப் புதைக்க வருபவர்களும் இரவு-பகல் என்று பாராமல் வந்துபோய்க்கொண்டிருப்பதால் பலத்த ஓசை உடைய இடமாக அது இருந்தது… “இறந்த பிறகு உடலைப் பிரியும் உயிரானது, இப்பிறவியில்செய்த நன்மை-தீமைகளுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கும் என்பதை அறிந்தவள்தானே நீ? பின் எதற்குக் கலங்குகிறாய்? உயிர் உடலைவிட்டு நீங்கியபின், அதனை மீட்டுத்தரும் ஆற்றல்கொண்டவளல்ல நான். தெரிந்துகொள்…”
View More சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]கட்டாய ஓய்வு [சிறுகதை]
‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மாமா? இதைச் சொல்லத்தானே நானே வந்தேன்! நீங்கள்தான் இந்த மூடனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றான் கர்ணன். பிறகு துச்சாதனனின் கையில் இருந்த மதுக்குடுவையைப் பிடுங்கி தனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொண்டான். ‘நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன்’ என்று துரியோதனன் உறுமினான்…. சகுனி எதுவும் சொல்லாமல் ஆகாயத்தை நோக்கினார். நவமியின் நிலவை மேகங்கள் மறைத்திருந்தன. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் பிரகாசமாகத் தெரிந்தன. அனேகமாக எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. பனைமரக் கொடி பறந்த பீஷ்மரின் கூடாரத்தில் மட்டும் இன்னும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன…
View More கட்டாய ஓய்வு [சிறுகதை]மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]
“என்னவெல்லாம் கூறியிருப்பான்? கற்பில்லாதவள், தூய தவமற்றவள், வருணக்காப்பு இல்லாதவள், விலைமகள் என்று என்னவெல்லாம் கேவலப்படுத்தியிருப்பானா? இவனது பழிச்சொற்கள் எதையுமே பொருட்படுத்தாமல், என் மனம் ஏன் இவன்பால் செல்கிறது? இதுதான் காமத்தின் இயல்பா? நான் துறவறக் கோலம் பூண்டுள்ளது எல்லாம் வேடம்தானா? இதுதான் உண்மையென்றால், என்னுடைய நேர்மை அழியட்டும்!“
View More மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]