உலகக் காப்பிய வானில் கதிரவனாய் ஒளிரும் கம்பன் தனது காப்பியத்தில் உணர்ச்சிச்சுவை, பாத்திரச்சுவை, பத்திச்சுவை, நாடகச்சுவை, அவலச்சுவை என பல சுவைகளைப் படைத்துள்ளான். அவற்றில் இலக்கியச் சுவையில் சிவபிரானைப் பற்றிய சில பகுதிகளைக் கண்டு களிப்பதே இக்கட்டுரையாகும்.
View More கம்பராமாயணத்தில் சிவபெருமான்Tag: சைவம்
ஈழத்து அந்தணர் பிரம்மஸ்ரீ இ.கு பூர்ணானந்தேஸ்வரக் குருக்கள்
முகப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆட்சியில் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆபத்து எற்பட்டபோது ஆறுமுக…
View More ஈழத்து அந்தணர் பிரம்மஸ்ரீ இ.கு பூர்ணானந்தேஸ்வரக் குருக்கள்பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனை
பாம்பன் சுவாமிகள் தனித்தமிழ் ஆதரவாளர் என்பதுபோல ’ஆரியத்துக்கு எதிரான அவரை செரிக்க பார்க்கும் பார்ப்பனீய தந்திரம்’ என்றெல்லாம் ஒரு சிலர் அன்பான தனி செய்திகள் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு: உரையிற் பணித்தவாறு வித்தைப் பதினெட்டிலும் வேதமே சிறப்புடைப் பிரமாணமென்றல் பரதகண்டத்துப் பண்டைநூலறிவுடையார் யாவரும் ஒப்பும் ஒரு முடிபினை ஏன்று கொள்ளும் எம்மாலும்… அன்றைக்கு சைவருள் சிலபலர் வேத நிந்தனை செய்ய முற்பட காரணம் வேதத்துள் பலதெய்வ வழிபாடு உண்டு என்றும் வேத சடங்குகள் குறித்த இழிவான பார்வையும். இதற்கான காரணம் முக்கியமாக அன்றுநிலவிய புரோட்டஸ்டண்ட் மனநிலை. அடிமைநிலையில் தளர்வுற்றிருந்த மக்களின் அறிவு காலனிய பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டதும் ஆச்சரியமல்ல. ஆனால் சுவாமிகள் இவற்றை மறுதலிக்கிறார். கன்மகாண்டத்தை அவர் இழிவாகவும் பார்க்கவில்லை. அதனை செய்வோரை அவர் அறியாமையில் இருப்பதாகவும் சொல்லவில்லை…
View More பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனைஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1
ஆகமங்களினால் நெறிப்படுத்தப்பட்டுள்ள இவ்வளவு வழிபாட்டு முறைகளும் எமது சமயத்தின் தந்தை வழி மரபு எனலாம். எமது கிராமிய வழிபாட்டு முறைகளான பொங்கல், குளிர்த்தி, மடை. படையல், காவடி, தீ மிதிப்பு, கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சிணம், சாமியாடல் யாவும் இவ்வாறான தாய்வழி மரபு வழிபாட்டு முறைகளாகும்.. சிவாகமங்களில் இவ்விதமான வேள்விகள் கூறப்படாவிட்டாலும் வேதவேள்விகளைச் சிவாகமங்கள் மறுதலிப்பது இல்லை. தமிழில் உள்ள தேவார திருமுறைப் பதிகங்களும் அவ்வாறே…
View More ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்
சைவத் தமிழ் நூல்களிலும் திருமுறைகளிலும் சைவ சித்தாந்தங்களிலும் வடமொழி மேன்மை போற்றப்படுகிறது. இவற்றை மதிப்பவர் வடமொழி பிடிக்காது என்றால் சாப்பிடுவதற்கு சாதம் வேண்டும் ஆனால் அரிசி பிடிக்காது என்று சொல்லும் சிறுபிள்ளைத்தனம் போன்றது… ஆரியந்தமிழோடு இசையானவன் என்றும் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றும் அப்பர் சுவாமிகள் ஆறாம் திருமுறையில் அடித்துக் கூறுகிறார். எமது சைவம் விரிவுபடுவதை விரும்புவோம். பிரிவுபடுவதை விடுவோம்..
