அன்றிலிருந்து இன்றுவரை சமுதாயம் ஆண்களையே சார்ந்திருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. பெண்ணுரிமைக்குத் தற்காலத்தில் அதிகம் குரல்கொடுக்கப் படுகிறது என்றாலும், அது படித்த பட்டினத்துப் பெண்களுக்கே சாதகம் செய்திருக்கிறது. ஆகவே, அவர்கள் துணிச்சலாகச் செயல்பட்டால்தான் அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமாளிக்க இயலும்.
காமம் என்பதை ‘அறம், பொருள்’, இன்பம்’ இவற்றின் தேடலின் தூண்டுதலாக எடுத்துக்கொள்ளலாம். அதை ஆண்கள் நிறைவேற்றவேண்டும் என்று மந்திரங்கள் சொன்னாலும், அதற்கு உறுதுணையாக விரும்பிச் செய்வது – செய்யவைக்க உறுதுணை என்று மந்திரங்கள் சொல்வது பெண்கள்தான்! அந்தப் பெண் வாழ்க்கத் துணையாக, வாழ்க்கை வண்டியின் உறுதுணையாக இழுக்காவிடில் ஆண்களால் எதையும் செய்ய இயலாது என்று வேதங்களும் உணர்ந்து சொல்லியுள்ளன.
Category: சமூகம்
இந்து சமுதாயம், வாழ்க்கை முறை, சமூக பிரசினைகள், தீர்வுகள்…
அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்
பெளத்தத்துக்கு மதம் மாறியபோது அம்பேத்கர் முன்மொழிந்திருந்த 22 வாக்குறுதிகள் ஏதோ அவசர கோலத்தில் உருவாக்கியவை போலவே இருக்கின்றன.. “இந்து மதத்தை விடுத்து நான் பௌத்தத்தை ஏற்கிறேன்” என்றார். ஆனால் அவர் வகுத்த அரசியல் சாசனப்படி பெளத்தர்களுமே கூட இந்துவாகவேதான் வாழ்கிறார்கள். வாழ முடியும். பெளத்தத்துக்கான மத மாற்றம் என்பது அம்பேத்கர் செய்தபோதே அவசியமற்ற ஒரு செயல்தான். அன்றைக்கே அதன் தாக்கம் ஒன்றுமில்லைதான்…
View More அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்காந்தாரா (கன்னடம்): திரைப்பார்வை
இந்த இயற்கைக்கு ஒரு மொழி உள்ளது. அது நம்மோடு பேசுகிறது என்பதை காடுபட்டி சிவனும், வனத்துறை அதிகாரி முரளியும் உணர்ந்துகொள்ளும் தருணம் நிலத்திற்கும் – அதிகாரத்திற்கும் வரும் இணக்கத்தை காட்டுகிறது.. ‘பஞ்சுருலி’ தன் மக்களுடைய தார்மீக சக்தி,அறத்தின் பெரு எழுச்சி. அது கண்களறியா நெருப்பு வேலியை போட்டு தன் மக்களை காக்கிறது.. இதை திரையில் சாத்தியப்படுத்திய விதத்தை பார்க்கும் போதுதான் அதில் இருக்கும் தெய்வத் தன்மையை உணர முடிகிறது. படத்தின் இறுதிக்காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது…
View More காந்தாரா (கன்னடம்): திரைப்பார்வைசாணக்கிய நீதி – 3
நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உண்மையான குணம் என்ன, அவர்கள் எப்படி தங்கள் சுய உருவத்தைக் காட்டுவார்கள் என்று எப்பொழுது, எப்படி அறிந்துகொள்வது? இது அரசருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியவேண்டிய ஒன்றுதானே! உண்மையான நண்பரைப் பற்றி நமக்குத் துயரத்தால் கையறு நிலை வரும்போதுதான் அறிய இயலும்
View More சாணக்கிய நீதி – 3தியாகச்சுடர் வீர சாவர்க்கரின் தீர்க்கதரிசனம்
இந்தியாவின் விடுதலைக்காக உழைத்த வீரர்களுள் மிக அதிகமாக தியாகங்களை செய்தவர், வலிகளையும், இழப்புகளையும் அனுபவித்தவர் வீர சாவர்க்கர்… அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களால் அவருக்கு யாருக்காக நாம போராட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஹிந்து என்பவன் யார் என்ற சிந்தனை எழுந்தது. அந்தமானில் சிறைதண்டனை அனுபவித்து கொண்டிருக்கும்போது அவர் சிந்து நதியின் மறுபுறம் இருக்கும் நிலப்பரப்பை தன்னுடைய புண்ணிய பூமியாக தாய் நாடாக
