சோனியா மன்மோகன் மாஃபியா நியமித்த அத்தனை கேரள ஜட்ஜுகளுமே ஊழல்வாதிகளாகவும் கறை படிந்தவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் கடவுளுக்கும் மேலான அதிகாரம் கொண்டவர்களாக நீதிபதிகள் இருக்கிறார்கள். முதலில் கோடிக்கணக்கான வழக்குகள் தேக்கத்தில் இருக்கும் பொழுது உடனடியாக மோடியின் அரசு இவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த லீவுகளை ரத்து செய்து இவர்களையெல்லாம் 24X7 ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். மக்களின் வரிப்பணம் இவர்கள் தின்று விட்டுத் தூங்குவதற்காக வீணாவது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். குரியனுக்கு அப்படியே கட்டாயமாக கேரளத்தில் போய்தான் ஈஸ்டர் கொண்டாட வேண்டும் என்று இருந்தால் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று சொல்லி விட்டுப் போயிருந்திருக்கலாம். தத்து தடுத்திருக்கப் போவதில்லை. சோனியா ஆட்சியில் பொத்திக் கொண்டிருந்து விட்டு இப்பொழுது மோடியின் ஆட்சியில் மட்டும் அவதூறு சொல்வது திட்டமிட்ட சதி. உள்நோக்கம் உடையது அயோக்கியத்தனமானது மட்டுமே….
View More சூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-2
இரண்டாவது சர்ச்சைக்கு வருவோம். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு என்ற சொல்லாடல் பற்றியது. திரு. பாண்டே கொடுத்த ஆதாரங்களைவிட அதிகளவு, வீரமணி எதிர்பார்த்த அளவு ஆதாரங்களை நாம் கொடுத்திருக்கிறோம். வீரமணி தன் பதவியை விட்டு விலகுவாரா? ஒருவேளை பதவியில் இருந்து விலகினாலும் விலகிவிடுவார். ஆனால் அந்தப் பதவியில் அவர் மகன் அன்பு வருவார் என்பதில் ஐயமில்லை…
View More தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-2தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-1
தலித்துகளில் உள்ள பல பிரிவுகளில் மாட்டிறைச்சி உணவு சாப்பிடுவது இல்லை. உதாரணமாக வள்ளுவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவது கிடையாது. ஆனால் அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று மாட்டிறைச்சி சாப்பிடுவது வைக்கப்படும்போது, எல்லா தலித்துகளும் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்ற ஆதிக்கசாதியின் பொதுப்புத்தியில் பதிந்துள்ளவற்றையே வீரமணியும் நிரூபிக்கிறார் என்பதைத் தவிர இந்தப் போராட்டத்தில் வேறெதுவும் கிடையாது. இதில் வேடிக்கை சில தலித் அமைப்புகள் ஆதரவு தருவதுதான். அவர்களை அண்ணல் அம்பேத்கர் ஆத்மா என்றும் மன்னிக்காது….
View More தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-1மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்
இப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது… மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது… முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா மத்திய கிழக்கிலே தன்னுடைய கையை கழுவும் பட்சத்திலே இது இன்னும் பெரும் பிரச்சினைகளை கொண்டுவரும். காரணம் இப்போது அமைதியாக இருக்கும் இஸ்ரேல்…
View More மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்ராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்
கயமையின், போலித் தனத்தின் திருவுருவாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மு.கருணாநிதி என்ற கிழவர் திரைக்கதை எழுதி, குட்டி பத்மினி போன்ற ஜோக்கர்களின் இயக்கத்தில் ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் வருகிறது என்பது தமிழ் நாட்டின் சாபக் கேடு… 1989ல் ராமானுஜாசாரியார் என்ற தமிழ்த் திரைப்படம் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. தூர்தர்ஷனில் இந்தப் படத்தை அப்போதே நான் பார்த்திருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் ஆதி சங்கராசார்யா மற்றும் இன்னும் சில விருது பெற்ற திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற கலைப்பட இயக்குனர் ஜி.வி.ஐயர் இந்தப் படத்தின் இயக்குனர்…
View More ராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்பிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ
மலேசியாவிலிரிந்து 1965ல் பிரிய வேண்டிய சூழல். ஏற்பட்டது. நிலையில்லாத அந்தக் காலகட்டத்தில் துணிந்து முடிவெடுத்து சிங்கப்பூர் என்னும் ஒரு தனி நாட்டை உருவாக்கினார் திரு லீ… ‘எனது சிங்கப்பூர் எந்த சித்தாந்தத்தின் படியும் உருவாக்கப்படவில்லை. பல முயற்சிகள் செய்தோம். சில வெற்றி கண்டன. சில தோல்வியுற்றன. நாட்டு மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடிய எந்த முயற்சியையும் செய்வதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை’, என்று சித்தாந்த ரீதியான கட்டுக்கள் எதுவும் இல்லாத ஒரு தலைவராகவும் அதே நேரத்தில் ஒரு பழுத்த யதார்த்த வாதியாகவும் திகழ்ந்தார் திரு.லீ…
View More பிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.
View More வளரும் பாரதத்தின் உலக மேலாண்மைஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மதவெறியை, சாதிவெறியை தூண்டுவிட்டு அரசியல் செய்கிறது என்று கொதிக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம்கள் அமைப்புகள், ஊடகங்கள்… கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான இவர்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. ஆனால் உண்மையிலேயே இவர்கள் இப்படித் தானா என்று கொஞ்சம் தேடிப் பார்க்கும்போது அவர்கள் போட்டிருக்கும் வேடம் முற்றாகக் கலைந்துவிடுகிறது… 2008ல் தினமலர் திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலை சிறுத்தைகள் இதழ் அலுவலகத்தில் புகுந்து கடும் வன்முறையில் ஈடுபட்டார்கள். விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எல்லா தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். தியேட்டர்கள் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.தமிழகம் முழுவதும் அராஜகம் நடந்தது….
View More இரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்ரிஷிமூலம் [சிறுகதை]
கண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் “தெரியும்” என்றான். சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான்….
View More ரிஷிமூலம் [சிறுகதை]‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?
தேர்தல் சமயத்தி;ல் புதிய தலைமுறை டி வி கம்பெனியின் ஓனர் பச்ச முத்து பா ஜ க கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். அப்பொழுது தேர்தலுக்கு முன்பாக இந்த டி வி ஒரு அயோக்கியத்தனம் செய்தது… கேவலமான பொறுக்கித்தனமான ரவுடித்தனத்தை வளர்க்கும் ஒரு டி வி இது. இதன் ஓனர் பச்சமுத்துவின் பேரில் ஏராளமான ஊழல் ,மற்றும் ரேப் புகார்கள் உள்ளன. அதற்காக அவரை விசாரிக்க சி பி ஐ அலுலவகத்திற்கு அழைத்த பொழுது இந்த மீடியா ஆட்கள் போய் அவரை வேறு எவரும் படம் எடுக்க முடியாத வண்ணம் மறைத்து ரவுடித்தனம் செய்தார்கள்…இந்த டி வியின் முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நபர்கள் அனைவருமே கடுமையான இந்து வெறுப்பு உடையவர்கள். கம்னியுஸ்டு மற்றும் திக நிலைப்பாடு உடையவர்கள். அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள். இவர்களினால் எப்படி நடுநிலையான நிகழ்ச்சிகளை அளிக்க முடியும்?…இவர்களின் பத்திரிகையில் முன்பு இணையத்தில் உள்ள பெண்களின் படங்களை எடுத்து நிர்வாணமாக்கி காமக் கதைகள் எழுதி அவர்களை மிரட்டிக் கொண்டிருந்த ஒரு பொறுக்கியைத்தான் நிருபராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்….
View More ‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?