அக்பரின் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று அடைத்துவைக்கப்பட்ட அத்தனை பெண்களும் வாழ்நாள் முழுவதும் சிறைக்கைதிகளைப்போல நடத்தப்பட்டு மூடிவைக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. ஒருமுறை உள்ளே நுழைந்த எந்தப் பெண்ணும் மீண்டும் உயிருடன் திரும்பவில்லை.
உடன்கட்டை ஏறும் பெண்ணைத் தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து கண்டு மகிழவருமாறு அக்பர் கிறிஸ்தவப் பாதிரிகளை அழைத்த விவரத்தை கிறிஸ்தவ பாதிரியான மான்சராட் பதிவு செய்திருக்கிறார்.
அக்பர் என்னும் கயவன் – 7
நீதித் துறை நடவடிக்கைகளான குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதும், சத்தியப் பிராமணம் எடுப்பதும், சாட்சிகளை விசாரிப்பதும் அக்பரின் அரசவையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன. தன் மனதில் தோன்றிய சித்திரவதைகளை குற்றவாளிகளின் மீது உபயோகிக்க ஒருபோதும் அக்பர் தயங்கியதில்லை. தனக்கு வரிவழங்காத விவசாயிகள் மது தனது படைகளை ஏவி, அவர்களைக் கசக்கிப் பிழிவதற்கும் அவர் பயன்படுத்தினார்.
View More அக்பர் என்னும் கயவன் – 7தேவிக்குகந்த நவராத்திரி – 3
‘ஸ்தனபாரத்தினால் மெல்லிடை சற்றே வளைந்து காண, உதயமாகும் காலைக் கதிரவன்போன்ற லேசான சிவந்த வண்ணத்தில் ஆடையினை அணிந்திருந்த அவள் மலர்க்கொத்துக்களைத் தாங்கிநிற்கும் கொடிபோலக் காணப்பட்டாள். கிழமலர்களாலான ஒரு மேகலை தன் இடையிலிருந்து நழுவும்போதெல்லாம் அதைச் சரிசெய்த வண்ணம் வந்தாள். ஒளிந்திருந்த மன்மதன் அவளைக் கண்ணுற்றதும் தான்கொண்ட நோக்கம் நிறைவேறும் எனத் தைரியமடைந்தான்.
View More தேவிக்குகந்த நவராத்திரி – 3தேவிக்குகந்த நவராத்திரி — 2
மீனாட்சி அம்மை திக்விஜயம் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறாள். எல்லா மன்னர்களையும் வென்றவள் இப்போது இமயமலையை அடைந்து அங்கிருக்கும் சிவகணங்களின் தலைவனைப் போருக்கழைக்கிறாள். தனது மணாளாகப் போகிறவர் அவரே என்பதை அவள் அறிந்திலள். அவளைத் தடுத்து நிறுத்த இயலாத நந்தி தேவர் சென்று சிவபிரானிடம் முறையீடு செய்ய, அவர் பொருள் செறிந்த சிறுமுறுவல் கொண்டு தாமே எழுந்து மீனாட்சியை எதிர் கொள்ள வருகிறார்.
View More தேவிக்குகந்த நவராத்திரி — 2அக்பர் என்னும் கயவன் – 6
கண்ணில் புகுந்த அம்பு மூளையைத் துளைத்ததில் ஹேமு அரை மயக்க நிலையில் இருந்தார். அந்த நிலையிலேய அவரைச் சிறுவனான அக்பரின் முன்னர் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அக்பர் வெறியுடன் தனது கையிலிருந்த குறுவாளால் (scimitar) ஹேமுவின் கழுத்தை அறுத்துக் கொல்கிறார்.
View More அக்பர் என்னும் கயவன் – 6தேவிக்குந்த நவராத்திரி — 1
வழக்கமான புலித்தோலும், பாம்பணிகளும் இல்லாமல், மல்லிகை மலர்மாலைகளும் வாசனைத்திரவியங்களும் அணிந்து பேரழகனாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமான்.
