அவரது உரைநடை எவ்வகையிலும் அடங்காதது. கவிதை, சங்கீதம், ஓவியம், சிற்பம் எல்லாமாகவும் தோற்றமளிக்க்க் கூடிய மாயத்தைத் தன்னுள் பொதிந்து வைத்திருப்பது… நவீன இலக்கிய பிரதிகளுக்கு இருந்தாக வேண்டிய வரலாற்று பிரக்ஞை, சமூக பிரக்ஞை, கலாசார பிரக்ஞை ஆகியவை லாசரா எழுத்தில் மிகக் குறைவாக இருக்கிறது, சமயங்களில் இல்லாமலே போய்விடுகிறது…கண்கள் பிரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாமிருதம் நம்மைக் கேட்கக் கூடும் – ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா?…ஒரு கலைஞர் என்ற வகையில், லா சராவின் இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலைவணங்கியே ஆக வேண்டும்…
View More அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2Tag: சிறுகதை
அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1
இந்தப் பாத்திரங்கள் பிரக்ஞை நிலையில் வெறி பிடித்தது போல நடந்து கொள்வதால் தான், சாதாரண காட்சிகள் நாடகீயமாக ஆகின்றன, காவிய ரூபம் கொள்கின்றன. சாதாரணப் பெண் சன்னதம் வந்த நிலையில் காளியாக மாறுவது போல… கடற்கரை மணலில் கால்பட்ட இடமெல்லாம் சங்கும் சிப்பியும் இடறுவது போல, எழுத்தெங்கும் படிமங்கள் இறைந்து கிடைக்கும் வெளி லாசராவின் எழுத்து… மீண்டும் மீண்டும் ஒருவித லயத்தில் வரும் உச்சாடனங்கள் போன்ற சொற்கள் – மந்திரமாகின்றன… உன்னதமாக்கப் பட்ட காமம் தான் லா.ச.ரா படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இந்த நிலைக்கு வருவதற்காக தத்தித் தாவி மோதும் முயற்சியே அவரது சிருஷ்டிகர செயல்பாட்டின் பல வடிவங்களும்…
View More அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1ஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]
“..இதோ இந்த பொம்மைக்காரர் இருக்கிறாரே, இவரே பாரத மாதாவின் செல்வம்தான். இவர் போல இன்னும் எத்தனை எத்தனையோ ஐசுவரியங்கள் பாரதத் தாய்க்கு. விதவிதமான செல்வங்கள்! அதெப்படி ஏழையாகிவிடுவாள்? கங்கையையும் காவிரியையும் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போய்விட்டார்களா? பொன் விளைகிற பூமியையும் அப்படி விளைவிக்கிற கைகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? கலைகளயும் காவியங்களையும் அவற்றைப் படைக்கிறவர்களையும் கடத்திக்கொண்டா போய்விட்டார்கள்? மெய்ஞான, விஞ்ஞான மகிமைகளைப் பறித்துக் கொண்டார்களா? …”
View More ஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]இனிப்பு [சிறுகதை]
தங்கள் கோரிக்கையில் கண்டுள்ளவாறு ஒவ்வொரு ஸ்ட்ரெச்சர் தூக்கிக்கும் சான்றிதழ் அளிப்பது இயலாது… பிரிட்டோரியாவில் இருந்து வந்த பதிலில் காலனியல் செகரட்டரி, பேரரசியின் இனிப்புகள் வெள்ளை சோல்ஜர்களுக்கு மட்டுமேயான மரியாதை என்றும் கூலிகளுக்கு அவை அளிக்கப்படமுடியாது என்பதை தெரிவிப்பதாகவும் கண்டிருந்தது…”மோசமாக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன் நெல்சன். இத்தனை மோசமாக அல்ல”… “எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது நாயுடோ…”
View More இனிப்பு [சிறுகதை]யாதுமாகி….
இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்… மாட்சிமை தாங்கிய பேரரசரின் சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாவலுக்காகவும் ஜனநாயகத்தையும் இந்தியாவையும் ஜப்பானிய காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்றவும் நாங்கள் இங்கே அனுப்பப்பட்டதாக… “விபசாரி! சின்ன சின்ன சந்தோஷங்களுக்குள் கூட என்னென்ன அதிர்ச்சிகள் என் தேவனே…”… ஒரே கோஷம் மட்டுமே கேட்டது. ஒற்றைக் குரலாக– ‘பந்தே மாதரம்’… இப்போது ஒரு குண்டு அவளது நெற்றி வட்டத்தை சரியாகத் துளைத்தது.
