மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2

விழித்திருக்கும் நிலையிலும், கனவுலகில் இருக்கும் நிலையிலும் ஆத்மனின் அறிவு மாறுபாட்டை உடையதாகவே இருக்கிறது. அதாவது விருப்பு-வெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு, ஏழை-செல்வந்தர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, இவை எல்லாமே இருக்கின்றன.

ஸுஷுப்தி [ஆழ்உறக்க] நிலையில் இருக்கும்போது இந்த அறிவுக்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. எல்லாமே ஒன்றுதான். ஆக அறிவு அறிவாகவே, மாறுபாடுகள் இன்றி, வெளிஉலக அனுபவங்களால் ஏற்பட கலப்பு இல்லாமல் தூய அறிவாகவே உள்ளது. இப்படி இருக்கும் ஆத்மனை அறிவாளி என்றே மாண்டூக்ய உபநிஷத்து அறிவிக்கிறது….

View More மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2

பாகுபலி: திரைப்பார்வை

ஒவ்வொரு ஃப்ரேமிலும் நமது விழிகளை விரியவைக்கும் விஷுவல்கள் அலையலையாக வந்து மோதுகின்றன. மற்ற பலவீனங்களை எல்லாம் கூட, இந்தப் படத்தின் உண்மையான ஹீரோவான “காட்சி” பின்னுக்குத் தள்ளி விடுகிறது என்றே சொல்லவேண்டும். ‘சினிமா’ என்பது அடிப்படையில் *காட்சி ஊடகம்* என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார் ராஜமௌலி… இந்தப் படத்தில் வீர நாயகர்களின் சித்தரிப்பு இந்துத்துவத்தை மறைமுகமாக பிரசாரம் செய்கிறது என்று சில முற்போக்குகள் புலம்புகிறார்கள். இது நாள் வரை அமர் சித்ரகதா படக்கதைகளிலும், அம்புலிமாமாவிலும் நமது இதிகாச புராணங்களிலும் இல்லாத எந்த விஷயத்தை இந்தப் படம் காண்பித்து விட்டது என்று இப்படிக் குதிக்கிறார்கள் தெரியவில்லை….

View More பாகுபலி: திரைப்பார்வை

மாண்டூக்ய உபநிஷத்: எளிய விளக்கம் – 1

ஆனது, ஆகிக்கொண்டிருப்பது, ஆகப்போவது எல்லாமே ஓங்காரம்தான் என்று அழுத்திச் சொல்கிறது உபநிஷதம். பெரும் வெடிப்பு நிகழ்ந்தபின் இந்த அண்டம் தோன்றியது என்கிறார்கள் அறிவாளிகள். அப்படித் தோன்றிய அண்டம், பெரும் மாறுதலை அடைந்துகொண்டிருக்கும் அண்டம், இனி மாறப்போகும் அண்டம் எல்லாமே ஓங்காரம்தான் என்கிறது.. ஒரு சொல்லானது எல்லாமாக எப்படி இருக்க இயலும் என்ற எண்ணம் எழத்தான் செய்யும். அப்படியானால், அந்தச் சொல்லான ஓம் என்ன என்று அறிய ஆவல் கூடுமல்லவா?…

View More மாண்டூக்ய உபநிஷத்: எளிய விளக்கம் – 1

யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்

யாஹுப் சரண்டர் ஆகவில்லை அவனை கைதுதான் செய்தோம் என்கிறார் ராமன். அவனும் அவன் குடும்பமும் முழுக்க முழுக்க அந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது என்றும் சொல்கிறார்…. உண்மையில் ஒற்றர்களுக்கும் அவர்களுக்கு துப்பு கொடுக்கும் ஆட்க்களுக்கும் ஒரு விதமான பிணைப்பு விளக்க முடியாத மனரீதியான நட்பு ஏற்பட்டு விடுகிறது. அது ஒரு விதமான உளவியல் சிக்கலும் கூட.ஒற்றர்களினால் உத்தரவாதம் கொடுக்கப் பட்டு அழைத்து வரப் படும் அல்லது தகவல் பெறப்படும் குற்றவாளிகளை அந்த அரசாங்கங்கள் தண்டிப்பதும் கை விட்டு விடுவதும் புதிதல்ல. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அவனுக்கு சலுகைகளை அளிப்பதா வேண்டாமா என்பதை அரசாங்கமே முடிவு செய்யும்…

