முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்? கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா? நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா? கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல…
View More ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்Tag: காவல்துறையின் அத்துமீறல்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது தெரிந்து இருந்தவர்களே. அதாவது, மக்கள் அதிகாரம் போன்ற வன்முறை போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களே. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் காவலர்கள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் வெகு கவனமாக தூத்துக்குடி பக்கமே தலைவைக்காமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். காவலர்கள் அப்பாவி மக்களிடம் எதுவும் சொல்லவில்லை… வன்முறைப் போராளிகள் ஆயுதங்களுடன் இருந்திராதபோது சுட்டுக் கொன்றது நிச்சயம் மிக மிகத் தவறு. அவர்கள் பொதுச் சொத்துக்கு தீங்கு விளைவித்தபோதிலும் அரசுப் பணியாளர்களுக்கு துன்பங்கள் விளைவித்தபோதிலும் ஆயுதம் இல்லாத ஒருவரை அரசு எந்திரம் சுட்டுக் கொன்றது நிச்சயம் தவறுதான்…
View More தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்
இன்னமும் 100 பேர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக- அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்… ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் 15 அமைச்சர்களை மாற்றுவதென்பது, ஒட்டுமொத்த அமைச்சரவையின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதாகவே உள்ளது… உளவுத்துறைக்கு அமைச்சர்கள் குறித்த தவறான தகவல்களை போட்டியாளர்கள் தருவதாகவும் தகவல்கள் உண்டு… பதவியில் இல்லாதவர்களே நிம்மதியாக இருக்க முடியும் என்ற சூழல் தமிழகத்தில்… காமராஜர் அமைச்சரவையில் அரசியல் நடத்தவில்லை… காமராஜர் ஆட்சி என்பது ஒரு கனவுச்சொல்லாக தமிழகத்தில் நிலைபெற்றிருப்பது அதனால்தான்…
View More தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்பரமக்குடி முதல் பாடசாலை வரை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது…‘பாரம்பரிய’ வேத பாடசாலைகள் வேதம் ஓதும் உரிமையை தலித்துகளுக்கு மறுப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?
View More பரமக்குடி முதல் பாடசாலை வரைதர்ம யுத்தம் வென்றது!
‘ராம்தேவுக்கு நேர்ந்த கதி ஹசாரேவுக்கும் ஏற்படும்’ என்ற காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தில் இறங்கினார் ஹசாரே. உண்ணாவிரதம் துவங்கும் முன்னரே கைது செய்யப் பட்டார். அரசு வேறு வழியின்றி பணிந்த பின் தனது அறப்போராட்டத்தைத் தொடர்கிறார் [..] ஹசாரேவின் தர்ம யுத்தம் இறுதியில் வெல்வது நிச்சயம். ஜனலோக்பால் சட்டத்துடன் நின்றுவிடாமல், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடான பாரதத்தைக் காப்பாற்ற, ஊழல் மயமான ஐ.மு.கூட்டணி அரசை வீழ்த்தவும் ஹசாரே முன்வர வேண்டும் [..]
View More தர்ம யுத்தம் வென்றது!