உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு

“உலக வணிகத்தை, உலக இசையை, உலக உணவை, உலக பொழுது போக்கு அம்சங்களை, உலக செய்திகளை, உலக சினிமாக்களை, உலக அரசியலை உங்கள் வீட்டிற்கு அல்லது உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவது என்று சொல்லலாம் அல்லது இதே விடயங்களை, அதாவது உள்ளூர் தமிழக அரசியலை, உள்ளூர் கலை நிகழ்ச்சிகளை, உள்ளூர் சினிமாவை, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, உள்ளூர் உணவை உலகில் உங்கள் மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்வதே Globalisation of the Local ஆகும்…. உலகமயமாதலில் ஒவ்வொரு project ஐயும் எடுக்க நடக்கிற போட்டிகளில் இன்றைய நிலையில், எந்த நாடு அந்த project செய்வதற்கான ஒப்பந்தத்தைப் (contract ஐப்) பெறுகிறது என்பதைக் கணிக்க இயலவில்லை…உலகமயமாதல் அதிகாரத்தைக் குவிக்கிறது. அதிகாரத்தைக் கைமாறச் செய்கிறது. கலாச்சாரத்தைப் பரப்புகிறது. உலகமயமாதலின் முக்கியச் சிக்கலே Un Equally Rich ஆக மனிதர்களை மாற்றியுள்ளது என்பதே. நாடுகள், நிறுவனங்களைத் தாண்டி உலகமயமாக்கலில் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தனி நபரின் பங்களிப்பு இந்த நூற்றாண்டில் நடக்கும்…

View More உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு

திரௌபதியின் கேள்வி

அநியாயம் எனும் நெருப்பால் சுடப் பட்டு, துயரம் இழைக்கப் பட்டு, நீதிமான்களின் சபையில் வந்து தங்கள் உரிமைகளைக் கேட்டு முறையிடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள். அந்த முறையீட்டுக்கு பதிலளிக்காமல் இருப்பதோ, பொய்யாக பதிலுரைப்பதோ இரண்டுமே தரும துரோகம்…. எது தர்மம், எது அதர்மம் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? அரசாட்சியின் மூலமாக, சாஸ்திரங்களின் மூலமாக அந்த அதிகாரம் வழங்கப் பட்டவர்கள் முறை தவறும் போது, அநீதி இழைக்கும் போது, ஒரு சாமானியன் என்ன செய்வது?…. உலகமயமாக்கல் என்னும் பகடையாட்டத்தில் நாமே தேர்ந்தெடுத்த நமது அரசாங்கம், நம் ஒவ்வொருவரையும் பணயப் பொருளாக வைக்கும் போதெல்லாம் அந்தக் கேள்வி நம் முன் வந்து நிற்கிறது…

View More திரௌபதியின் கேள்வி

ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

நைஜீரியாவுக்கு நிகழ்ந்தது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை? … ஒவ்வொரு பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல்… போர்னியோ தீவு பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்… புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி…

View More ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

சீனா – விலகும் திரை: ஒரு பார்வை

சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை..

View More சீனா – விலகும் திரை: ஒரு பார்வை