நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்

மலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும். அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்… சிவாபராதத்திலிருந்து உய்யவும் மீண்டும் கந்தர்வ நிலைபெற்று ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றல் பெறவும் சிவபெருமானின் பெருமைகளைப் பாடித் தோத்தரிக்க விரும்பினார் புட்பதந்தர். ஆனால் பெருமானின் பெருமைகளை எடுத்துப் புகழும் ஆற்றல் தனக்கு இல்லையே எனவும் வருந்தினார். இறைவன் அருள் புரிந்தார். சிவனின் மகிமைகளை எடுத்தோதிப் போற்றும் நூலாதலின் இது ‘சிவமஹிம்ந ஸ்தோத்திரம்’ எனப் பெயருடையதாயிற்று….

View More நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.

View More மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

தூற்றிப் போற்றினரே! -2

“பலாப்பழத்தை நாடும் ஈபோல, மான்போலும் பார்வையுடைய மாதரின் சிற்றின்பத்தை நான் நாடுகிறேன். அதன் காரணமாக நீ என்னைப் புறக்கணித்து விடாதே ஈசா!

            “அவ்வாறு கைவிட்டால் நான் உன்னை எவ்வாறெல்லாம் பழித்துரைப்பேன் தெரியுமா? நீ கடல் நஞ்சினை உண்டவன்; மழைமேகம் போலக் கறுத்த கண்டமுடையவன்; நல்லகுணம் இல்லாதவன் (குணம் இலி); என்னைப்போலும் மானிடன்; அறிவு குறைந்தவன் (தேய் மதியன்); வயதில் முதிர்ந்த பரதேசி என இவ்வாறெல்லாம் பழித்துப் பேசுவேன்,”

View More தூற்றிப் போற்றினரே! -2

இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

நாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின்  படமொன்றை மாட்டச்சொன்னார்.  இதை விரும்பாவிடினும்,  பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள்.  பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.  நாங்கள் உடனே குறுக்கிட்டோம்..
விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின….

View More இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

தூற்றிப் போற்றினரே! — 1

மூன்று பெண்கள் மூன்று அம்மானைக்காய்களைக் கொண்டு விளையாடும்போது, அதன் வேகத்திற்குப் பொருத்தமாகப் பாடல்களையும் அழகுறப் புனைந்து பாடுகிறார்கள். யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் சமயோசிதமாக விடை கூறுவது, யார் விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதில் இவர்களுக்குள் போட்டி!!

View More தூற்றிப் போற்றினரே! — 1

சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்…..

View More சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

உயிருண்ணி

சீவனைச் சிவன் விழுங்கிவிடுகின்றான். பின் சீவன் இருந்த இடத்தில் சிவனே இருக்கின்றான். இந்நிலையை ‘ஏகனாகி’ எனச் சிவஞானபோதம் கூறுகின்றது… விடைப்பாகனாகிய உமைபாகமதாயுடைய பெருமான், தம்முடைய உடம்பை என்றும் பிரியாதவனாகித் தம்முடைய வினைகளுக்குக் கேடுசெய்வதால், இனி தாம் எந்நாளும் களித்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன் என்று மகிழ்கின்றார் மாணிக்கவாசகர். பெற்ற இன்பமெல்லாம் சீவபோதத்தால் கிட்டுவன, சீவபோதம் முற்றும்நீங்கிச் சிவபோதமே மேலோங்கிநிற்கும் இந்நிலையில் சிவானந்தம் எத்தகையது என்றும் கூறமுடியவில்லை, இவ்வின்பம் என்னால் தாங்கவியலாப் பேரின்பம் என அப்பேரின்பப்  பெருக்கின் மாண்பினைக் கூறுகின்றார்….

View More உயிருண்ணி

யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2

சைவசித்தாந்தநெறிநின்று விலகாத சபாபதி நாவலர் சித்தாந்த ஆச்சார்யர்களைப் பெரிதும் போற்றிவந்துள்ளதுடன், அவர்கள் வழியிலேயே செயற்படவேண்டும் என்கிற ஆர்வமும் உடையவராக விளங்கியுள்ளார்.
சிதம்பர சபாநாதர் புராணம் எழுதிய நாவலர் புராண காவியங்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து, வைதீக காவிய தூஷண மறுப்பு என்கிற நூலும் எழுதியுள்ளார். ஆக, புராணபடன மரபை வளர்ப்பதிலும் நாவலரவர்கள் ஆறுமுகநாவலருக்குப்பின் கணிசமான பணியாற்றினார் எனக் கருதலாம்.

View More யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2

யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1

அவையோர் வியக்கும் உரைவன்மையாலும், அந்த உரையிடையே பிரவாகிக்கும் சைவசித்தாந்தக்கருத்துகளாலும், கிறிஸ்துவர்கள், நாத்தீகர்கள் போன்ற பிறதத்துவ நம்பிக்கையாளர்களும் மதத்தவர்களும் நாவடங்கி ஓடச்செய்யும் சொற்போர் வெற்றியும் மிக்கவராக சபாபதிநாவலர் விளங்கினார்.

அதனாலேயே இவருக்கு “நாவலர்” என்ற பட்டத்தைச் சுப்பிரமணிய யோகீந்திரர் வழங்கிக் கௌரவித்திருக்கிறார். நாவன்மை பொருந்தியவர்களாகவும், சைவசித்தாந்தச் சொற்பொழிவுகளை ஆற்றுவதில் தலைசிறந்தவர்களாகவும் விளங்குபவர்களுக்கே திருவாவடுதுறை ஆதீனம் “நாவலர்” என்ற அதியுயர் விருதினை வழங்கி கௌரவித்தது என்பதை நாம் அறியலாம்.

View More யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1

‘சும்மா இரு சொல் அற’

சும்மா இருத்தல் என்பது உலகியல் நோக்கில் புரிந்துகொள்ளப்படுமாயின் சும்மா வேலை செய்யாமல் இருப்பவரின் மனம் எங்கெங்கோ சுற்றிச் சுழலுவதைக் காணலாம். அதனால்தான் வேலை செய்யாமலும், பேசாமலும் இருக்கும் உலகியற் சும்மா இருத்தலை குறிப்பிடவில்லை. யோகநிலைச் சும்மா இருத்தலையே குறிப்பிடுகின்றேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அருணகிரியார் ‘சும்மா இரு, சொல் அற,’ என்று குறிப்பிடுகின்றார்… இலங்கையில் யாழ்ப்பாணத்தில்- அறுபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவாத்வைத யோக புருஷரான யோகர் சுவாமியின் சீடரான வெள்ளைக்கார சுவாமியார் ஒருவர் தமது கையில் தமிழில் ‘சும்மா இரு’ என்று பச்சை குத்தி வைத்திருந்தாராம்….

View More ‘சும்மா இரு சொல் அற’