அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்

தொல்காப்பியம் ஓரிடத்தில் பார்ப்பார், அரசர், ஏனோர் (வணிகர், வேளாளர்), அறிவர், தாபதர் (தவம் செய்வோர்), பொருநர் (போர் செய்வோர்) என்பவர்களை ஒரே சூத்திரத்தில் பட்டியலிட்டுப் பேசுகிறது. வெற்றிக்கு உரியதான வாகைத்திணையை விளக்கும் சூத்திரம் இது. முதற்பார்வையில் இந்தப்பட்டியல் தொடர்பற்றவற்றை ஒன்று சேர்த்து ஏதோ கலந்து கட்டியது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உரைகளின் துணைகொண்டு கற்கும் போது தமிழ் இலக்கண மரபின் ஆழமும் மேதமையும் புலனாகிறது… பதஞ்சலி யோக சூத்திரத்தின் மொழிபெயர்ப்புப் போலவே அமைந்துள்ள இவற்றைக் கொண்ட நூல் எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பதஞ்சலி யோக மரபில் சூத்திரங்களாகவே அந்த நூல் பயிலப் பட்டிருக்க வேண்டும். அந்த நூல் எவ்வாறு வழக்கொழிந்தது? …….

View More அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்

பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

தீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம் தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான்.
அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள்.

View More பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

பகலவனும், பொங்கலும்!

பொங்கல் திருநாளன்று, புத்தரிசியுடன் புதுவெல்லத்தையும் பாலையும்கூட்டி, புதுப்பானையில் மஞ்சள்கிழங்கை இலையுடன் சேர்த்துக்கட்டி, “பொங்கலோ பொங்கல்! பால்பொங்கல்!” என்று மகிழ்ந்து குரவையிட்டு, நல்ல அறுவடைக்கு கதிரவனுக்கு நன்றிசெலுத்துவர் நம்தமிழ்ப் பெருமக்கள்
“பூவுலகம், விண்ணுலகம், பாதாளவுலகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான, ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை [சூரியனை] நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அப்பரம்பொருள் [சூரியன்] எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்”

View More பகலவனும், பொங்கலும்!

ஆதிசங்கரர் படக்கதை — 6

நான் பூமியல்ல, ஆகாயமல்ல, நீருமில்ல, நெருப்புமல்ல. காற்றுமல்ல, மனமுமல்ல, உணர்வுமல்ல. அனைத்தையும் கடந்த சிவம்!

View More ஆதிசங்கரர் படக்கதை — 6

வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை

தேளின் கொடுக்கை நீக்கிவிட்டால் அது துன்பம்தர முடியாததைப்போல மனிதனின் தீயகுணத்தை அறிந்து, அதைத் தகுந்த சமயத்தில் நீக்கி விட்டால், அவனால் துன்பம் யாருக்கும் எந்தக் காலத்திலும் ஏற்படாது என்பது வேமானாவின் கருத்தாகும். ஒரு சமூக சீர்திருத்தவாதியாக கருத்துக்களை ஆழமாகவும் உறுதியாகவும் எவ்விதச் சார்பற்றும் சொல்வதால், “வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை” என்று தெலுங்கு இலக்கிய உலகம் அவரை அடைமொழியோடு போற்றுகிறது. பிறந்த சாதியைவிட மனிதனின் குணம்தான் அவனை எக்காலத்திலும் மேம்படுத்துகிறது என்பது சீர்திருத்தவாதிகளின் ஒருமித்த கருத்தாகும். மனிதனின் தீயகுணத்தை அழிக்க உதவுவதுதான் உயர்வான சிந்தனை… “இடமும் நேரமும் நம்முடையதாக இல்லாதபோது வெற்றி நமக்கில்லை, இதனால் நாம் சிறியவர்களில்லை – கண்ணாடியில் மலை மிகச்சிறியது தானே, விஶ்வப் பிரமாவினுரா வேமா”…

