வெ.சாமிநாத சர்மா அவர்கள் மணி அய்யாவிடம் தனது வாழ்நாளில் பேர் சொல்லும்படி 100 புத்தகங்களாவது எழுதி விடு என்றாராம். அதனை தாரக மந்திரமாக கொண்டு தரமான ஆய்வு புத்தகங்களை மட்டும் எழுதி வருபவர். சுமார் 80 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெ.சு.மணி ஐயா பல்கலை கழக வளாகங்களில் பேராசிரியராக பணிபுரிந்து கை நிறைய சம்பளம் வாங்கி வேலை செய்பவருமல்ல. அஞ்சல் துறையில் இரவு முழுவதும் கடிதங்கள் பிரிக்கும் வேலையை செய்து கொண்டு பகல் முழுவதும் சைக்கிள் மிதித்து நூலகம் தோறும் சென்று தேனீ போன்று உழைத்து கொண்டு வந்த புத்தகங்கள் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னேறுவதற்கு இவரது புத்தகங்கள் படிக்கல்லாய் திகழ்ந்தது…
View More அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணிTag: ஆய்வாளர்
இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?
‘ஒரு ரொமிலா தாப்பரை உருவாக்கியிருக்கிறீர்களா’ என கொக்கரிக்கிறார்கள் இடதுசாரிகள். இல்லை என்பதுதான் சந்தோசமான விசயம்.. அரசு அதிகார உதவியுடன் வெளிநாட்டு பல்கலைக்கு சென்று இந்திய வரலாற்றைப் படித்து அதை காலனிய-மார்க்சிய நோக்கில் மட்டுமே அணுகி தன்னை ஒரு அதிகார மையமாக மாற்றிய ஒரு ஆளுமையை இந்துத்துவம் உருவாக்கவில்லை. ஆனால் பீம்பெதகா குகைகளை கண்டுபிடித்து அவற்றுக்கு உலக குகையோவியங்களின் தொல்வரலாற்றில் சரியான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு வகங்கர் ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆசியாவின் மிகச் சிறந்த தொல்லியலாளர் என சர்வதேச தொல்லியலாளர்களால் அறியப்பட்ட பிரஜ் பஸி லால் இந்துத்துவர்… இந்துத்துவர்கள் உருவாக்கும் சிந்தனைகள் என்பது அவர்களின் வாழ்க்கைகளேதான். ‘களப்பணி’, ‘அறிவியக்கம்’ என்பது போன்ற பாகுபாடுகளை கேட்கும் போது துணுக்குற செய்கிறது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவும் தத்தோபந்த் தெங்கடிஜியும் தாணுலிங்க நாடாரும் சுவாமி சித்பவானந்தரும் செமினார் சிந்தனையாளர்களல்ல. அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்கள் சிந்தனைக்கும் கோடு கிழிக்க முடியாது…
View More இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?சிவமாக்கும் தெய்வம்
முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா உடனான தொடர்பு தமிழ்ஹிந்து இணையதளம் மூலமாகவே கிடைத்தது. எனது அனுபவங்களையும், பேராசிரியர் ஐயாவிடமிருந்து நான் கற்றவற்றின் பயன்களையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்… எனது நண்பர்கள் வட்டத்தில் பிள்ளைத்தமிழ் தொடர்பான செய்திகள் வேண்டுமெனில் என்னைத்தொடர்பு கொள்வது வழக்கம். இசை நிகழ்ச்சிகளில் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை யாருமே பாடுவதில்லை எனும் குறை எனக்கு இருந்து வந்தது…
View More சிவமாக்கும் தெய்வம்சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்
சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்…..
View More சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்திருப்பலி [சிறுகதை]
பலர் என்னை எச்சரித்ததுண்டு. போனவாரம் கூட மேலவீதி ஸ்ரீனிவாசன் சொன்னான், அவர் என்னை கிறிஸ்தவராக்க முயற்சி செய்வார் என்று. அதற்காகவே அவர் பழகுகிறார்… அது ஒரு போர்ப் பிரகடனம். அவர்கள் ஆன்மாக்களை அவர்களின் ஆத்ம ஆதாயத்துக்காக ஏசுவுக்கு வென்றெடுக்கும் சிலுவைப் போரின் பிரகடனம்… ஒயினையும் ரொட்டியையும் மறைவாக எடுத்துக் கொண்டு அக்குகைக்கு வந்தோம். யாரும் அறியா வண்ணம் இரகசியமாக உண்மையான உயிருள்ள தேவனை ஆராதித்தோம்.
View More திருப்பலி [சிறுகதை]சுமைதாங்கி [சிறுகதை]
என் தீஸிஸை அந்த ப்ராஜக்ட்டுடன் இணைத்தால் டாக்டரேட்டுக்கு டாக்டரேட்டுடன் உபகாரத் தொகையும் டாலர்களில் கிடைக்கும். என் தீஸிஸ் தலைப்புமே கூட ஃபாதர் சொன்னதுதான். நாட்டார்த் தாய்தெய்வங்களின் மேல்நிலையாக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில், மூன்று தென்மாவட்டங்களில்… நீங்க ‘சுடலை மோட்சம்’ சிறுகதை படிச்சிருக்கீங்கதானே?… ஒருவேளை இந்தப் பார்ப்பனர் அங்கிருந்த தலித் மக்களின் வழிபாட்டு முறையைச் சீண்டிப் பார்த்திருக்கலாம், அதனால் அவர்கள் இவருடைய பூணூலை அறுத்திருக்கலாம்…
View More சுமைதாங்கி [சிறுகதை]