முற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்

ஆதாரம் இல்லாத பொய்யான ஆபாச செய்திகளை இந்துத்துவ இயக்கத்தவர்களோடு தொடர்பு படுத்தி வெளியிடுவது, போலியான செய்திகளை ஆதாரமின்றி வெளியிடுவது உள்ளிட்ட கருத்து வேசித்தனத்தில் ஊறியவை ஊடகத்தில் ஊடுருவியிருக்கும் நச்சுக்கள். இவற்றை முற்போக்கு முத்திரைக்காகவும், மதசார்பின்மை மன நோய் காரணமாகவுமே செய்கிறார்கள் என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன் பின்னால் இருப்பது பிரமாண்டமான மத மாற்ற வியாபாரத்தின் கரங்கள்…. கர்நாடக பாஜகவினர் பார்த்த ஆபாச நடனம் என்ற பெயரில் வெளியிட்ட பொய் செய்தி, Kaமல ஹாசன் ராமனுஜர் பற்றி உதிர்த்த முத்துக்கள், அவரின் அருந்தவ புதல்வி என் தகப்பனார் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுக்கலாம் நான் கொடுக்க கூடாதா? என்று பெண்ணுரிமை பேசி கொடுத்துள்ள பேட்டி… கூட்டுக் குடும்பமாக இருந்தால், நுகர்வு பகிரப்பட்டு, குறைவான செலவில் வாழ்க்கை நடத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அழித்து, தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஊக்குவித்து, நுகர்வை பெருக்கி, குடும்ப அமைப்பை சிதைத்து விட்டார்கள் – எல்லாம் தங்கள் சந்தை லாப நோக்கங்களுக்காக. குடும்பங்களின் சிதைவால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் பெரும் நாடுகள் திணறிக் கொண்டிருப்பதை பாருங்கள்…. நித்தியானந்தா விவகாரம் முதல் ஆஷாராம் பாபு, காஞ்சி சங்கராச்சாரியர் உள்ளிட்ட விவகாரங்களில் ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் தினமும் கற்பழித்துக் கொண்டும், அனாதை ஆசிரமம் என்ற பெயரில் இளம் பெண்களை அயல் நாட்டு ஆண்களுக்கும், பாதிரிகளுக்கும் விருந்தாக்கி கொண்டிருக்கும் கிறிஸ்தவ “தொண்டு “ என்ற பெயரில் விபச்சாரம் செய்து கொண்டிருக்கும் சக்திகளை வெளிக்காட்ட ஒரு முயற்சியும் இருப்பதில்லை…. இவர்களுக்கு பெருமளவு பணமும், பரிசுப் பொருட்களும், பன்னாட்டு ஹோட்டல்களில் தங்குமிடமும், வெளிநாட்டு பயணமும், ஊடகங்களில் போதுமான கவனமும் கொடுக்கப் படுகின்றன. இப்போது நீங்கள் ஞாநி, அ.முத்துகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் என்ற புனைபெயர் கொண்ட சாகுல் அமீது இவர்களை எடுத்து கொள்ளுங்கள்….

View More முற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்

ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை

திருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார். போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்…. தமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்… இந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்…

View More ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை

காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்

இந்த சிலிண்டர் கட்டுப்பாடு வெறும் விலை வித்யாசம் மட்டும் தானா? காங்கிரஸின் சதி இதில் என்ன?… பேண்ட் வாசிப்பவனின் மந்திர இசைக்கு மயங்கி ஏமாளி எலிகள் மலையிலிருந்து விழுந்து மாய்த்துக்கொண்டதைப்போல, அயல் நாட்டு சோனியாவின் குரூரமான இசைக்குப் பின்னால் செய்வதறியாது சென்று கொண்டிருக்கிறது தேசம்… தினம் தினம் 42 லட்சம் இல்லங்களைச் சென்றடையும் சிலிண்டர்களின் 150% விலையேற்றம், மக்களிடம் மிக மோசமாக உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும்… அப்படியானால் இது எப்படி ஆம் ஆத்மியின் அரசு என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறீர்கள்? 523 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 6000-க்கும் மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆண்டுக்கு 3,00,000 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் எடுத்துக் கொள்கிறார்கள்…

View More காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்

மண்குடமும் பொன்குடமும்

கண் முன் நடந்த தினகரன் அலுவலக எரிப்பு வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டடனர். அப்படியானால், தினகரன் அலுவலகம் தன்னைத் தானே எரித்துக்கொண்டதா?… பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கலவரங்களில் சீக்கியர்கள் 2700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்… ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் வழக்குகள் தொடுப்பதும், ஆட்சி மாறியவுடன் அவை கைவிடப்படுவதையும் தமிழக மக்கள் தாராளமாகவே கண்டு வருகின்றனர்… குஜராத் நீதிமன்றங்களையே சந்தேகக் கண்ணுடன் விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் இப்போது அமைதியாக இருப்பது ஏன்?… வழக்குகள் மீது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படும் மனோவியல் நிர்பந்தங்களும் கூட கடுமையான தீர்ப்புகளுக்குக் காரணமாகி விடுகின்றன. தீர்ப்புகள் திருத்தப்படலாம்.

View More மண்குடமும் பொன்குடமும்

சக்தி கொடு! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்

உங்கள் வார்த்தைகளால் கோடிக்கணக்கான இளைஞர்கள் இனி பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். எனவே நான் செய்யும் சிறிய பிழையும் அவர்களை பெரும் ஏமாற்றமடைய செய்யும்… இவர்களால் தங்கள் மீது அவதூறுகள் வீசப்படுமோ உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்களோ என்று எனக்கு அச்சமாகவே உள்ளது.

View More சக்தி கொடு! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3

தீர்ப்பு வெளியானவுடனேயே என்.டி.டி.வி தனது வேலையைத் துவக்கிவிட்டது. பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவானின் பேட்டி பலமுறை ஒளிபரப்பப்பட்டது. அவர்தான் ‘கட்டப் பஞ்சாயத்து’ பிரசாரத்தைத் துவக்கிவைத்தார்.[…]எத்தனை முறை ஒரே செக்யூலரிச பொய்யைச் சொன்னாலும் அதனால் இனி எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஆயினும் இதனை நமது அபத்த ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டு பரப்புவது ஏன்?

View More அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3

இரு பெண்களின் கதை

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது…. படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.

View More இரு பெண்களின் கதை