கடுமையான விமர்சனங்களை அவர் மீது கொண்டிருந்தாலும் கூட அவரது மறைவை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் கூட சொல்ல முடியாத ஒரு வேதனை ஏற்படுகிறது… 20-21ம் நூற்றாண்டுகளின் யுகசந்தியில் தமிழ்நாட்டை சுயலாப மக்கள் விரோத சுரண்டல்வாதிகளும், துவேஷம் வளர்க்கும் இனவாத அரசியல் கயவர்களும் சீரழித்து விடாமல் காத்த தேவதை ஜெயலலிதா… கறாரான அரசியல்வாதி, பாதரசம் போன்று நிலையின்றி அலைபாயும் ஆளுமை (mercurial personality), இரும்பை ஒத்த உறுதி, மிகவும் சிக்கலான நிர்வாகத்தையும் கையாளும் செயல்திறன் – இத்தகைய பிரமிப்பூட்டும் பண்புகளின் கலவையாக ஜெயலலிதா விளங்கினார்….
View More அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதாபிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை
வெற்றி பெற்றவர்களால் கட்டமைக்கப்படும் மாய பிம்பங்களை நம்பி அவர்களை நாயகர்களாகப் போற்றுவதும் வரலாற்றுப்…
View More பிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதைசிறை செய்த காதை — மணிமேகலை 23
விலக்கப்படவேண்டியவை ஐந்து என்று உலகில் உண்மைப் பொருளை நோக்கி ஆய்வுசெய்து உணர்ந்த ஆன்றோர்கள் கூறுகின்றனர். கள், பொய், களவு, கொலை மற்றும் காமமாகும். இவற்றுள் காமம் மற்ற நான்கையும் தனக்குள் கொண்டதாகும். காமத்தை நீக்கியவர்கள் மற்ற குற்றங்களை நீக்கியவர்களாவர். காமத்தை ஒழித்தவர்களே நிறைந்த தவமுடையவர்கள். காமத்தை நீக்காதவர்கள் பொறுக்கவியலாத துயரை அடைவார்கள்.
View More சிறை செய்த காதை — மணிமேகலை 23சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்
தேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார்… 1969 மாநாட்டில் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானது, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும் பலதரப்பட்ட மக்களிடமும் மிக சகஜமாகப் பழகி வந்தார்….
View More சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?
உயர் மதிப்புள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர்…
View More கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22
அறவண அடிகள் உனக்குப் பல தர்ம சிந்தனைகளைக் கூறுவார். தவத்தையும் தருமைத்தையும் சார்ந்து தோன்றும் பனிரெண்டு நிதானங்களைப் பற்றியும், பிறவியறுக்கும் தருமம்பற்றியும் தனக்கே உரியவகையில் கூறுவார். உலகமக்களின் பாவம் என்னும் இருள் அகல ஞாயிறுபோலத் தோன்றிய புத்தன் கூறிய அறநெறிகளைப் பாதுகாக்க வேண்டி பல பிறவிகள் எடுத்து இந்த நகரத்திலேயே தங்கியிருப்பேன். அவர் உன்னையும் உன் தாய் மாதவியையும் அவருடன் தங்கியிருக்கக் கோருவார். உங்களைப் பல்லாண்டு தவறின்றி வாழ வாழ்த்துவார். உன்னுடைய மனப்பாலான துறவறம் பூண்டு அறநெறி கற்கவேண்டும் என்பது நிறைவேற வாழ்த்துவார்
View More கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்
பயணம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தேன். சிலர் முதல் வாரத்திற்குப் பதிலாக இரண்டாவது மூன்றாவது வாரத்தில் இதைச் செய்திருக்கலாம் என்றுசொன்னார்களே தவிர எவரும் கண்டிக்கவோ மோடியை எதிர்க்கவோ இல்லை. இதை ஒரு மாபெரும் துணிவான புரட்சிகரமான நடவடிக்கை என்றே ஏகோபித்துப் பாராட்டினார்கள். வங்கிகளில் காத்திருத்தலை ஒரு தேச தேச சேவையாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள்… நிச்சயமாகப் பல எளிமையான வணிகர்களும் பொதுமக்களும் பாதிக்கப் பட்டிருப்பார்கள். சிலர் அவசரத்தேவைகளுக்காகத் தவித்திருப்பார்கள். இருந்தாலும் இங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப் பட்டவர்கள் அல்லர். கூடுமானவரை பரஸ்பர புரிதலுடன் அனுசரித்துச்செல்கிறார்கள். எவரும் எவரையும் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாக அனுமதிப்பதில்லை. பரஸ்பர உதவிகளின் மூலமாகக் கடந்து செல்கிறார்கள்… இந்த மாபெரும் பணியைக் கூடுமான வரையிலும் மக்களுக்கு இடர்பாடின்றி செயல் படுத்த உதவிக் கொண்டிருக்கும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும், அரசுப் பணியினருக்கும் நமதுபாராட்டுக்கள்….
View More கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்உதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21
தன் மனைவியின் வடிவத்திலிருந்த மணிமேகலை உதயகுமாரனுடன் பேசிக்கொண்டிருப்பதை விஞ்சையன் பார்த்தான். தன் மனைவி தன்னைப் பார்த்தும் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அசூயைகொண்டான்.
அவனோ அரசகுமாரன். இவளோ முத்துப்பல் மின்ன யௌவனம் காட்டும் இளமங்கை. அதனால்தான் அவள் தனது யானைத்தீ பசிப்பிணி மறைந்தபின்னும் வித்யாதர உலகிற்குத் திரும்பாமல் இந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறாள் போலும்! விஞ்சையனின் கோபமானது அக்னிக் கொழுந்தினைப்போலத் தழைத்து எரியத்தொடங்கியது.
கையாலாகாதவனாகிப் போனேன்! – 3
வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் என்னைப் பார்த்து ஏளனம் செய்தது. நான் புது புஷ்கோட்டுடனும், பாண்ட்டுடனும், ஒரு கோட்டையைக் கைப்பற்றிய வீரனின் பெருமிதம் முகத்தில் தெரிய கம்பீரப்பார்வையுடன் மரக்குதிரையில் சவாரி செய்யும் புகைப்படத்துடன், என் தங்கையுடன் நான் நிற்கும் படமும், என் தங்கை குதிரையின் கடிவாளக் கம்பைப் பிடித்துக்கொண்டு இருக்கும் படமும் என்னைப் பார்த்துச் சிரித்தன.
ஒவ்வொருமுறை அப்புகைப்படத்தைப் பார்க்கும்போதும், ஒரு கையாலாகாத உணர்வு என்னுள் எழுந்தாலும், என் மகிழ்ச்சியை என்னுள் நிரந்தரமாக்குவதுபோல அந்த புது புஷ்கோட்டின் புகைப்படம் ஒருங்கே தந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப் படம் இன்னும் என்னிடம் இருக்கிறது.
மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்
கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும்.
View More மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்