போரை உருவாக்கி இறையாண்மை குறையும் போது திருச்சபையின் தூதர்கள் நற்சேதியுடன் போய் கதிகலங்கிப்போயிருக்கும் மக்களை மதம் மாற்றம் செய்வது ஒரு சர்வதேச தொழில்நுட்பமாக மாறிப்போயுள்ளது… வாத்திகனின் பணபலம், செல்வாக்கு இங்கு எல்லோரையும் விலைக்கு வாங்கிவிட்டது என்று தெரிகிறது…இதனுடைய ஒரு நீட்சியாகவேதான் தமிழ்ப்பாதிரிகளின் இச்செயல்களை நான் காண்கிறேன். உண்மையான தமிழ்ப்பிடிப்புள்ள ஒரு தமிழன், தமிழின் வேர்களை சொந்த மண்ணில் தேடுவானே தவிர வேற்று மண்ணில் தேடமாட்டான்.. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்யுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றமகர்க்கு’ என்று எழுதிய வள்ளுவனை, செய்நன்றி மறந்த தோமையரின் சீடராக்க தமிழ் பற்றுள்ள ஒரு பாதிரியால் எப்படி முடிந்தது?
View More ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம்Tag: கிறிஸ்துவம்
அந்த அடக்குமுறையாளர்கள் !
மூலம்: தருண் விஜய், மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்
நல்ல நோக்கங்களுடைய நமது அன்பிற்குரிய பல ஹிந்துக்கள், சிறிதும் வெட்கமில்லாமல், தாங்கள் ஒரு கிருத்துவ பள்ளியில் படித்திருந்தாலும், கிருத்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று பல முறை பீற்றிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மேன்மையாளர்களின் பட்டியலில் எனது பேரையும் நான் சேர்க்கச் சொல்லவா? நான் ஒரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன். எனது ஆசிரியர்களான ஜேக்கப் சார், மற்றும் ஃபாதர் பெஞ்சமின் மீது அன்பு கொண்டுள்ளேன். ஆனால், அவ்வன்பு, “சார், ஒரு ஹிந்துவாக, நான் மதிக்கிற, நீங்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரால் சிலர் செய்யும் செயல்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறுவதைத் தடுக்கலாமா?ஜனநாயகமும் பன்மையும் இணைந்து நமது நரம்பில் ஓடும்போது, அந்த ஒரு சிலரின் அடக்குமுறையை எதிர்க்க நாம் ஏன் தயங்குகிறோம்?
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?
கர்னாடகாவில் கடந்த சில நாட்களாக மதக் கலவரம் தலை தூக்கியுள்ளது. கிறித்தவ தேவாலயங்கள்…
View More கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!
பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாய் மதம் திரும்பும் விழாவில் 10…
View More அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி
ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்த எண்பது வயது துறவி, சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி மற்றும் அவர் நடத்திவந்த ஆசிரமத்தில் பயிலும் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று இரவு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்…. கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட் கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தவர்… மதவெறியாலும் மாவோயிஸ வெறியாலும் மானுடத்தன்மையை இழந்த இருட்சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட நம் சகோதர-சகோதரிகள் அனைவரது ஆன்மாக்களும் நற்கதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறது தமிழ்இந்து.காம்.
View More சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலிசென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்
“தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை ‘சைத்தானின் பிள்ளை’ என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் ‘தமிழர் சமய மாநாடு’ எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது…” –
தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத் தொடர்பு கொண்டு அளித்த தகவல்களின் அடிப்படையில் இது பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகளைத் தொகுத்து அளிக்கிறோம்.
தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்
தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்று சொன்னால் என்ன ஆகிவிடும். ஏன் நாம் இதனை எதிர்க்க வேண்டும்? என சிலர் கேட்கலாம். இந்த தலைமுறையின் தலை சிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகன் இந்த முயற்சிகளின் பின்னால் இருக்கும் வலைப்பின்னல்களை வெளிக்கொணர்கிறார்.
ஜெயமோகனின் தெளிவான கட்டுரையை அவருடைய வலைப்பதிவில் வாசிக்கலாம்.
View More தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!
இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு, தோமா வந்ததாகக் கூறுகிற கத்தோலிக்க சபையாரும் கிறிஸ்தவப் பெருமக்களும் அதனைத் தங்கள் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே கூறுவார்களெனில் அதில் கேள்வி கேட்க எவ்வித உரிமையும் எவருக்கும் இல்லை. ஆனால் அதனை வரலாறாக முன்வைத்து அவரைக் கொன்றதாக இந்துக்கள்மீது குற்றம் சாட்டுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் கூறுவதன் வரலாற்றுத்தன்மையை ஆராய்வது ஒவ்வொரு தமிழ்-இந்துவின் கடமையாகிறது…
View More புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!