ஆரிய கடவுள் வேறு, திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது. இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும்… நக்கீரர் பாடிய புறநானூறு (பாடல் 56) தெளிவாக சிவன், திருமால், முருகன் ஆகியோரது தெய்வ அடையாளங்களைக் கூறுகிறது. இதற்கும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள்…..
View More தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடிCategory: இலக்கியம்
வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி
டாக்டர் ரங்கன்ஜி ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற சிறப்பான குறுஞ்சொற்பொழிவுத் தொடரைக் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறார். சங்க இலக்கியங்களில் வேதம், வேதியர், வேத தெய்வங்கள், வேத வேள்விகள், வேதாந்த தத்துவம், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், முருகன், சிவபெருமான், திருமால், சக்தி எனப் பலவற்றையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களையெல்லாம் எளிமையாக, அழகாக, ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கிறார்…
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜிமாயப்பெருநதி: புத்தக அறிமுகம்
ஒரு நல்ல நாவலை வாசிப்பது ஒரு நதிக்குள் மூழ்கித் திளைப்பதைப் போல. கொஞ்சம் மூழ்கித் திளைக்கையில் இன்னொரு உலகுக்கு நம்மை அழைத்துச்செல்லும். மாயப்பெருநதி நாவலில் இரண்டு உலகங்களுக்கு. வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும் இரு கதைகளின் அடிநாதமாக அவைகளை இணைக்கும் ஒரு சரடாக, தன் முன் நிகழும் சம்பவங்களின் சாட்சியாக, கதாபாத்திரங்களின் உணர்வலைகளை சுழற்றியடித்துக் கொண்டே தாமிரபரணி ஓடுகிறது.. ஹரன்பிரசன்னாவின் முதல் நாவல் இது. ஆனால் முதல் நாவலிலேயே நம்மைத் தன் எழுத்தால் கட்டிப் போடுகிறார்…
View More மாயப்பெருநதி: புத்தக அறிமுகம்பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்
சோம்பலும், பயமும், தூக்கமும் தாமச குணத்தினின்று பிறப்பவை. பல மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பல சமயங்களில் தமோகுணத்தின் ஆளுகைக்குக் கீழ் சென்று மீளமுடியாதபடி அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. அதை உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கான உறுதியும் அருளும் தெய்வம் தரவேண்டும் என்று இங்கே வேண்டுகிறார்… சத்வ குணத்தால் தூண்டப்பட்டு நிகழும் செயல்கள் அனைத்தும் சாதாரணத் தளத்திலிருந்து உயர்ந்து யக்ஞமாக, வேள்வியாக, தெய்வத்தின் செய்கைகளாக, கர்மயோகமாக ஆகிவிடுகின்றன… மகாமாயையாகிய பராசக்தி. இவ்வுலகனைத்தும் அவள் விளையாட்டன்றி வேறில்லை. அவளே இப்பாடலில் பாரதி போற்றும் கண்ணம்மா…
View More பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்மேதா ஸூக்தம் – தமிழில்
வேதங்களில் வரும் மேதா என்ற என்ற பெண்பாற்சொல் உள்ளுணர்வு (intuition), அறிவு (intelligence), மன ஆற்றல் (mental vigor) ஆகியவற்றைக் குறிக்கிறது. இதிலிருந்தே தமிழில் மேதை, மேதைமை ஆகிய சொற்கள் வருகின்றன. அறிவையும் அதனால் விளையும் ஆற்றலையும் ஒரு சக்தியாக, தேவியாக போற்றுகிறது இந்த அழகிய வேதப்பாடல். வேதங்களில் இவ்வாறு போற்றப்படும் மேதா தேவி என்னும் தெய்வீக சக்தியே சரஸ்வதி, கலைமகள், பாரதி என்று ஒவ்வொரு இந்து இல்லங்களிலும் உள்ளங்களிலும் வழிபடப் பெறுகிறாள்…
View More மேதா ஸூக்தம் – தமிழில்வீடுபெறச் செல்!
“சுயநலமிகளே, நீங்கள் நல்லாயிருக்க மாட்டீர்கள்!” என்று சபித்தார், சிங்காரவேலனர். அவரை யாரும் கவனிக்கவில்லை. ஏனோ, அவரைத் தூக்கிவிட மற்றவருக்கு இரக்கம் வரவில்லை. அந்தக் கூட்டத்தில் அவரைக் குனிந்து தூக்கினால் தம்மை மற்றவர்கள் மிதித்துத் தள்ளிவிட்டால் என்ன ஆகும் என்பதே அவர்கள் மனதில் தோன்றித் தடுத்தது. சிங்காரவேலன் கீழே கிடப்பதைக் கவனிக்காமல் அவரை மிதித்துத் தள்ளியவாறே பலரும் செல்லக் கண்டனர். அதைப் பார்க்கச் சகிக்காமல் மற்றவர் ஸ்ரீநிவாஸைப் பின்தொடர்ந்தனர்.
View More வீடுபெறச் செல்!காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு
காட்டுமிராண்டி என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்காவது வருகிறதா என்று பன்மொழிப் புலமையும் வேத சாஸ்திரப் பயிற்சியும் கொண்ட அறிஞர், நண்பர் கேட்டார். கொஞ்சம் யோசித்து விட்டு, இல்லவே இல்லை, இது பிற்காலச் சொல் என்று கூறினேன். தமிழ்க்களஞ்சியம் ஹரிகியிடம் கேட்டபோது, அவரும் அதனை வழிமொழிந்தார். தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்திருக்க வேண்டும் என்பதாக நாங்கள் முடிவு செய்தோம்.. முக்கியமாக, இப்படி ஒரு சொல்லை உருவாக்க வேண்டிய தேவை என்ன என்பது தான் இங்கு சிந்திக்க வேண்டியது. ஏன் இத்தகைய ஒரு சொல் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமும் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் மொழியில் இல்லை என்ற கேள்வி எழுகிறது…
View More காட்டுமிராண்டி – ஓர் ஆய்வுதுர்க்கா ஸுக்தம் – தமிழில்
யஜுர்வேதத்தில் உள்ள பரம பவித்திரமான ஸூக்தம் இது. துர்கா என்ற சொல்லுக்கு கடக்க முடியாத, செல்லமுடியாத என்பது பொருள். துர்காணி – கடக்கமுடியாத ஆபத்துக்கள். அன்னை மகா பிரகிருதியும் ஆதி சக்தியுமானவள், அறியமுடியாதவள் என்பதனால் இச்சொல் அவளது திருப்பெயராக இலங்குகின்றது… ஜாதவேதஸ் எனும் அக்னிக்கு சோமத்தைப் பிழிந்து அளிப்போம். அறிவுருவான அவன் எமது பகைகளைப் பொசுக்கிடுக. எமது ஆபத்துக்கள் அனைத்தையும் போக்கிடுக கடலைக் கடக்கும் கப்பலென அக்கரை சேர்த்திடுக…
View More துர்க்கா ஸுக்தம் – தமிழில்திரிவேணி சங்கமம்
ஆனால்
பத்து வருஷம் ஆகியும் ஜமுனாவால் அலஹாபாத் வரமுடியலே. ஏதேதோ காரணம், மாத்திமாத்தி. நான்தான் ஒரொரு வாட்டியும் என் பெண்ணைப் பார்க்க
என் வீட்டுக்காரரோட டெல்லி போகும்போதும், அவளைப் பார்ப்பேன். ரொம்ப சந்தோஷப்படுவா.
அவ்வப்போது வாட்ஸ் அப்பில் வீடியோலயும் பேசுவோம்.திடுன்னு
இந்தக் கொரோனா கலவரம். டெல்லி ரொம்ப மோசமாயிட்டுது. என் மாப்பிள்ளையோ டாக்டர். ; என்ன ஆச்சோனு எங்களுக்கெல்லாம் ஒரே மனக்கவலை அரித்துப்
பிடுங்கிச்சு.
அப்பாவின் துண்டு
தூக்கம் கண்ணைச் சுற்றியது. கண்ணயர்ந்துவிட்டேன்.
திடுமென்று விழித்துக்கொண்டேன் நான். என்னைச்
சுற்றிலும் ஒரே இருட்டு. பயமாக இருந்தது. என்னைப் பெற்றவளைத் தேடினேன். பிறகுதான் அவள் இல்லை என்ற உணர்வு வந்து உறுத்தியது. அவளது கணகணப்பான உடம்பில் தலையை வைத்துப் படுத்துக்கொள்ளவேண்டும்
என்ற ஆவல் எழுந்தாலும், அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்தேன். அப்பா’வின்
நினைவு வந்தது. அவர் எங்கே?