View More யாதுமாகி….பால் [சிறுகதை]
ஒரு மனித முகத்தால் இத்தனை அருவெறுப்பான குரோதத்தைச் சுமக்க முடியுமா என்ன? கூடை மலத்தை அவருடைய அறையில் கொட்டியிருந்தால் அவர் முகம் அப்படித்தான் போயிருக்கும்… ஜெயில் களி தின்னாலும் குடும்பம் சுகபோஜனம் செய்ய பூர்வார்ஜிதச் சொத்து இருந்தா என்ன ரிஃபார்ம்னாலும் பேசலாம்… ஹுவான்சாங்கும் பாகியானும் வந்தாங்க… நாலந்தாவுக்கும் தட்சசீலத்துக்கும் காஞ்சிக்கும் யவனன் வந்து படிக்கலை? ஆனா இன்னைக்கு…
View More பால் [சிறுகதை]மதம் [சிறுகதை]
மன்னனுக்கும் அடிமைக்கும் ஆன்மா ஒன்றுதான் என்றெல்லாம் போதிக்கிறார்களாமே?[…] நாளைக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் இந்தத் தத்துவங்கள் பெருகினால் அப்புறம் எந்தப் பிரஜை தன் அரசனை தெய்வமகனாகப் பார்ப்பான் ஈஸிபஸ்? எவன் தன் தேவகுமாரனான எனக்காக உயிர்துறக்க முன்வருவான்?
View More மதம் [சிறுகதை]தாண்டவம் [சிறுகதை]
அவரது கலை ஆளுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், விரல்களை மடக்கிக் காட்டும் பேருண்டப் பட்சி முத்திரைதான் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும்… பரதநாட்டியத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது… கோபமும், பீபத்சமும், சிருங்காரமும் எல்லாம் ஒருவித கலாபூர்வமான அழகியல் வெளிப்பாடாக இருக்கவேண்டுமே தவிர அப்பட்டமாக இருக்கக் கூடாது என்பது நாங்கள் படித்து உள்வாங்கியிருந்த பரதக் கலை கோட்பாடு… தி மடோன்னா முத்ரா… தி ரைஸன் கிரைஸ்ட் அபிநயா… தி சர்ச் முத்ரா…
View More தாண்டவம் [சிறுகதை]அமுதம் [சிறுகதை]
தொழுவக்குடிகளை தர்மானுசாராங்களுக்கு எதிராக கலகம் விளைவிக்கத் தூண்டியிருக்கிறீரென்று உம்மை உடனடியாக அழைத்து வர ஆணையாகியிருக்கிறது ஓய். பிராமணர் என்று கூடப் பார்க்காமல், உடனே வராவிட்டால் பிணைத்து அழைத்து வரவும் உத்தரவாகியிருக்கிறது… அதென்ன நிக்ருஷ்ட ஜந்மம்? தாழ்ந்த சாதியா?… நியான் ஒளியில், அந்த ஒரே பாதையின் ஈர மணற் பரப்பில் என்னுடைய காலடித்தடங்கள் மட்டுமே இருந்தன…
View More அமுதம் [சிறுகதை]திருப்பலி [சிறுகதை]
பலர் என்னை எச்சரித்ததுண்டு. போனவாரம் கூட மேலவீதி ஸ்ரீனிவாசன் சொன்னான், அவர் என்னை கிறிஸ்தவராக்க முயற்சி செய்வார் என்று. அதற்காகவே அவர் பழகுகிறார்… அது ஒரு போர்ப் பிரகடனம். அவர்கள் ஆன்மாக்களை அவர்களின் ஆத்ம ஆதாயத்துக்காக ஏசுவுக்கு வென்றெடுக்கும் சிலுவைப் போரின் பிரகடனம்… ஒயினையும் ரொட்டியையும் மறைவாக எடுத்துக் கொண்டு அக்குகைக்கு வந்தோம். யாரும் அறியா வண்ணம் இரகசியமாக உண்மையான உயிருள்ள தேவனை ஆராதித்தோம்.
View More திருப்பலி [சிறுகதை]