அங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்… ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான மைனாரிடி அரசை நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர் ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்த ஒரே காரணம் சோவும், சுப்ரமணியம் சுவாமியும் கொடுத்த அழுத்தம் மட்டுமே…
View More சோ: சில நினைவுகள் – 3Tag: சுப்ரமணியம் சுவாமி
இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)
இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, “விஞ்ஞானம் – ஆன்மிகம் – சமூக சேவை’ கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்…
View More இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!
காலம் கடந்த நடவடிக்கையே என்றாலும், மத்திய அரசின் முகமூடியைத் தோலுரிக்கவும், நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அவசியத்தை உணர்த்தவும் ராசா கைது உதவி இருக்கிறது… ராசா தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் சி.பி.ஐ.-யிடம் சொல்லி பலிகடா ஆகாமல் தப்பிக்க வேண்டும்… கிடைத்த லாபப்பணம் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் நகராச் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மத்தியில் உள்ள சோனியாவை எதிர்ப்பது ஆபத்து என்பது எம்.ஜி.ஆரையே ஏமாற்றிய கருணாநிதிக்குத் தெரியாதா?… எனவே தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி, ‘ராசா (மட்டும்) குற்றவாளி இல்லை’ என்று நாமும் ஏற்போம்…
View More ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!இஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம்.
கேரள மாநில தொழிற் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், “KSIDC இஸ்லாமிய நிதிமுறை நிறுவனத்தை ஸ்தாபித்து விருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது; இது KSIDC-யும் தனியார்களும் சேர்ந்து விருத்தி செய்யும் நிறுவனமாகும்; இந்நிறுவனம் பணம் கொடுக்கல் வாங்கல்களில் வட்டி வசூல் செய்யாது; இது முழுவதுமாக இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி இயங்கும்”
View More இஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம்.காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்
வக்கீல்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள சங்கங்களின் பலமும், அரசியல் கட்சிகளின் பக்கபலமும் இருக்க, காவலர்களுக்குச் சங்கங்கள் இல்லாமையும், அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமையும் பெரும் பலவீனமாக உள்ளன. அவர்களை ஆளும் கட்சியினரும் காப்பதில்லை, எதிர்க் கட்சியினரும் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். சாதாரணப் போக்குவரத்து விதி மீறல் முதல் கிட்டத்தட்ட கொலைக்குற்றம் வரை, வக்கீல்கள் மீது வெறும் ’முதல் தகவல் அறிக்கை’ (FIR) மட்டுமே போலீசாரால் பதிவு செய்ய முடிந்துள்ளது… சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஜாதி மற்றும் அரசியல் கட்சி சார்புள்ள சங்கங்களோ இயக்கங்களோ நடத்த அனுமதிக்கக் கூடாது…
View More காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்