தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-1

நம் கண்முன் எல்லோரும் அறிய, எல்லோரும் அதற்கு ஆளாகி அவதிப்பட நடந்தேறியுள்ள ஒரு அராஜகத்தை இல்லையெனச் சாதிக்கும் அதிகார பீடங்கள், அது நடக்காதது போலத் தலையங்கங்கள் எழுதும் முன்னணிப் பத்திரிகைகளை இன்று நாம் காண்கிறோம். இந்தப் பத்திரிகைகளில் ஒன்று, அதன் ராஜகம்பீர தோரணைக்காக முப்பது நாற்பதுகளில் இந்தியத் தலைவர்களால் புகழப்பட்டது. இன்று அது சில கட்சிகளின் ஃபாஸிஸ எதிர்வினைகளுக்கு பயந்து, தான் பார்க்காதது போல் பாவனை செய்கிறது…

View More தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-1

போகப் போகத் தெரியும்-15

இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எணணங்கள் மக்கள் மனதில் உருவாக்காதவரை தமிழர்களிடம் கிறித்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்குணர்ந்த கால்டுவெல் வடவர் மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதன் முதற்கட்டப் பணியாகத் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார். அவருக்கு முன்னர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்க திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

View More போகப் போகத் தெரியும்-15

காடென்னும் கடவுள்

சொந்த வீட்டில் எங்கள் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட மரங்களை இழந்ததற்காகச் சிறுவயதில் வருந்தாத நான், பெங்களூரில் சாலைகளை விரிவாக்குவதற்காகச் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் வலியை உணர்கிறேன்… “எப்படியாவது இந்த மரங்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை!” என்று ஊர்மக்கள் அனைவரும் ஒரேகுரலில் சொல்கின்றனர். அய்யாசாமி மாவட்ட நிர்வாகத்துக்குக் கூட ஒரு புகார் மனு அளித்திருப்பதாகக் கூறுகிறார்.

View More காடென்னும் கடவுள்

நகரம் நானூறு – 7

‘பசும்புல் தலைகாண்பரிது‘ என்று சொன்ன மைலாப்பூர்காரர் இப்போது மைலாப்பூருக்கு வந்து பார்த்தால் விசும்பின் துளி வீழ்ந்துகொண்டிருந்தாலும் பசும்புல் தலை காண்பது அரிது என்ற புது உண்மையை உணர்ந்துகொள்வார். பெங்களூரில் பத்துப் பதினைந்து அருகம்புல் கொண்ட கட்டு ஐந்து ரூபாய்க்கு விற்கிறது!

View More நகரம் நானூறு – 7

“சூப்பர் பிரெய்ன் யோகா”

”தோப்புக் கரணம்” நம்மூர் பள்ளிகளில் இது தண்டனை. அதையே அமேரிக்கர்கள் செய்தால் அது…

View More “சூப்பர் பிரெய்ன் யோகா”

‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்

இந்திப் படவுலகில் கான்களும் அவர்களுக்குப் பின்புலமாக இருக்கும் இஸ்லாமிய மாஃபியாக்களும்தான் பெரும்பான்மையினர் என்றும், தானும், அமிதாப் போன்ற வெகு சிலரும் மட்டுமே இந்து நடிகர்கள் என்றும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் மிக துணிவாக வெளிப்படையாக அந்த நடிகர் சொல்வது இந்திய சினிமாக்களில் நாம் எதிர்பார்க்க முடியாத ஒரு ஆச்சரியம்…

View More ‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்

ஒரு முட்டாள் கதையால் என்ன இலாபம்?

அந்த அரசாங்க அதிகாரியிடம் உடன் சென்றவர் சொன்னார், “இந்த மலைக்குன்றுக்கு மருத்துவாழ் மலை என்று பெயர். அனுமார் சிரஞ்சீவி மலையை கொண்டு வந்த போது ஒரு கல் இங்கே விழுந்ததாகவும் அதுதான் இந்த குன்று எனவும் ஐதீகம்.” அரசு அதிகாரியின் புருவங்கள் நெரிந்தன, “நம்மாளுங்க என்ன கதை விட்டாலும் நம்பிடுவாங்க பாருங்க, முட்டாப்பசங்க”

View More ஒரு முட்டாள் கதையால் என்ன இலாபம்?

போகப் போகத் தெரியும்-14

ஹெகல் உருவாக்கிய முரணியக்க முறையைக் கருவியாகக் கொண்டு வரலாற்றை அளந்தார் ஒருவர். அவரை நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் பொதுவுடமைக் கட்சியை ஏற்படுத்திய காரல் மார்க்ஸ். ஆனால் தோட்டத்துப் பச்சிலையைத் தோழர்கள் பயன்படுத்துவதில்லை. முரணியக்கப் பொருள்முதல் வாதத்திற்கான முதலீடு இந்தியாவிலிருந்து பெறப்பட்டது என்பதை இங்கிருக்கும் தோழர்கள் இன்னும் உணரவில்லை…

View More போகப் போகத் தெரியும்-14

’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா?

ராம்சேனெ அமைப்பு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறுதான். அதற்கு அவர்களைக் கைது செய்யவேண்டியதும் முறையே. ஆனால் பெண்கள் இத்தகைய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தவறு என எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை. நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான காங்கிரஸின் பிரமுகர் ரேணுகா செளதிரி ஒரு படி மேலே போய், அனைத்துப் பெண்களையும் “பப் பரோ” (மதுக்கடையை நிரப்பு என்று பொருள்!) என்று அறைகூவல் விடுத்துப் போராட்டம் நடத்தினார். இது எத்தகைய அநியாயம் என்பதை அவர் உணரவில்லை.

View More ’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா?