ஒருவகையில் பொன்னியின் செல்வன் ஒரு “தமிழ் ஹாரி பாட்டர்” போல. சோழ சாம்ராஜ்ய வரலாற்றில் நிலவிய குழப்பத்தைக் களமாக்கி, ஒரு மாபெரும் காவியத்தன்மை கொண்ட நாவலை சிந்தித்தது கல்கியின் கூர்மையான வரலாற்று பிரக்ஞையையும், ஒரு கதாசிரியராக அவரது கற்பனை வளத்தையும் காட்டுகிறது.. ஒட்டுமொத்தமாக படம் சுவாரஸ்யமாக, ரசிக்கும்படியாக இருந்தது. சிற்சில போதாமைகள் தவிர்த்து பெரிய குறைகள், சொதப்பல்கள் எதுவும் இல்லை. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு குறை என்றால், இந்த மூன்று பாத்திரங்களைத் தவிர்த்து மற்றவைஅவ்வளவு சரியாக வெளிப்படவில்லை என்பது தான்…
View More பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வைTag: இந்தியத் திரைப்படங்கள்
பாகுபலி: திரைப்பார்வை
ஒவ்வொரு ஃப்ரேமிலும் நமது விழிகளை விரியவைக்கும் விஷுவல்கள் அலையலையாக வந்து மோதுகின்றன. மற்ற பலவீனங்களை எல்லாம் கூட, இந்தப் படத்தின் உண்மையான ஹீரோவான “காட்சி” பின்னுக்குத் தள்ளி விடுகிறது என்றே சொல்லவேண்டும். ‘சினிமா’ என்பது அடிப்படையில் *காட்சி ஊடகம்* என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார் ராஜமௌலி… இந்தப் படத்தில் வீர நாயகர்களின் சித்தரிப்பு இந்துத்துவத்தை மறைமுகமாக பிரசாரம் செய்கிறது என்று சில முற்போக்குகள் புலம்புகிறார்கள். இது நாள் வரை அமர் சித்ரகதா படக்கதைகளிலும், அம்புலிமாமாவிலும் நமது இதிகாச புராணங்களிலும் இல்லாத எந்த விஷயத்தை இந்தப் படம் காண்பித்து விட்டது என்று இப்படிக் குதிக்கிறார்கள் தெரியவில்லை….
View More பாகுபலி: திரைப்பார்வைமனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரைஉலகில்
இது நான் சென்னை வந்த புதிதில் நடந்த சங்கதி. இடையில் அவர் தமிழ்த் திரைப்பட ஒளிப் பதிவாளராக ஆகியிருந்தார் என்று நினைக்கிறேன்…. செழியன் தமிழ்த் திரையுலக யதார்த்தத்தையும் அதன் டாம்பீகத்தையும் வெறுமையையும் மிக நன்குணர்ந்தவராகவே எழுதியிருக்கிறார். இதையெல்லாம் எப்படி இவர் தமிழ்த் திரையுலகில் இருந்து கொண்டே எழுத முடிகிறது?…. எங்கு தொழில் நுட்பம் சொல்லப்படும், காட்சியாக்கப் படும் பொருளில் தன்னை மறைத்துக் கொள்ள வில்லையோ அந்த தொழில் நுட்பம் வெறும் ஜிகினா வேலை தான்… செழியன் ஒரு கலைஞன் கலை உணர்வு கொண்டவர். அதற்கு இப்புத்தகத்தின் பெரும் பகுதி சாட்சி. இப்புத்தகம் கலை உணர்வு கொண்ட சினிமா உலக மாணவர்கள் படிக்க வேண்டிய ஒன்று…
View More மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரைஉலகில்என் பார்வையில் தமிழ் சினிமா
தமிழ் சினிமா என்று சொல்லப்பட்ட, பேராசையால் உந்தப் பட்டு உருவெடுத்திருக்கும் வணிக கேளிக்கையில் தமிழும் இல்லை. சினிமாவும் இல்லை. அதில் இலக்கியமும் இல்லை. கலை என்று சொல்லக் கூடியதும் எதுவும் இல்லை. அது சந்தைக்கு தேவையான சரக்குகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. சுஜாதா சரியாகச் சொன்ன கனவுத் தொழிற்சாலை. ஆடுகளம், நான் கடவுள், எங்கேயும் எப்போதும் போன்றவை மரபான தமிழ் சினிமா சட்டகத்தையும் மறக்காமல் அதற்கான மசாலாவை தாளித்துக்கொண்டு, தாம் வித்தியாசமானவர்கள் என்று பேர் பண்ணிக் கொள்ளவும் ஆசைப்பட்ட முயற்சிகள்…. முற்றிலும் மாறிய, வறுமைப் பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு படத்தைப் பற்றி சொல்கிறேன். இது தமிழ் சினிமா கலாசாரம் எட்டாத ஒரு சிகரத்தில், நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தூர தேசத்தில் உள்ள விஷயம். மொழி ஒடியா, படத்தின் பெயர்….
View More என் பார்வையில் தமிழ் சினிமாசன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்
ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?… இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது….
View More சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)
படம் முழுக்க ரிச் ஆகத் தெரிய மெனக்கெட்டது வீண்போகவில்லை. எல்லா இடத்திலும் பிரம்மாண்டம். பிரம்மாண்டம் மட்டுமே.சாதாரனமான இடம் இப்படத்தில் வருவது பெருங்குடி குப்பைமேடு மட்டுமே. படம் முழுக்க அல்ட்ரா மாடர்னாகவே இருக்கிறது.
View More சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
அசாம் தீர்க்க முடியாத ஒரு சிக்கலில் மாநில அரசின், இந்திய அரசின் கையாலாகாத் தனமா, குறுகிய கால சுயலாபத்திற்காக, அசாமின், நாட்டின் சரித்திரத்தையே காவு கொடுத்துவரும் சோகத்தை இந்த சாதாரண அன்றாட வாழ்க்கைச் சித்திரத்தின் மூலம் சொல்லும் தைரியம் மணிராமுக்கு இருக்கிறதே ஆச்சரியம் தான்..ஆரவாரம் இல்லாது இந்த மாதிரி இன்றைய தமிழ் அரசியல் சமூக வாழ்க்கையை அப்பட்டமாக முன் வைக்கும் தைரியம் நம் தமிழ் நாட்டில் இல்லை. இனியும் வெகு காலத்துக்கு இராது என்று தான் தோன்றுகிறது
View More மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்