நாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா? என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது.
View More ஆறுமுகநாவலரின் தமிழ் நடைCategory: ஆன்மிகம்
சிவநெறி – சமய அவிரோதம்
அவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை.
சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம். அதனால் வெற்றி தோல்வி அவனவன் கற்ற கல்விவலியினாலும் வாதத் திறமையினாலும், வாதிக்கேயன்றி மதத்துக்கில்லை.
பார்புகழ் கார்த்திகை தீபம்
கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம்.
View More பார்புகழ் கார்த்திகை தீபம்திருவாரூர் நான்மணிமாலை — 2
இவ்வளவு பெருமைகள் உடைய வரானாலும் திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மையுடையவர். அவர் கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரைப் புனிதமாக ஏற்று அதில் திருமஞ்சனம் செய்தார். அவர் ருசிபார்த்துக் கொடுத்த ஊனை மிகச்சிறந்த நைவேத்தியமாக ஏற்றார். அவர் செருப்புக்காலால் மிதித்ததையும் செம்மாந்து ஏற்றுக் கொண்டார்.
இது மட்டுமா அர்ஜுனன் வில்லால் அடித்ததையும் பொறுத்துக் கொண்டார். மதுரையில் வைகைக்கரை உடைத்தபோது பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டபோது அதையும் உவந்து ஏற்றுக்கொண்டார்…
திருவாரூர் நான்மணிமாலை -1
திருவாரூருக்குள் நுழையுமுன் அங்குள்ள அகழியைத் கடக்கவேண்டுமே! அந்த அகழி கடல் போல் தோற்றமளிக்கிறது. மேகங்கள் அந்த அகழியைக் கடல் என்று நினைத்து அதில் படிகின்றன. சிவந்த கண்களையுடைய யானைகளும் அந்த அகழியில் படிகின்றன. வீரர்கள் யானைக்கும் மேகங்களுக்கும் வேற்றுமை தெரியாமல் இரண்டையுமே சங்கிலிகளால் பிணைக்கிறார்கள். தாங்கள் படிந்த அகழியில் யானைகள் இருப்பதை அறிந்த மேகங்கள் விரைவாக நீங்குகின்றன. இந்த அகழியில் காகங்கள் கூட்டமாகப் பறக்கின்றன. இந்தக் காட்சி உக்கிரகுமாரபாண்டியன் மேகங்களைச் சிறை பிடித்து வந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டு கிறது குமரகுருபரருக்கு.
View More திருவாரூர் நான்மணிமாலை -1சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை
பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை… வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण – shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु – shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி… பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச் சைவர்கள் உணர்வார்கள். சைவ சமயக் குரவர்கள் போற்றிய மகத்தான மரபை, வெறும் சல்லிக்காசு அரசியல் லாபத்திற்காக அவதூறு செய்யும் பழ.கருப்பையா போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உணருங்கள்…
View More சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினைஆதிசங்கரர் படக்கதை — 4
உரையாடல்: வையவன் — படங்கள்: செந்தமிழ்
View More ஆதிசங்கரர் படக்கதை — 4ஆதிசங்கரர் படக்கதை — 3
இளம் சங்கரனின் வேண்டுகோளுக்கு பூர்ணாநதித்தெய்வம் இணங்கினாள். மறுநாளே, பூர்ணாநதி தன் போக்கை மாற்றிக்கொண்டது.
View More ஆதிசங்கரர் படக்கதை — 3அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி
1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்… 2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை சுவாமிஜி தொடங்கினார். இந்த இயக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது…
View More அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதிஆதிசங்கரர் படக்கதை — 2
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வையவன் உரையாடல் வடிவில் எழுதி, ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம் – பகுதி 2.
View More ஆதிசங்கரர் படக்கதை — 2