வனப்பு மிகுந்த இந்த ஸ்ரீராம தரிசன காட்சியை கண்ணுற்ற தேசிகரின் உள்ளம் கசிந்து உருகுகிறது. தேசிகரும் இளைய பெருமாளைப் போலத்தான். உலக விவகாரங்கள் பற்றிய அறிவு ஏற்படும் முன்னரே அவருக்கு பக்தி, பரம்பொருள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. “த்வமேவமாதாச பிதாத்வமேவ” என்ற கீதா வாக்யத்தை அடியொற்றி பரம்பொருளான நாராயணனையே தாயாகவும் தந்தையாகவும் உளமாற நினைத்து உருகி பல பாசுரங்கள் இயற்றியிருக்கிறார்.
View More ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2Category: வைணவம்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
ஸ்ரீ மகாவீர வைபவம்
தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். காவிய நாயகனாகப் பார்த்தால் அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.. ராமன் என்கிற அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல. அங்கே ஒவ்வொரு கதை மாந்தரும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள். வாழ்க்கையின் உன்னதத்தை தெய்வமே இறங்கி வந்து வாழ்ந்து நமக்கு காட்டியதுதான் ராமாயணம். நல்லவனாக இருப்பது மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.
View More ஸ்ரீ மகாவீர வைபவம்பெரிய திருவடி
அனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு என்று பார்த்தோம். அப்படியானால் பெரிய திருவடி என்றொருவர் இருக்க வேண்டும். ஆமாம். வைணவ சம்பிரதாயங்களை அறிந்தவர்கள் கருடனுக்கே பெரிய திருவடி என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றறிவார்கள். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ என்று அருணகிரி நாதர் முருகன் திருவடி பட்ட இடங்களில் முதன்மை இடமாக வாகனத்தைக் குறிப்பிடுகிறார்.
View More பெரிய திருவடிசிறிய திருவடி
பாதங்கள் இவை என்னில்… இறைவனுடைய திருவடியைப் பாடுவதென்றால் ஒரு தனி மகிழ்ச்சி பிய்த்துக்…
View More சிறிய திருவடி