View More சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்சைவ சமய நம்பிக்கை உறுதிமொழி
தமிழ்ச்சூழலில் சைவம், சைவசித்தாந்தம் குறித்து பல்வேறு குழப்படியான கருத்துக்களும், சைவத்தின் அடிப்படைகளுக்கே முற்றிலும் எதிரான கருத்துக்களும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. இச்சூழலில் டாக்டர் லம்போதரன் இராமநாதன் அவர்கள் வரைந்துள்ள இந்த அருமையான பத்து அம்ச உறுதிமொழி அனைத்து தமிழ்ச்சைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்…
View More சைவ சமய நம்பிக்கை உறுதிமொழிஅஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி
வேதநெறியும் தமிழ் சைவத்துறையும் (2009) என்பதில் தொடங்கி சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அவரது கட்டுரைகள் தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளன. ஐயா அவர்களின் கட்டுரை ஒவ்வொன்றும் அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும், அவரது சைவசித்தாந்த ஞானத்தெளிவுக்கும், அவரது சிவபக்திச் சிறப்பிற்கும் சான்று பகர்வனவாக இருக்கும். திருமுறைகளைப் பேசுவதும் எழுதுவதும் மட்டுமல்லாது, இசைக்கவும் வல்லவர். ஆழ்ந்த கர்நாடக சங்கீத ரசனை கொண்டவர். பேராசியரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பும், தொடர்ந்து சைவ அன்பர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் கற்பித்து வந்தவர். .
View More அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமிசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 7
‘எல்லாம் ஏக பிரம்ம மயம்’ என்பதனை ‘சர்வாத்ம பாவனை ‘ வழிபாடு என்பர். பிரபஞ்சம் முழுதும் சிவச்சொருபமாகக் கண்டு வழிபடுதலை அட்டமூர்த்தி வழிபாடு என்பர். மண்ணையும் நீரையும் நெருப்பினையும் காற்றினையும் ஆகாயத்தையும் தெய்வமாகக் கண்டு வழிபடுதல் பாமர மக்களிடையேயும் உண்டு.
அனாத்மாவாகிய பிரபஞ்சம் தோற்றக் கேடுகளுடன் பல்வேறு வகைப்பட்டுக் காணப்பட்டாலும் அதனுள் முழுவதும் படர்ந்திருப்பது ஒரே ஆத்மா என்றுணர்வதுவே சர்வாத்தும பாவனை.. பொன்னால் ஆன அணிகள் பலவாக இருந்தாலும் மூலப்பொருள் பொன்னே, அதுபோலவாம் இதுவும்…
சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 6
இந்த நிலைகளை அனுபவிக்கும் போதெல்லாம் ‘நான்’ குழந்தையாக இருந்தேன், ‘நான்’கௌமாரன், ‘நான்’ வாலிபன். ‘நான் முதியவன்’, ‘நான்’ கோபத்துடன் இருக்கிறேன், ‘நான்’ அமைதியுடையேன், ‘நான்’ நோயுடையேன், ‘நான்’ வலியேன் என எல்லா அவத்தைகளிலும் ‘நான்(இவ்வாறு) இருக்கிறேன்’ எனும் உணர்வு, பூக்களை மாலையாகக் கட்டிய நார் போலத் தொடர்ந்து உள்ளதை அறியலாம். இதனால் ‘நான்’ வேறு; என் குணமாக அறியப்பட்ட குழந்தைப் பருவம் முதலியன, நனவு கனவு முதலியன, கோபம் மகிழ்ச்சி என்பனவெல்லாம் என் இயல்பல்ல, நான் எப்பொழுதும்.இருப்பதுதான் என்னியல்பு என அறிதல் வேண்டும்… குருநாதர் சுட்டு விரலாகிய ஆன்மாவை ஆவரணம் விக்ஷேபம் பாபகர்மம் எனும் மூன்று விரல்களிலிருந்து பிரித்துச் சிவப்பிரமம் எனும் கட்டைவிரலொடு இணைத்துச் சின்முத்திரை காட்டுகின்றார். சுட்டுவிரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும் சேர்த்து ஒன்றுபடுத்திக் காட்டுகின்றார்…
View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 6சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5
சூனியமே அதாவது ஒன்றுமிலாத பாழே இறுதி உண்மை என்பது இவர்கள் கொள்கை. இவர்கள் கோட்பாட்டின்படி, ஆன்மாவாகிய ‘நான் யார்” என்றால் ‘நீ ‘ என ஒரு பொருள் இல்லை; ஆன்மா என்பது சூனியமே. நீயும் இல்லை நானும் இல்லை கேட்பவன் என எவரும் இல்லை என்பது இவன் கொள்கை. இக்கொள்கையினை இவன் மெய்ப்பிக்க மேற்கொள்ளும் வாதமும் அவ்வாதத் தினையே மேற்கொண்டு அவனை வெல்லும் பகவத் பாதரின் வாதத் திறமையும் அருமையானவயாகும். இருவருமே தம்கொள்கையை நிறுவ ஆழ்ந்த நித்திரை எனும் சுழுத்தி அவத்தையை அடிப்படையாகக் கொள்கின்றனர்…
View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5