View More வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை

பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

பாரதியாரின் பகவத்கீதை மொழியாக்கத்தை எனது குரலில் ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். கூடிய வரையில் நிதானமாகவும், வாசகங்களின் பொருள் நன்கு வெளிப்படுமாறும் வாசிக்க முயன்றுள்ளேன். கீதா ஜெயந்தியும் வைகுண்ட ஏகாதசியும் ஆகிய இப்புனித நாளில் இந்த ஒலிப்பதிவை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். 18 அத்தியாயங்களும் தனித்தனி ஒலிக்கோவைகளாக உள்ளன. அவற்றைத் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்…. கீதையின் வாசகங்களை பாராயணம் செய்வதும், கேட்பதும், மனதில் மீட்டிப் பார்த்து தியானிப்பதும், கீதையைக் கற்கும் மாணவர்கள், கற்று முடித்தவர்கள், யோக சாதகர்கள், ஆன்மத் தேடல் கொண்டவர்கள் எனப் பல சாராரும் எப்பொழுதுமே கைக் கொண்டு வந்துள்ள ஒரு முறையாகும். கீதையின் மூல சுலோகங்களை நேரடியாக சம்ஸ்கிருதம் மூலம் பயின்றவர்கள் அவ்வாறே வாசித்தும், கேட்டும் தியானிப்பார்கள். அவ்வாறு பயிலாதவர்களும் தாங்கள் பயின்ற மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வாசித்தும், கேட்டும் இதனை மேற்கொள்ளலாம். காத்திருக்கும்போதோ, பயணம் செய்யும் போதோ கூட கவனத்தைச் செலுத்தி இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்பதன் மூலம் கீதையின் உட்பொருளைச் சிந்திக்கலாம்….

View More பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

சிவநெறி – சமய அவிரோதம்

அவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை.
சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம். அதனால் வெற்றி தோல்வி அவனவன் கற்ற கல்விவலியினாலும் வாதத் திறமையினாலும், வாதிக்கேயன்றி மதத்துக்கில்லை.

View More சிவநெறி – சமய அவிரோதம்

சிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்       

சைவசித்தாந்தம் இந்த பேதாபேத வாதத்தில் ஈடுபடாமல் சிவத்துக்கும் ஆன்மாவுக்கும் இடையே அத்துவித சம்பந்தத்தைப் பேசுகின்றது. இந்த அத்துவித சம்பந்தத்தில் ஆன்மா எந்தநிலையிலும் சிவத்தை விட்டுப் பிரிந்துநிற்பதில்லை. இந்த அத்துவித சம்பந்தத்தை முதலில் எடுத்தோதியவர் நான்மறைவல்ல ஞானசம்பந்தர்… கலப்பினால் ஒன்றாதல் அபேத சம்பந்தம். அது பொன்னும் ஆபரணமும் போலன்று; உடலும் உயிரும்போல். வேறாதல் பேத சம்பந்தம். இருளும் ஒளியும் போலன்று; கண்ணொளியும் சூரியனொளியும் போல். கண்ணுக்கு ஒளியிருந்தாலும் பொருளை அறிவதற்குச் சூரியனொளி இன்றியமையாமல் வேண்டப்படும். காணும் ஒளியும் காட்டும் ஒளியும் என அவை வேறாம். உடனாதல் பேதாபேத சம்பந்தம். சொல்லும் பொருளும் போல அன்று. ஆன்மபோதமும் கண்ணொளியும் போல். கண் கண்டாலும் ஆன்மபோதமும் உடன் நின்று கண்ணுக்கு இன்னபொருள் என அறிவிக்கின்றது…

View More சிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்       

மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4

முன்தோற்றமற்றது என்றால் என்ன? இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை. “தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும்?” என்ற கேள்வி எழுகிறது. நமது வெளியுலக உணர்வுப்படி நோக்கினால் — ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்? அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா? முடியாதே! அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது. அது எப்பொழுதும் இருக்கிறது.

இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா! எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.

அது வெளியிலும் இல்லை என்றால் என்ன? எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்! எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.

அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை. அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது. அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.

தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!

View More மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4

மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2

விழித்திருக்கும் நிலையிலும், கனவுலகில் இருக்கும் நிலையிலும் ஆத்மனின் அறிவு மாறுபாட்டை உடையதாகவே இருக்கிறது. அதாவது விருப்பு-வெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு, ஏழை-செல்வந்தர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, இவை எல்லாமே இருக்கின்றன.

ஸுஷுப்தி [ஆழ்உறக்க] நிலையில் இருக்கும்போது இந்த அறிவுக்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. எல்லாமே ஒன்றுதான். ஆக அறிவு அறிவாகவே, மாறுபாடுகள் இன்றி, வெளிஉலக அனுபவங்களால் ஏற்பட கலப்பு இல்லாமல் தூய அறிவாகவே உள்ளது. இப்படி இருக்கும் ஆத்மனை அறிவாளி என்றே மாண்டூக்ய உபநிஷத்து அறிவிக்கிறது….

View More மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2