சில சம்ஸ்க்ருதச் சொற்கள் தமிழில் வருகையில் வேறு பொருளில் கையாளப்படுகின்றன. “தனது” என்ற பொருள் கொண்ட “நிஜம்” என்ற சம்ஸ்கிருதச் சொல்லை “உண்மை” என்பதற்குத் தமிழன் கையாள்கிறானே, அவன் ஆன்மாவையே உண்மை என்று புரிந்துக்கொண்டவன் என்று தெரிகிறது.. அரசிகளுக்கும், இளவரசிகளுக்கும் பேடிகள் தோழிகளாய் இருந்ததால் “அலி ” (சம்ஸ்கிருதத்தில் தோழி) என்ற சொல்லாடல். அதீதக் காம விகாரத்தை வெறும் புரத்தோற்றமாகக் கருதியதால் “ஆபாஸம்” (தோற்றம்). தமிழகத்தின் வைதீகர்களுக்கிடையே சில பரிபாஷைகள் உள்ளன. “த்ராபை” என்றால் வீணானவன் என்று பொருள். இது வேதமந்திரத்திலிருந்து வருகிறது..
View More தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வைCategory: இலக்கியம்
அழ. வள்ளியப்பாவின் கண்ணன் பாட்டுக்கள்
எனக்கு மிகவும் பிடித்த முதல் கவிஞர் அழ.வள்ளியப்பா தான். அவர் பாடல்கள் தொகுப்புகளை படித்தால் ஒன்று தெரியும். அவருக்கு கண்ணனிடம் அலாதி அன்பு. கண்ணனை பரம்பொருளாக, தோழனாக, கீதை அளித்த நல்லாசிரியனாக குழந்தை பருவத்தில் நமக்குள் கோவில் கொள்ள செய்தவர்களில் அழ.வள்ளியப்பா முக்கியமானவர். முதன்மையானவர்… அவரது சில அற்புதமான கண்ணன் பாட்டுக்கள் அவை புத்தகத்தில் வெளிவந்த அதே வடிவில் கீழே..
View More அழ. வள்ளியப்பாவின் கண்ணன் பாட்டுக்கள்வனங்களும் நமது பண்பாடும்
வேதப் பாக்கள் வனங்களில் தான் உருப்பெற்றன. ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. நைமிச வனம்,காம்யக வனம், த்வைத வனம், தண்டக வனம், மது வனம், தாருகா வனம் என்று பல பண்டைய வனப் பெயர்கள்.. ஆனைக்கா, கோலக்கா, கோடிக்கா, நெல்லிக்கா, குரக்குக்கா, வெஃகா, தண்கா எனும் அழகான பெயர்கள் வனம் சார்ந்த தலங்களைக் குறிப்பவை… நெருங்கிய வனப்பகுதி நாட்டுக்கு ஓர் அரணாகவே திகழ்ந்தது. தமிழ் மன்னர்கள் பனையையும், வேங்கையையும், ஆரையும் காவல் மரமாகக் கொண்டிருந்தனர்… காடுறை வாழ்க்கை ஆன்மிகத்துக்குத் துணை புரிவதாக நம்பினர்; வானப்ரஸ்தம் எனும் ஒருநிலையும் வரையறுக்கப் பட்டது. ..
View More வனங்களும் நமது பண்பாடும்சாணக்கிய நீதி – 6
மலையுச்சியிலிருந்து கீழே எட்டிப்பார்க்கத் தோன்றும், அதுவும் ஒருவர் செய்ய முடியாது என்பதைத் தான் செய்யவேண்டும் என்ற துணிவு இருக்கும். அதுதான் ‘இளங்கன்று பயமறியாது,’ என்ற பழமொழியும் உள்ளது.
மிகவும் மதிப்புள்ள எவையும் — கற்களானலும், முத்தானாலும், ஆன்றோரானாலும், மணமுள்ள மரமானாலும் சரி – அவை எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. ஆகவே, எதையும் ஒரு கட்டத்திற்குள் அடைக்கக்கூடாது – ஸ்டீரியோ டைப் செய்யக்கூடாது என்றே சொல்லாமல் சொல்கிறார்.
பாரதி(ய மொழிகள்) தினம்
தன் தாய்மொழியான தமிழின் இனிமையை “யாமறிந்த மொழிகளிலே” என்று பாடி வெளிப்படுத்திய பாரதிக்கு சம்ஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, மராட்டி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி போன்ற அன்னிய மொழிகளும் நன்கு தெரியும். ஆங்கிலத்தையும் அவர் வெறுத்தவரில்லை. .. நாட்டின் பிற மொழிகளை மதிப்பதோடு நேசிக்கும் அவரது உன்னத குணம்தான், அவரது பிறந்த தினத்தை (டிசம்பர்-11) பாரதிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவிக்கக் காரணமாய் அமைந்துள்ளது என்று கருதலாம். இதனை மேலும் அலசுவோம்..
