இருப்பதற்குள் வலிமை மிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரம் இந்திரஜித்திடம் உள்ளதால், முதலில் இராவணன் அவனை அனுப்பினான்… தூதனுக்குரிய தண்டனை எதுவானாலும் கொடுக்கலாம்; ஆனால் தூதனைக் கொல்வது கூடாது என்று விபீஷணன் சொன்னான்… தனக்கு வந்த கோபத்தால் எப்படி இருந்த ஊர் இப்படியாகிப் போனதே என்று ஹனுமன் மனதிற்குள் வருந்தினான்… ததிமுகாவின் வயதிற்கும் மதிப்புக் கொடுக்காமல் தன் பங்கிற்கு அங்கதனும் அவரை நையப்புடைத்து அடித்து நொறுக்கி விட்டான்… இதைத்தான் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் இல்லை என்பவர்கள் கூட ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார்கள்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21Tag: இராவணன்
இராமாயணத்தின் மூன்று தளங்கள்
ஜீவநதியின் பரமானந்தம் நோக்கிய நகர்வின் அழகிய சித்திரங்களே உலகின் உன்னதப் படைப்புகளில் ஒளிரும். இராமாயணம் ஒரு மகோன்னதப் படைப்பு… இராம வாழ்க்கையினை உன்னில் வடித்தெடுக்கும் போது உன் சீதா நலத்துக்கு அசோகவனம் நிச்சயம் உண்டு. இராவண அழிவிற்கும் ஸ்ரீராம ஜெயத்துக்கும அசோகவனத் திண்மை மிக முக்கியம்… உள்ளிருக்கும் தெய்வீகத்தை வாழ்க்கைப் பெருவெளியில் பிரகாசிக்கும் வண்ணம் வாழும் இலட்சிய வாழ்க்கைக்கு ஓர் ஒப்பற்ற உதாரணம் இராமசரிதம்…
View More இராமாயணத்தின் மூன்று தளங்கள்இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16
கோப முகத்துடனும், தூசியைக் கிளப்பும் வண்ணம் கால்களை உதைத்துக் கொண்டும் லக்ஷ்மணன் கிஷ்கிந்தா நோக்கி நடந்த நடையிலிருந்தே ஏதோ வேண்டாதது நடக்கலாம் என்று யூகித்த வானரர்கள் ஒதுங்கி நின்று அவனுக்கு வழி விட்டனர். குடித்துக்கொண்டும், அரசவையில் பேசிச் சிரித்துக்கொண்டும் அரண்மனையில் சிங்காதனத்தில் வீற்றிருந்த சுக்ரீவனுக்கு, லக்ஷ்மணன் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டதாக இளவரசன் அங்கதன் தெரிவித்தான். இதற்குள் விவரங்களைத் தெரிந்துகொண்ட அமைச்சர் அனுமானும் சுக்ரீவனை அமைதியாக இருக்குமாறும், லக்ஷ்மணன் கோபத்தைத் தூண்டிவிடாதவாறு பேசுமாறும், அவன் கோபத்திற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்குமாதலால் மன்னிக்க வேண்டிக்கேட்கவும் சொல்கிறான். மழைக்காலம் முடிந்தும் முன்பு அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சீதையைத் தேடும் வேலையை ஆரம்பிக்காது சுக்ரீவன் மந்த கதியில் இருப்பதாகவும் அனுமன் சொன்னான். கோட்டை வாயிலில் வெகுநேரம் காத்துக் கொண்டிருந்தும் கதவு திறக்கப்படாமல் இருக்கவே, பொறுமை இழந்த லக்ஷ்மணன் கோபத்தில் வில்லை எடுத்து அதன் நாண்களை முறுக்கி ஓசையைக் கிளப்பினான். அந்த சத்தத்தைக் கேட்ட சுக்ரீவனுக்கு வந்திருப்பவரின் நிலைமை புரிந்துவிட்டது.
View More இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 14
..அரசன் ஒருவனுக்கு எதை வேண்டுமானாலும் அழிக்கவும், மாற்றவும் சர்வ உரிமை இருக்கிறது. அப்படி இருந்தும் அவன் தவறு செய்தவர்களை மட்டும்தான் தண்டிக்கவேண்டும்; அதுவும் தவறுக்கு ஏற்றபடி கூடுதலோ குறைவோ இல்லாது தண்டனை அமையவேண்டும். அவனிடம் ஏகபோக உரிமை இருக்கிறது என்பதற்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது நியாயம் அல்ல. அரசன் மட்டுமல்ல, இந்த நீதி சமூகத்தில் எந்த விதமான உரிமைகளும் இல்லாதவர்களுக்கும் உள்ளதுதான். பிராமணர்கள் தினப்படி செய்யவேண்டிய சந்தியா வந்தனத்திலும், “சூர்யஸ்ச மாமன்யுஸ்ச மன்யுபதஸ்ச மன்யுக்ருதேப்யஹ பாபேப்யோ ரக்ஷந்தாம்” என்று கோபத்தினால் வரும் பாவச் செயல்களைச் செய்யாமல் தவிர்க்கக் கடவுளை வேண்டுவதாக வருகிறது. ..
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 14இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு – 13
..இராமர் தான் சொன்னதைச் செய்யும் உண்மையான மனிதர்; வெகு உயர்ந்த குணங்களைக் கொண்ட அவர் உடலாலும் உள்ளத்தாலும் மிகத் தூய மனிதர். கண்கள் அகலமாகவும் அழகாகவும், மற்றும் கைகைள் நீண்டதாயும் இருக்கும் அவர், அனைவரிடமும் உண்மையான அக்கறை கொண்ட நல்ல மனிதர். தனது என்று எதையும் நினைக்காமல், யார் எதைக் கேட்டாலும் அதைத் தயங்காது கொடுக்கும் வள்ளலாகிய அவர், பிறருடையது எதையும் விரும்பவும் மாட்டார்; அவர்களாகவே எதைக் கொடுத்தாலும் அதை வாங்கிக்கொள்ளவும் மாட்டார். அவர் என்றும் எப்போதும் உண்மையே பேசுபவர்; விளையாட்டுக்குக்கூட பொய் பேசமாட்டார்…
View More இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு – 13இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்
இலங்கையில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது… இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்… கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும்… இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது..
View More இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை
இராமனின் முன்னால் சீதையும், பின்னால் இலக்குவனும் நடந்திடும் காட்சியிலும் பண்பினிமைச் சுட்டுண்டு… இராவணனை இராவணனாகவும் இராமனை இராமனாகவும் ஆக்கிய அற்புத உரைகல் சீதாதேவி… ஆண்டுதோறும் இராமாயண அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் நன்முயற்சி இது.
View More அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமைஅன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி
தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம். ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான்.
அரக்க மகளான திரிசடையை ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, அன்னை என்று விளிக்கிறாள். என்ன காரணம்?…
View More அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி