‘எல்லாம் காலம் காலமா இருக்குப்பா. என்ன மதமாற்றம் பண்ணி என்ன செய்யப் போறாங்க.. இந்த இந்துத்துவ பூச்சாண்டி எல்லாம் தேவை இல்லை’ போன்ற மேதாவி வாதங்கள்.. ‘ஈசனும் நானே, சிவலிங்கமும் வெள்ளமும் நானே, எனவே எதிலிருந்து எதை காப்பது’ என்றெல்லாம் வெத்து ஞானமரபுத்தனம் பேசி அன்னை விலகவில்லை. மாறாக தன்னைவிட மேலாக சிவலிங்கத்தை கருதி வெள்ளத்திலிருந்து அதைக் காப்பாற்ற அதை அணைத்துக் கொள்கிறாள். எனில், இந்து வெறுப்பு வெள்ளம், மதமாற்ற வெள்ளம், திராவிட அரசு இயந்திர வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நம் சமுதாயத்தையும், ஆலயங்களையும் பாதுகாக்க நாம் எப்படிப்பட்ட தியாகத்துக்கு நம்மை தயார் செய்ய வேண்டும்…
View More இந்துத்துவம் என்னும் ஆன்ம சாதனைசாணக்கிய நீதி – 9
கண்ணன் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அருச்சுனனுக்கு உறவாய், நண்பனாய், அறிவூட்டும் ஆசானாக இருந்தான்.
நாட்டு அதிபருக்காகத் தன் உடலை முன்வைத்து அவரைக் காப்பாற்றத் தயார நிலையில் தான் இருக்கத் துணியும் நல்லோரையே பல நாடுகளில் இரகசியப் போலீசாராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தீயவரோ, எக்காரணமும் இல்லாது, அவர் நாம் அவருடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு சமயமும் நமக்குத் தீங்கையே விளைவிப்பர்.
ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள இந்த நூல் பல விதங்களில் முக்கியமானது. மூன்று பகுதிகளாக இந்த நூல் அமைந்துள்ளது. பிரபத்தி நெறியை “அனைவரும் கேட்குமாறு” ராமானுஜர் கூறவில்லை, தேர்ந்தெடுத்த சில வைஷ்ணவர்களுக்கு மட்டுமே கூறினார் என்ற ரீதியில் சில சம்பிரதாயவாதிகள் விவரிப்பதை ஆசிரியர் கடுமையாக மறுக்கிறார். தமது தரப்பிற்கு அடுக்கடுக்காக ஆதாரங்களைத் தருகிறார். “வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தைத் தாமே மேல்விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே”.. ஆசார்யன் என்ற சொல் இராமானுசன் ஒருவனையே குறிக்கும், இராமானுசனைக் கைகாட்டும் பணியைச் செய்பவர்களே மற்ற அனைத்து ஆசாரியர்களும்…
View More ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்சாணக்கிய நீதி – 8
மாணவன் ஆசானிடம் கல்வி கற்கிறான். அது எக்கல்வியாக இருப்பினும் பரவாயில்லை. கல்வியை முழுவதும் கற்ற மாணவன்/வி திரும்பவும் ஆசிரியரை நோக்கிச் செல்லமாட்டான்/ள். அது தேவையும் இல்லை. இக்காலத்துக்கும் அது பொருந்தும். உயர்நிலைப் பள்ளியில் தேறியவர் அப்பள்ளிக்கு மீண்டும் மாணவராகச் செல்வதில்லை. கல்லூரிக்கே செல்கின்றனர்.
View More சாணக்கிய நீதி – 8சாணக்கிய நீதி – 7
அன்புக் காதலியான மனைவி, தன்னை உயிருக்குயிராகக் காதலிக்கும் கணவனைப் பிரிந்து கள்ளக் காதலன் வீட்டிற்குச் சென்றால், தன் கௌரவத்திற்கும், தன் குடும்பத்தின் நற்பெயருக்கும் இழுக்கு வந்து சேர்ந்ததே, ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோமே என்று அணுஅணுவாக மனதிற்குள் புழுங்கி இறந்துபோகவோ, அல்லாது தற்கொலை செய்துகொள்ளவோ, நேரிடும்.