View More பாரதி(ய மொழிகள்) தினம்எனதருமை இந்தியாவின் எருமைகளே [கவிதை]
இன்று உலகில் உன் மாமிச ஏற்றுமதியில் முதலிடம் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் வல்லரசுக்குத்தானாமே.. உன் உதிரத்தை நீ பாலாகச் சுரந்தும் உன் மீது சுரந்திருக்கவில்லைதான் போதிய கருணை. உன் உடம்பை உயிரோடு தந்தும் உனக்குக் கிடைத்திருக்கவில்லைதான் உரிய மரியாதையும்.. ராமன் பேரில் போர் நடத்தி ராவணனிடம் ராஜ்ஜியத்தை நாங்கள் ஒப்படைத்த பாவம் ஒட்டு மொத்தமும் உன் மீதுதானா இறங்கவேண்டும்?..
View More எனதருமை இந்தியாவின் எருமைகளே [கவிதை]சாணக்கிய நீதி – 4
அன்றிலிருந்து இன்றுவரை சமுதாயம் ஆண்களையே சார்ந்திருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. பெண்ணுரிமைக்குத் தற்காலத்தில் அதிகம் குரல்கொடுக்கப் படுகிறது என்றாலும், அது படித்த பட்டினத்துப் பெண்களுக்கே சாதகம் செய்திருக்கிறது. ஆகவே, அவர்கள் துணிச்சலாகச் செயல்பட்டால்தான் அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமாளிக்க இயலும்.
காமம் என்பதை ‘அறம், பொருள்’, இன்பம்’ இவற்றின் தேடலின் தூண்டுதலாக எடுத்துக்கொள்ளலாம். அதை ஆண்கள் நிறைவேற்றவேண்டும் என்று மந்திரங்கள் சொன்னாலும், அதற்கு உறுதுணையாக விரும்பிச் செய்வது – செய்யவைக்க உறுதுணை என்று மந்திரங்கள் சொல்வது பெண்கள்தான்! அந்தப் பெண் வாழ்க்கத் துணையாக, வாழ்க்கை வண்டியின் உறுதுணையாக இழுக்காவிடில் ஆண்களால் எதையும் செய்ய இயலாது என்று வேதங்களும் உணர்ந்து சொல்லியுள்ளன.
கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட கந்தபுராணத்தை இலங்கை சைவ தமிழர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்துவரும் மரபு உண்டு. ஆனால் நவீன வாழ்வியல் இப்புராண படன மரபை பெரிதும் சிதைத்து விட்டது. இப்பொழுதெல்லாம் புராண படனம் சடங்காகவே சில இடங்களில் நடைபெறுகிறது. இம்மரபை மீளெழுச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்… எனவே, பொருத்தமான 700 பாடல்களை கதை ஓட்டத்திற்கேற்ப தொகுத்து, சப்தசதி என்ற எண்ணிக்கை அடிப்படையில் தேவி மகாத்மிய வடிவிலேயே, இதனை உருவாக்கலாம் என கருதினேன். கந்த மான்மியம் என்று தமிழ் மரபுகேற்ப அதற்கு பெயரிடலாம் என்றும் கருதினேன்…
View More கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்பாலைக் கழுகுகளும் பனிப்பிரதேசக் கழுகுகளும் [கவிதை]
புனிதமானதாகச் சொல்லிக்கொள்ளப்படும் பூர்விக நிலத்துக்கு – இன்றும் பெரும் சண்டை நடக்கிறது என்றாலும் – அந்தப் பாலைக் கழுகுகளும் – பனிப்பிரதேசக் கழுகுகளும் – உண்மையில் இரட்டைக் குழந்தைகள்தான்.. மிதவெப்பப் பகுதியில் – அன்பான ஆவினங்கள் – வண்ணமயமான மயில்கள் – வலிமையான பன்றிகள்- பொறுமையான கழுதைகள் – என ஏராளம் இருந்தன.. சிறைப்பட்டவற்றுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரே பாடம் – நயந்து பேசி இழுத்துக்கொண்டுவா உன் மிச்சக் கூட்டத்தை – நச்சியமாகப் பேசி அழைத்துக்கொண்டுவா உன் எஞ்சிய கும்பலை.. சிறைப்பிடிக்கப்படாத மிதவெப்ப விலங்குகளின் வழித்தடங்களில் – மின்சார முள்வேலிகள் முளைத்துவிட்டன..
View More பாலைக் கழுகுகளும் பனிப்பிரதேசக் கழுகுகளும் [கவிதை]திருவள்ளுவர்: காவிக்கு எதற்கடா சாயம்? [கவிதை]
பைபிள் பரங்கிய அடிமைகளுக்கு பைந்தமிழ் குறள் பேகனியப் பகை நூலே.. குர்ரான் மகமதியருக்கு குறள் முழுவதும் காஃபிரியமே.. உலகப் பொதுமறை தந்து உலகின் குருவாக அவர் உயர உங்களில் ஒருவராக அவர் இருந்திராததே காரணம்.. உலகில் உள்ளோரைக் கொன்றும் ஏய்த்தும் தன் மறையைப் பரப்பென்று சொல்லாத எங்கள் தர்மத்தின் வழியில் அவர் இருந்ததே காரணம்.. கள்ளுண்ணாமை போதித்து கற்றவற்றின்படி நிற்கச் சொன்னவர் சாராயம் விற்று நடக்கும் சாக்கடை மாடல்களையெல்லாம் காலில் கிடப்பதைக் கழற்றி அடிப்பார்..
View More திருவள்ளுவர்: காவிக்கு எதற்கடா சாயம்? [கவிதை]