View More யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்

அஞ்சலி: அப்துல் கலாம்

ஒரு சாதனையாளராக கலாமின் வெற்றிக் கதை லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்களிடையே மகத்தான தன்னம்பிக்கையையும், கல்வியின் மீது பெரும் பற்றையும் உண்டாக்கியது நிதர்சனமான உண்மை… தன்னளவில் மிக அமைதியான, ஆன்மீகமான, மனிதநேயராக இருந்த கலாம் தான், ஒரு கர்மயோகியாக ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் தேசத்திற்காக உருவாக்கினார். கூடங்குளம் உள்ளிட்ட அனைத்து பிரசினைகளிலும், சமரசமின்றி நவீன அறிவியலின், “வளர்ச்சியின்” பக்கம் நின்று பேசினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவியாக, மிகக் குறைந்த தேவைகளுடன், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த கலாம் தான், அனைத்து மக்களும் அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் இந்தியா 2020ம் ஆண்டுக்குள் “வளர்ந்த நாடாக” ஆக வேண்டும் என்பதை ஒரு இலட்சியக் கனவாக வலியுறுத்தி வந்தார்…

View More அஞ்சலி: அப்துல் கலாம்

தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!

குடிமைப்பணி அதிகாரிகள் எங்கு பணி புரிந்தாலும், அவர்கள் மத்திய அரசுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்களே மத்திய- மாநில உறவுகளையும் உறுதிப்படுத்துபவர்கள். எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும். தற்போது தென்படும் விரிசல்கள் பெரும் விலகலாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு… ஜனநாயகத்தின் முதல் இரு தூண்களிடையே நடைபெறும் உரசல்கள் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது…

View More தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!

தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்

கோவிலுக்குள் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. கற்களால் கட்டப்பட்ட, தொன்மைவாய்ந்த பழைய கோவில். மேல்தளங்களில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தன. சில இடங்களில் தளங்கள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தன. கருவறை கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு அடி கீழே இருந்தது. சன்னதிக்குள் நுழையும் வழியில் சிமிட்டித்தரை… ஊருக்கு அருகாமையில் இருக்கிறதே, ஏன் யாரும் வருவதில்லை என்று கேட்டதற்கு, ஒரு விரக்திச் சிரிப்பையே பதிலாகத் தந்தார் அர்ச்சகர். முப்பது வயதிற்குள்தான் இருக்கும்.
தினமும் எட்டு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கோவிலுக்கு காலையில் வருபவர், மாலை பூஜை முடிந்து செல்லும்வரை வரை கோவிலிலேயே தங்கி விடுவதாகச் சொன்னார்….

View More தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்

மோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி

முதலில் எல்லா கிராமங்களுக்கும் அதாவது நாடு முழுவதும் 100 mbps இணைய வசதி தருவது. அடுத்தது, எலெக்ட்ரானிக் பொருட்களை பெருமளவில் இங்கேயே தயாரிப்பது. இந்த இரண்டையும் செய்துட்டால் என்னவெல்லாம் நடக்கும்?… இப்போது நாம் அரசையும் அரசின் தேவைகளும் அணுகும் முறை முழுவதுமாக மாறிவிடும். தொலை தூர கிராமங்களில் உள்ளுரிலேயே சான்றிதழ்கள், புகார்கள் அளிக்கும் நிலையங்களை இணைய வசதியுடனும் கணினி வசதியுடனும் நிறுவி விடலாம். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, தனியார் மருத்துவமனை அருகில் எது உள்ளது என ஆரம்பித்து, தரப்படும் மருந்து சரியானதா, தரமானதா என்று வரை பார்த்துவிட முடியும்….

View More மோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி

கம்பராமாயணம் – 66 : பகுதி 3

மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர். அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?…. இராவணனுடைய மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும், வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, அவனுடைய மார்பில் நுழைந்து, உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய புனிதம் நிறைந்த அம்பு…

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 3

கம்பராமாயணம் – 66 : பகுதி 2

இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின…. எந்தக் குலத்தில் பிறந்தவராயினும், அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும். (வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும், பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்….

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 2