View More சாணக்கிய நீதி – 7எட்டு புதிய இந்து அறிவியக்க நூல்கள் (சுவாசம் பதிப்பகம்)
2022ம் ஆண்டு தொடங்கப் பட்ட சுவாசம் பதிப்பகம் இதுவரை சுமார் 40 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் கீழ்க்கண்ட எட்டு புதிய இந்து அறிவியக்க நூல்களும் அடங்கும். தமிழர் பண்பாடு – குதர்க்கமான கேள்விகளும் தெளிவான பதில்களும் (பா.இந்துவன்), மகாபாரதம் மாபெரும் உரையாடல் (ஹரி கிருஷ்ணன்), மறைக்கப்படும் ஈ.வெ.ரா (ம.வெங்கடேசன்), குட்பை லெனின்: கம்யூனிச திரைப்படங்கள் (அருண் பிரபு) உள்ளிட்ட நூல்களை இங்கு அறிமுகப் படுத்துகிறோம்..
View More எட்டு புதிய இந்து அறிவியக்க நூல்கள் (சுவாசம் பதிப்பகம்)ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்
ஆர்யா என்ற சந்தத்தில் அமைந்த அழகும் இனிமையும் ததும்பும் இந்தத் துதிப்பாடல் ஆதிசங்கரர் அருளியது என்று சம்பிரதாயமாக கருதப்படுகிறது.. இளஞ்சூரியனென முகமலர் – கருணை ரசம் நிறைந்து ததும்பும் கண்கள் – உயிர்தருவோனைப் போற்றுவேன் – அழகிய மகிமையுடையோன் – அஞ்சனையின் பேறானோன்..
View More ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்சாணக்கிய நீதி – 6
மலையுச்சியிலிருந்து கீழே எட்டிப்பார்க்கத் தோன்றும், அதுவும் ஒருவர் செய்ய முடியாது என்பதைத் தான் செய்யவேண்டும் என்ற துணிவு இருக்கும். அதுதான் ‘இளங்கன்று பயமறியாது,’ என்ற பழமொழியும் உள்ளது.
மிகவும் மதிப்புள்ள எவையும் — கற்களானலும், முத்தானாலும், ஆன்றோரானாலும், மணமுள்ள மரமானாலும் சரி – அவை எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. ஆகவே, எதையும் ஒரு கட்டத்திற்குள் அடைக்கக்கூடாது – ஸ்டீரியோ டைப் செய்யக்கூடாது என்றே சொல்லாமல் சொல்கிறார்.
பாரதி(ய மொழிகள்) தினம்
தன் தாய்மொழியான தமிழின் இனிமையை “யாமறிந்த மொழிகளிலே” என்று பாடி வெளிப்படுத்திய பாரதிக்கு சம்ஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, மராட்டி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி போன்ற அன்னிய மொழிகளும் நன்கு தெரியும். ஆங்கிலத்தையும் அவர் வெறுத்தவரில்லை. .. நாட்டின் பிற மொழிகளை மதிப்பதோடு நேசிக்கும் அவரது உன்னத குணம்தான், அவரது பிறந்த தினத்தை (டிசம்பர்-11) பாரதிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவிக்கக் காரணமாய் அமைந்துள்ளது என்று கருதலாம். இதனை மேலும் அலசுவோம்..
View More பாரதி(ய மொழிகள்) தினம்குஜராத்: மோடி அலை ஓயாது!
அண்மையில் நடைபெற்ற இரு மாநில சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள், நாட்டு நலனை விரும்புவோருக்கு உவப்பானதாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக குஜராத்தில் பாஜக பெற்றுள்ள மாபெரும் வெற்றி, மோடி அலை ஓயவில்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதுவும் தேசியக் கண்ணோட்டத்தில் பாராட்டுக்குரிய முடிவாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் இந்த மாநிலத்தில், வெறும் 0.90 சதவீதம் வாக்குகள் வித்யாசத்தில் தான் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது…
View More குஜராத்: மோடி அலை ஓயாது!