தார் அல் இஸ்லாம் தேசத்துக்குச் சென்றால்
இந்துஸ்தானில் வாழும்
இஸ்லாமிய நண்பருக்கு நினைவுப் பரிசாக
என்ன வாங்கிவரலாம் என்ற சிந்தனை
திடீரென்று வந்தது…
கன்னங்கரிய சவக்கிடங்கு போர்வை போன்ற
கண்ணுக்கு மட்டும் சல்லாத்துணிபோல் திரையிடப்பட்ட
பர்தாவை வாங்கிவரலாம் என்று நினைத்தேன்
ஆனால்….
புறச் சமயத்தினரை
தரையில் வரிசையாகப் படுக்கவைத்துச்
சுட்டுக் கொல்லலாம்
அப்போது
அவர்கள் கண்களில் தெரியும்
மரண பயத்தைக் கவிதையாக்கலாம்..
Tag: கவிதைகள்
கம்பனும் காளிதாசனும்
யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி எழுமானால், கைவிரல்களை மொத்தத்தையும் மடக்கி, முதலில் சுண்டுவிரலைப் பிரித்தவாறு, ‘காளிதாசன்’ என்ற பெயரை உச்சரித்தால், அடுத்து வருவது அநாமிகா! (பெயரிலி, மோதிரவிரல் என்று இரு பொருள் இச்சொல்லுக்கு உண்டு). காளிதாசனுக்குப் பிறகு, கவிஞன் என்று பெயர் சொல்லவே யாருமில்லை என்ற பொருள்பட அமைந்த இந்த ஸ்லோகம், தெரிந்தோ தெரியாமலோ கம்பனால் இந்திரஜித்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. It is a pleasant coincidence.. வால்மீகியை ஒட்டியும் வெட்டியும் மாற்றியும் காளிதாசன் செய்திருக்கும் சித்திர வேலைப்பாடுகளில் பல, கம்பனுடைய காவிய அமைப்புக்கு வித்தாக இருந்திருக்கின்றன என்ற செய்தியையே தமிழகத்தில் இதுவரையில் யாரும் எடுத்து முன்வைத்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒருசில எடுத்துக் காட்டுகளையும் காண்போம்…
View More கம்பனும் காளிதாசனும்தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது
தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டுவரும் சில நண்பர்களுக்கு எனது பரிந்துரை (நூலகத்தில் போய் புத்தகம் படிப்பதெல்லாம் ruled out, வாங்கித் தான் வாசிக்க வேண்டும் என்பதால், ‘வாங்கி’ படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டு)… உங்கள் ஒட்டுமொத்த தமிழ் நவீன இலக்கிய வாசிப்புக்கு இந்த நூலை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். நூலின் கடைசியில் தமிழின் மிகச்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வணிக இலக்கியம் எனப் பட்டியல்கள் உள்ளன.. திரும்பத் திரும்ப வாசித்துத் தீரவேண்டிய, பல எழுத்தாளர்களின் கதைகள் ஒரே புத்தகத்தில் அடங்கிய தொகுப்பு இது… கவிதைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா தெரியவில்லை. ஆனால், கவிதைகளை வாசித்து ரசிக்க இயலாத இலக்கிய வாசிப்பு முழுமையானதல்ல, சொல்லப் போனால், ரொம்பவே அரைகுறையானது…
View More தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவதுபிள்ளைத்தமிழும் பியாஜெட்டும்
அண்மையில் சில பிரிட்டிஷ் நாட்டுப்புறவியலாளர்கள் புகழ்பெற்ற ‘London Bridge’ என்கிற ‘சிறுவர்’ பாடல் குறித்து சர்ச்சைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். புகழ்பெற்ற லண்டன் பாலம் கட்டப்பட்ட போது அங்கு நரபலிகள் கொடுக்கப்பட்டதன் நினைவாகத்தான் இந்த பாடல் எழுதப்பட்டது என்றும் மிக அண்மையில் கூட அங்கே நரபலிகள் கொடுக்கப்பட்டதாகவும் ஒருவர் எழுத மற்றொருவர் அதை மறுக்க… ஆனால் பாட்டின் சாராம்சம் ஒரு உண்மையான அல்லது போலியான நரபலி நினைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. நாம் நம் குழந்தைகளுக்கு இந்த புத்திசாலித்தனமான விஷயங்களைத்தான் நாகரிகம் என்கிற பெயரில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்…
View More பிள்ளைத்தமிழும் பியாஜெட்டும்