யாரெல்லாம் கருதுகிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்ற கோட்பாட்டை எழுதினார். இதன் விரிவாக்கம் பின்னாளில் மிகப் பிரபலமாக இந்துத்துவம் என வளர்ச்சி அடைந்தது…
ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்
ஸ்மார்த்த என்ற சொல் அதன் நேர்ப்பொருளில் வேதநெறியைக் கடைப்பிடிக்கும் அனைவரையுமே குறிக்கும். ஆயினும் நடைமுறையில், தத்துவரீதியாக ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை ஏற்று, வைதிக சடங்குகளையும் நெறிகளையும் கடைப்பிடிக்கின்ற, வழிபாட்டு ரீதியாக சிவன், விஷ்ணு முதலான அனைத்து இந்து தெய்வங்களையும் பேதமின்றி வழிபடுபவர்களாக உள்ள பிராமணர்களைக் குறிப்பதாக இச்சொல் புழக்கத்தில் உள்ளது. பொதுவாக ஐயர் என்ற பின்னொட்டுடன் இவர்கள் அழைக்கப் படுகின்றனர்.. ஸ்மார்த்தர்கள் விபூதி அணிவது என்பது தொன்றுதொட்டு வருகின்ற வழக்கம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.. பாரதம் முழுவதும் உள்ள பிராமணர்களை எடுத்துக் கொண்டால், அதில் ஸ்மார்த்த என்ற வகையினரில் வருவோரே மிகப் பெரும்பான்மையினர்…
View More ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள ஏதாவது காரணம் இருக்க முடியுமா? – மரியா வர்த்
ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறக்காட்டா நிச்சயமாக ஒரு காரணமும் இருக்க முடியாது. அப்படியே பிறந்திருப்பினும், உங்களோட நம்பிக்கையின் சுய லாபங்களையும், இடர்களையும் சீர் தூக்கிப் பாருங்க. என்னையே எடுத்துக்குங்க…
எது உண்மைக்கு நெருக்கமானது, மனுசனுக்கு நன்மையானது: ஆனந்தப் பிரம்மமா, அகண்ட நரக நெருப்பா? ஆனா, சின்ன வயசுலேயே கிறிஸ்தவத்துக்கு வசக்கப் பட்டவர்கள், வயசாகியும் வாத்துக்களைப் போலக்கூடப் பரிணாம வளர்ச்சி அடையல்ல…
ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?
ஏதோ அரசியல் காரணத்திற்காக முஸ்லிம் ஆதரவு நிலை எடுக்கப் போனவர் படிப்படியாக groom செய்யப்பட்டு, மூளைச்சலவைக்கு ஆட்பட்டு, இஸ்லாம் என்னும் இருள் படுகுழியில் ஒரு தமிழ்ப்பெண் விழுந்திருக்கிறார் என்பது சகஜமான விஷயமல்ல, மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஒரு கட்டத்தில் மதம் மாறாவிட்டால் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லை என்ற அளவுக்கான அழுத்தம் அவருக்குத் தரப்பட்டிருக்கலாம்.. இஸ்லாமிய ஜிகாதி கழுகுகளால் கொத்திச் செல்லப் படும் இத்தகைய ஆபத்தான நிலையிலுள்ளவர்களுக்கு அந்தக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பு தரும் அளவுக்கு காவல்துறையும் மற்ற இந்து சமூக அமைப்புகளும் இங்கு இல்லை. குறிப்பாக இளம் ஆண், பெண்களுக்கு இந்துத் தரப்பிலிருந்து சரியான counseling தரும் அமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லை.
View More ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?கோதண்டத்தில் சிக்கிய தேரை [கவிதை]
ராம ராஜ்ஜிய முழக்கங்கள் கேட்டு நாட்டாரின் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது.. மற்றவரால் துயர் என்றால் உன்னை அழைக்கலாம்
உன்னால் ஒரு துயர் என்றால்..?முடிவற்று நீள்கிறது உன் அரசியல் சாசன அருளுரை.. தேரையின் உடல் ஊடுருவி கோதண்டம் தரை தொடும் நிமிடம் உனக்கு உரைக்கக்கூடும், அது அழுந்தப் பதிந்தது அதன் ஆன்மாவில் என்பது…
பாரதிய ஜனதா என்னும் பேரியக்கம்
1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா…
View More பாரதிய ஜனதா என்னும் பேரியக்கம்