பாரம்பரியமும் பழமையும் வாய்ந்த சுவரோவியங்கள் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு இருக்கின்றன என்று ஒரு பட்டியல்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வீடூர் ஆதிநாதர் கோவில், குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோவில், நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோவில், தஞ்சைப் பெரிய கோவில், திருக்குறுங்குடி நின்றநம்பி கோவில், முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம், செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவில்….
View More பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்Tag: கோயில் ஓவியங்கள்
இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்
கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்… வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்… கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்….அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம்….
View More இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்
கோயிலை பல ஆண்டு காலம் பராமரிக்காமல் நாசம் செய்து விட்டு பின்னர் திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் பல இலட்சம் செலவு செய்து வண்ண பூச்சு செய்துள்ளனர். வருடத்திற்கு ஒரு சில ஆயிரங்கள் செலவு செய்து ப்ராமரித்திருந்தாலே போதும், இந்த மோசமான நிலைக்கு கோபுரம் சென்று இருக்காது… ஒரு காருக்கு போடும் துணியோ அல்லது ஒரு தார்பாலினை உபயோகித்தோ மூடிவைத்து பல நூறு வருடங்கள் பழைய கலைப் பொக்கிஷமான மரத் தேரைப் பாதுகாத்திருக்கலாம். இதைக் கூட செய்யாமல் தேரை முற்றிலும் அழிய விட்டிருக்கிறார்கள்… கோயிலுக்கு 100 ஏக்கர் அளவில் நில சொத்து உள்ளது. இருந்தும் எந்த பயனும் இல்லை. அனைத்து சொத்துகளும் திராவிட இயக்க அரசியல் கொள்ளையர்கள் கையில்…
View More அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1
கருங்கல் தூண்களை எப்போது கிரானைட் போட்டு மறைத்தார்கள், அந்த மகா ரசிகர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொன்னார் கூட வந்த பெரியவர்… அரங்கனைப் பார்த்தவுடன் அதில் மூழ்கி நாம் திக்குத் திசை தெரியாமல் தடுமாறித் தத்தளித்து விடுவோம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க இந்தத் தூண் பற்றுதலாம்… ஆறாயிரத்துச் சொச்சம் பக்கங்களில், ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் அவர்கள் எழுதியிருக்கிறார்.
View More ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1