தேவாதிதேவன் பல்லக்கில் பவனிவருவதனால் வேதவிற்பன்னர்கள் வேதம், ருத்ரம் முதலியனவற்றை ஓதுகின்றனர்; பூ, பழம் ஆகிய நைவேத்தியங்கள் அடியார்களால் படைக்கப்படுகின்றன. ஆனால், ஈசனின் கவனம் இவை ஒன்றிலுமே இல்லை. அவர் வேறெதிலோ கருத்தைச் செலுத்தியபடி எங்கோ நோக்கியுள்ளார். ஏன் என்னஆயிற்றாம்? யாரும் இதை உணரவில்லை. கூட்டத்தில் ஒருவரே உணர்ந்து கொண்டார். ‘எம்பிரான் உள்ளம் அழகின் சிகரமான தன் மனையாள் பார்வதியிடம் சென்றுவிட்டது. அவளைச் சந்தித்து ஆசையுடன் அளவளாவும் ஆவலில் ஐயன் விரைந்து கொண்டிருக்கிறார்’ என்கிறார் அந்த அடியார்…
கையாலாகாதவனாகிப்போனேன்! — 6
அவர் அமெரிக்கா வருவதற்குமுன் அவரது தம்பி ஆறு வயதில் காலமாகி விட்டான் என்றும், என் மகனைப் பார்த்தால் அவன்நினைவு வருகிறது என்றும், ஆகவே என் மகனுக்கு வாங்கித் தருவது காலம்சென்ற தனது தம்பிக்கு வாங்கித் தருவதுபோல இருக்கிறது என்று மனம்விட்டு தனது உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொண்டார்.
திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம்சொல்ல மறுத்துவிட்டார். சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5
தர்க்கம் கொண்டு, ஒரு குறட்பாவை வைத்தே, ஸ்ரீவிஷ்ணுவின் 1000 நாமங்களுக்கு விளக்கமும், பத்து உபநிஷத் வாக்கியங்களுக்கு சமன்வயமும், பிரம்மசூத்ரங்களுக்கு பொருத்தமும் சொல்லலாம். திருவள்ளுவர் ஒரு வைதீகர் / வேதாந்தி /உத்தர மீமாம்ஸாகாரர் /விஶிஷ்ட அத்வைதி /ஸ்ரீவைணவர் என்று முடிக்கின்றேன்.
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி
தங்களது இடம், வாழ்வுரிமை, கலாச்சாரம் ஆகியவை பறிக்கப்படும் அபாயம் நேரும் காலத்தில் வேறு வழி இல்லாமல் ராக்கைன் மக்கள் ரொஹிங்கியாக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தவும், மறுத்தவர்களை மிரட்டவும் தாக்கவும் தொடங்கினார்கள். இதில் சிலர் இறந்து போக ரொஹிங்கியாக்கள் திரும்ப தாக்கியதில் ராக்கைன் மக்களும் சிலர் இறந்தார்கள். இதில் தான் பிரச்சனை பெரிதானது. புத்த மதம் அழிந்து இஸ்லாம் அந்த இடத்தில் பரவும் அபாயம் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியாக்கள் அந்த பகுதியில் இருந்தனர். நிலைமை அப்படியே இருக்குமா? வெடித்தது கலவரம்… உலகம் முழுதும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை, ”மதத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அதை இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது” என்று பிரச்சாரம் செய்யும் வெள்ளை முற்போக்கு கும்பல், பர்மாவின் ”பவுத்த தீவிரவாதம்” என்று பச்சையாக எழுதுகிறது. அதன் இந்திய கிளைகள் இங்குள்ள ஊடகங்களில் அதை அப்படியே வழிமொழிந்து வாந்தியெடுக்கின்றன…
View More மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணிஅக்பர் எனும் கயவன் – 5
கண்மூடித்தனமாக ஓப்பியமும், மதுவும் குடித்து எந்த நேரமும் மூளை மழுங்கி வெறியுடன் திரிந்த அக்பரின் மகன் ஜஹாங்கிர் தனக்குப் பிடிக்காதவ்ர்களுக்கு இழைத்த கொடுமைகள் கடவுளால் பொறுக்க இயலாதவை. அவருடன் இருந்த அவரது குறிப்பெழுத்தாளன் ஒருவன் அந்தப்புரத்திலிருந்த வேலைக்காரப் பெண் ஒருத்தியுடன் காதலில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜஹாங்கிர் அவனது தோலை உயிருடன் உரித்தார் என்கிற செய்தியைப் படிக்கையிலேயே குலை நடுங்கும். வின்செண்ட் ஸ்மித், “1591-ஆம் வருடம் அக்பர் கடுமையான வயிற்றுவலியால் துடித்தார். தன்னுடைய மகனான ஜஹாங்கிர்தான் தனக்கு விஷம் வைத்திருக்க வேண்டும் என அக்பர் சந்தேகப்பட்டார்” என்கிறார்…
View More அக்பர் எனும் கயவன் – 5