எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர்.
View More துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]பியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை
சேலத்தில் மேம்பாலப் பணியை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக சேவகர் பியூஷ்…
View More பியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கைசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]
எரிப்பவர்களும்,கொண்டுவந்து கிடத்துபவர்களும், குழிபறித்து அதில் இறந்த உடல்களை இடுவோரும், பள்ளத்தில் உடலைப் போடுபவர்களும், முதுமக்கள் தாழியில் போட்டுப் புதைக்க வருபவர்களும் இரவு-பகல் என்று பாராமல் வந்துபோய்க்கொண்டிருப்பதால் பலத்த ஓசை உடைய இடமாக அது இருந்தது… “இறந்த பிறகு உடலைப் பிரியும் உயிரானது, இப்பிறவியில்செய்த நன்மை-தீமைகளுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கும் என்பதை அறிந்தவள்தானே நீ? பின் எதற்குக் கலங்குகிறாய்? உயிர் உடலைவிட்டு நீங்கியபின், அதனை மீட்டுத்தரும் ஆற்றல்கொண்டவளல்ல நான். தெரிந்துகொள்…”
View More சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]கட்டாய ஓய்வு [சிறுகதை]
‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மாமா? இதைச் சொல்லத்தானே நானே வந்தேன்! நீங்கள்தான் இந்த மூடனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றான் கர்ணன். பிறகு துச்சாதனனின் கையில் இருந்த மதுக்குடுவையைப் பிடுங்கி தனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொண்டான். ‘நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன்’ என்று துரியோதனன் உறுமினான்…. சகுனி எதுவும் சொல்லாமல் ஆகாயத்தை நோக்கினார். நவமியின் நிலவை மேகங்கள் மறைத்திருந்தன. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் பிரகாசமாகத் தெரிந்தன. அனேகமாக எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. பனைமரக் கொடி பறந்த பீஷ்மரின் கூடாரத்தில் மட்டும் இன்னும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன…
View More கட்டாய ஓய்வு [சிறுகதை]மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]
“என்னவெல்லாம் கூறியிருப்பான்? கற்பில்லாதவள், தூய தவமற்றவள், வருணக்காப்பு இல்லாதவள், விலைமகள் என்று என்னவெல்லாம் கேவலப்படுத்தியிருப்பானா? இவனது பழிச்சொற்கள் எதையுமே பொருட்படுத்தாமல், என் மனம் ஏன் இவன்பால் செல்கிறது? இதுதான் காமத்தின் இயல்பா? நான் துறவறக் கோலம் பூண்டுள்ளது எல்லாம் வேடம்தானா? இதுதான் உண்மையென்றால், என்னுடைய நேர்மை அழியட்டும்!“
View More மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]
இன்று பல்வேறு திரைப்படங்களிலும் கதாநாயகனை அறிமுகம்செய்யும்போது அவனுடைய வீரபிரதாபத்துடன் அறிமுகப்படுத்துவதுபோல, உதயகுமாரனை ஒரு யானையை அடக்கும் நிகழ்ச்சியுடன் அறிமுகப்படுத்துகிறார். அதேபோல் தாமரைமீது துள்ளிய கயல்மீன் மீன்கொத்திப் பறவையிடம் சிக்காமல் தப்பியதைக் கூறுவதன்மூலம் மணிமேகலை உதயகுமாரன் கைகளுக்குச் சிக்காமல் தப்பிக்கப் போவதை குறிப்பால் உணர்த்துகிறார்.
View More பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]அண்டிவரும் ஐ.எஸ். அபாயம்
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் அண்மையில் மேற்கு…
View More அண்டிவரும் ஐ.எஸ். அபாயம்மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]
கணிகையர் இல்லங்களில் பிறந்த பெண்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒருவழி பாட்டி சித்திராபதி கூறுவதுபோல சகல கலைகளையும் கற்றுக்கொண்டு பேர்பெற்ற கணிகையாக ஆடம்பரவாழ்வு வாழலாம், அல்லது அம்மாவைப்போல இளம்வயதில் துறவு மேற்கொண்டு புத்தபிக்குணியாக சமயவிற்பன்னர்களுடன் ஊர் ஊராக மதம்பரப்பச் செல்லலாம். இரண்டுமே ஒரு பெண்ணிற்கு இரண்டு உச்சங்களைத்தொடும் வாழ்க்கை. இதற்கு இடையில் ஒரு வாழ்க்கை உள்ளது. உரியபருவத்தில் காதல்மணவாளன் ஒருவனைக் கைப்பிடித்து, வேதியர் வேள்விவளர்த்து, தீவலம்வந்து, இல்லறம்தொடங்கும் வாழ்க்கையே அது.
View More மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா
வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு… “உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் – உன் கருணை பெருமையோடு பேசப்படும் – என்னால்தான் உனக்குப் பெருமை – உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் – ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்… ”அலமேலு மங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு…”
View More வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையாஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]
வேந்தன்முன்பு ஆடப்படும் வேத்தியல் கூத்தும், பொதுமக்கள்முன்பு ஆடும் பொதுக்கூத்தும் நன்குகற்றவள் நீ. இசையும், எழுவகைத் தூக்குகளும், தாளக்கட்டும், யாழ்வகைகளும், அவற்றின் பண்வகைகளும் கற்றுத் தேர்ந்தவள் நீ. பல மொழிகளில் பாடல்வகைகள் அறிந்தவள் நீ. மத்தளமும், வேய்ங்குழலும் கற்றவள் நீ. பள்ளியறையில் என்னவிதமான அலங்காரம் செய்துகொள்ளவேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் நீ. ஒழுங்கமைவுடன்கூடிய பருவமாற்றங்களை உடையவள். உடலின் பல்வேறு உறுப்புகளால் செய்யும் அறுபத்துநான்கு கரணங்களை அழகாக அபிநயம்பிடிக்கத்தெரிந்தவள் நீ. மற்றவர் மனதில் இருப்பதை அறிந்து இதமான வார்த்தைகளைப் பேசத்தெரிந்தவள் நீ. மற்றவர்முன்பு தோன்றாமல் இருக்கத் தெரிந்தவள் நீ. ஓவியம்தீட்டுவதில் வல்லவள் நீ. மாலைதொடுக்கத்தெரிந்தவள் நீ. ஒவ்வொரு பொழுதிற்கும் ஏற்ப அழகாக அலங்காரம்செய்துகொள்பவள் நீ…
View More ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]