கொலைகாரக் கிறிஸ்தவம் – 30

ஆகஸ்ட் 15, 1534ல் இக்னேஷியர் சேவியரும், இன்னும் ஐந்து பேர்களும் ஃப்ரான்ஸின் செயிண்ட் டெனிஸ் சர்ச்சில் சந்தித்தார்கள். . அந்த நாளே இந்தியாவையும், பிற கிழக்கு நாடுகளின் தலைவிதியை எதிர்காலத்தில் நிர்ணயித்த நாளாகும். அன்றைக்கு அந்த சந்திப்பு நிகழாதிருந்தால், இன்றைய உலகம் வேறுவிதமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 30

கொலைகாரக் கிறிஸ்தவம் – 29

தமிழகத்தில் பள்ளிகளைத் மதமாற்றக் கருவிகளாகத் துவங்கி, படிக்கவரும் இளம் சிறுவர்களை மனதைத் திருப்பியும், மெதுவான அணுகுமுறைகளாலும் தமிழக ஹிந்துக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுப் பலரை புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதில் வெற்றி பெற்றார்கள், டேனிஷ் மிஷனரிகள். புதுச்சேரியில் மதம்மாறிய ஹிந்துக்களுக்குப் பதவிகளும், பட்டங்களும் அளிக்கப்பட்டன. ஹிந்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கான பல ஆதாரங்களும் இருக்கின்றன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 29

2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!

இந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான முழுமையான மதிப்பெண்களை மக்கள் வாரி வழங்கி இருக்கிறார்கள்… குஜராத், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட 15 மாநிலங்களில் முழுமையான வெற்றியை பாஜக ஈட்டி இருக்கிறது. சுமார் 200 தொகுதிகளில் 50 சதவிகிததுக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜகவின் ஒட்டுமொத்த வாக்குவிகிதமும் 38 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது….

View More 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!

கொலைகாரக் கிறிஸ்தவம் – 28

உல்லாலை ஆண்ட இன்னொரு ராணியான புக்காதேவியையும் தாக்கிய போர்ச்சுகீசியர்கள். மீண்டும் மங்களூரை அழித்தனர். அங்கிருந்து தப்பி அருகிலிருந்த மலைப்பகுதிக்குள் தப்பி ஒளிந்த புக்காதேவி இறுதியில் புக்காதேவி போர்ச்சுகீசியர்களுன் கோரிக்கைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க ஒப்புக் கொண்டாள்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 28

காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய பண்பாட்டு, வரலாற்று அறிவும் கூட கமல்ஹாசன் அளவுக்கோ, அல்லது அதைவிட சிறிதே சற்று மேலாகவோ தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால் தான், அவரது கேள்வி அடிப்படையிலேயே அபத்தமானது என்பதைக் கூட அழுத்தமாகக் கூறி அதை நிராகரிக்காமல் அதைவைத்து மாய்ந்து மாய்ந்து முட்டாள்தனமான “விவாதங்களை” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விநோதமான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளுடன் நான் எழுதிய ஹிந்து என்னும் சொல் என்ற எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்… அதிகாரபூர்வ பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்புகள் கமலுடைய ஹிந்து மத அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு, அதே வீச்சில் காந்தி கொலையையும் கோட்சேயையும் தாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்று சந்தேகமின்றி தெளிவுபடுத்தியுள்ளன…

View More காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

1621 பிப்ரவரி 2-ல் யாழ்ப்பாணத்தில் போர்ச்சுகீசிய உயரதிகாரியாகப் பதவியேற்ற கவர்னர் ஒலிவேராவின் ஆணையின்படி அன்றே நல்லூரின் புகழ்பெற்ற கந்தசுவாமி ஆலயம் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1622-ஆம் வருடம் இன்னொரு புகழ்பெற்ற பெருங்கோவிலான ஆரியச் சக்கரவர்த்தி ஆலயமும், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்

சம்பந்த பெருமான் தமது பதிகங்கள் ஒவ்வொன்றின் திருகடைக்காப்பிலும் அப்பதிகங்களை ஒதுவதால் ஆன்மாக்கள் பெற்றுய்யும் பலன்களை எடுத்துரைப்பார். பல பதிகங்களில், பயன்களை கூறினாலும், அவர் அருளிய நான்கு பதிகங்களில் மட்டும் “*ஆணைநமதே *” என்று திருகடைக்காப்பில் அருளிப்பாடுகின்றார்… நம்பியாண்டார் நம்பிகள் போல் அக்கால மக்களுக்கும் இவ்வார்த்தை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் தங்கள் பெயராகவே வைத்துக்கொண்டனர். பிரான் மலை கல்வெட்டில், இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் “ஆணை நமதென்ற பெருமாள்” என்று உள்ளது…

View More ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்

நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார். கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு எதையும் கோட்சே செய்யவில்லை என்பதையும் பார்க்கும்போது கோட்சே இதையெல்லாம் முன்பே திட்டமிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு இடத்தில்கூட கோட்சே கையில் பச்சைக் குத்தியிருந்தார் என்று அரசுத் தரப்போ, பத்திரிகைகளோ குற்றம் சாட்டவும்வில்லை; சொல்லவும்வில்லை; எழுதவுமில்லை. அதற்காக எந்த பிரிவிலும் வழக்குப்போடவில்லை…

View More நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

கொலைகாரக் கிறிஸ்தவம் – 26

போர்ச்சுகீசியர் ஒரு காலத்தில் கிழக்கின் பெரும்பாலான நாடுகளில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். கிழக்கின் பெரும்பகுதியை தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்திருந்தார்கள். எனினும் மதவெறியர்கள் அங்கு தலையெடுத்து பேயாட்டம் ஆடி ஓய்ந்த பிறகு போர்ச்சுகீசிய அரசு சுருங்கி கோவா, டையூ, டாமன் போன்ற இந்தியப் பகுதிகளிலும், சீனாவின் மக்காவ் பகுதிகளிலும் மட்டுமே ஆட்சி புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த நிலைக்குக் கட்டற்ற கிறிஸ்தவ மதவெறியே காரணம்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 26

ஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்

மரணபயமில்லை எனக்கு சாதிபேதமில்லை தந்தையில்லை எனக்கு
தாயில்லை
பிறப்புமில்லை
உறவில்லை நட்பில்லை
குருவில்லை சீடனுமில்லை
சிதானந்த ரூபச் சிவம் யான்
சிவம் யான்.
ஞானத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் அளிக்கும் இந்த மகத்தான பாடலை காலந்தோறும் வேதாந்திகள் பாடி வந்துள்ளனர். எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், இசை வடிவங்களில் இது வந்துள்ளது….

View More ஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்