சாணக்கிய நீதி – 3

This entry is part 3 of 8 in the series சாணக்கிய நீதி

நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உண்மையான குணம் என்ன, அவர்கள் எப்படி தங்கள் சுய உருவத்தைக் காட்டுவார்கள் என்று எப்பொழுது, எப்படி அறிந்துகொள்வது?  இது அரசருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியவேண்டிய ஒன்றுதானே! உண்மையான நண்பரைப் பற்றி நமக்குத் துயரத்தால் கையறு நிலை வரும்போதுதான் அறிய இயலும்

View More சாணக்கிய நீதி – 3

சாணக்கிய நீதி – 2

வாழ்க்கையை நடத்திச் செல்லச் செல்வம் தேவை. அதிலும், எதிர்பாராது வரும் தேவைக்காகச் செல்வத்தைக் காப்பாற்றி வைக்கவேண்டும்.  அந்தச் செல்வத்தைக்கூட, இல்லாளுக்காக – மனைவியைக் காப்பதற்காகச் விட்டுவிடவேண்டும் என்கிறார், சாணக்கியர்

View More சாணக்கிய நீதி – 2

சாணக்கிய நீதி -1

எந்த நாடு உன்னைத் தன்மானம், மதிப்பு, வாழும் வழி, குடும்பம், உற்றார் உறவினர், நலம்விரும்பிகள், கற்கும் வழி, தன் முன்னேற்றம் – இவற்றைப் பெற அனுமதிக்கவில்லையோ, அந்த நாட்டில் வசிக்காதே. அதைவிட்டு நீங்கு. அது நீ வாழத் தகுதியற்றது.

View More சாணக்கிய நீதி -1

எங்கே போகிறேன்?

“சுவாமிகள் எழுதிவைத்த திருமுகக் குறிப்பில் ஜீவசமாதி செய்துவிடும்படி ஆஞ்ஞை கொடுத்திருக்கிறாராம்!”
“சுருங்கச்சொன்னால் கம்ப்யூட்டர் விளையாட்டில் இருக்கும் ஒரு பாத்திரம்போலத்தான் நீ! நீ உணர்ந்து எல்லாமே அந்த விளையாட்டுதான்! கம்ப்யூட்டர் விளையாட்டு எவ்வளவு உண்மையோ, அத்தனை உண்மைதான் நீ இதுவரை கண்டது, கேட்டது, அறிந்தது, துறந்தது, தேடியது – அனைத்துமே!”

View More எங்கே போகிறேன்?

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கை தத்துவம்

பக்தியும், ஞானமும் ஒருவனின் இரண்டு கண்களைப் போன்றது. ஒன்று இல்லாமல் மற்றொன்றின் உதவியால்…

View More பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கை தத்துவம்

சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்

சங்கரரைப் பற்றிய சிறப்பான அறிமுக நூல்களில் ஒன்று டி.எம்.பி.மகாதேவன் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஆங்கில நூல். ஒரு இனிய ஆச்சரியமாக, எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு மொழிபெயர்ப்பில் இதன் தமிழாக்கம் வெளிவந்து இணையத்திலும் கிடைக்கிறது (சுட்டி கீழே). தத்துவப் பேராசிரியர் எழுதிய மூலநூல், சிறந்த இலக்கியவாதியின் கவித்துவமிக்க உரைநடையில் தமிழில் ஒரு தனி மெருகைப் பெற்று விட்டது. இந்தச் சிறிய நூலில் முதல் பாதியில் சங்கரரின் வாழ்க்கைச் சரிதமும், பின்பாதியில் தத்துவ தரிசனமும் சிறப்பாக விளக்கப் பட்டுள்ளன…

View More சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்

மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்

அருணகிரிநாதரைப் போல மற்றொரு மேதமையை வேறெங்கும் காணமுடியுமா என்பது தெரியவில்லை. அவர் வேறெந்த மொழியில் பிறந்திருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள். தமிழ் மக்களோ அவரை பத்தோடு பதினொன்று என்பது போல பார்க்கிறார்கள்… வாழ்க்கையின் ஒருவித உள்ளீடற்ற தன்மையை சொல்லி இப்படி பிறந்து வாழ்ந்து முதுமையடைந்து நோயுற்று மரணமடையப் போகிற நான் அந்த முடிவுக்கு முன் உன் கிருபையை பெறுவேனா என கேட்கிறார். அடுத்த பகுதியை பாருங்கள்..

View More மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்

தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்

நம்மாழ்வாரின் சாதனைதான் நமது வியப்புணர்ச்சியையெல்லாம் விஞ்சி நிற்பது. காரணம் அவரது காலத்தில் அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் வினோதமானவை. சங்கப் புலவரின் சாதனையான இலட்சியக் காதலைக் கடவுள்பால் கொண்ட காதலுக்கான பக்திமொழியாகவும், பக்திக்கான காதல் இலக்கணமாகவும் கையாண்டு வெற்றி கண்டவர் அவர். எப்படி பக்திக்கு அகத்திணையைக் கையாண்டார்கள்? திருவாய்மொழியில் தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம் என்று வரும். இந்தத் தோழி, தாய், மகள் இவர்கள் யார்?….

View More தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்

விஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்

பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் விக்கிரகம் அன்று வணங்கப்படுவது. உண்மையில் பிரபஞ்ச மயமாக இருக்கும் விராட் விக்கிரகம்தான் வணங்கப்படுவதாம். அந்த விராட் விக்கிரகம் எதனால் ஆனது? சேதனர்கள் என்னும் ஜீவர்களின் முழுமையும் சேர்ந்து ஒரு பெரிய சரீரம் என்று கருதினால் அந்தச் சரீரத்தில் இருக்கும் ஆத்மாவாக நாராயணன் இருக்கிறார்… பூமிதான் பாதங்கள். த்யு லோகம் என்னும் விண் என்பதுதான் சிரம். ஆகாயம் என்பது நாபி. சூரியன் தான் கண்கள். வாயு மூக்குகள். திக்குகள்தாம் காதுகள். பிரஜாபதியைக் குறியாக உடைய அந்த விராட்டிற்கு மரணம் என்னும் மிருத்யுதான் அபானம். லோகபாலர்கள் அவருடைய கைகள். சந்திரன் மனம். யமன் புருவங்கள்…

View More விஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்

சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்

கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம்… நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயல்பை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான். இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?..

View More சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்