கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம்… நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயல்பை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான். இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?..
View More சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்Tag: ஜீவன்
முண்டக உபநிஷதம்
இரு பறவைகள், இணைபிரியாத் தோழர்கள், ஒரே மரத்தில். ஒன்று கனிகளைத் தின்கிறது, மற்றொன்று தின்னாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது… சத்தியமே வெல்லும், பொய்மையல்ல – சத்தியத்தின் பாதையே தெய்வீக வழி – ஆசையடங்கிய ரிஷிகள் சென்றடைவதும் சத்தியத்தின் மேலாம் இருப்பிடமே… சொல் விளக்கங்களால் அடைவதல்ல அந்த ஆத்மா – மேதமையால் அல்ல, கேள்வியின் மிகுதியாலும் அல்ல – அதற்காக ஏங்குபவன் அதனையடைகிறான். அவனுக்கே தன்னியல்பை வெளிப்படுத்துகிறது ஆத்மா…. வலிமையற்றோன் அடைவதில்லை ஆத்மாவை – ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும் அடைவதில்லை – சரியான உபாயங்களால் முயலும் அறிவுடையோனது ஆத்மா பிரம்மத்தின் இருப்பிடத்தில் சென்றடைகிறது…
View More முண்டக உபநிஷதம்அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்
அது ஒரு காலம். அது ஒரு நாகரீகம். ஒரு பண்பாடு. மனித உறவுகளை வளர்க்கும் பண்பாடு. இது தபால் காரரிடம் மாத்திரமில்லை. நாவிதர், வண்ணார், கிராமத்தில் தினம் ஒன்றிரண்டு பிடி அரிசிக்கு கறுவேப்பிலை, கொத்தமல்லி கொடுத்துவிட்டுப் போகிறவளும் தான். எல்லோரும் அவரவரது அன்றாட ஜீவனோபாயத்துக்காகச் செய்யும் தொழிலோடு சந்திக்கும் மனிதருடனும் இதமான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் வாழ்க்கை அது…
View More அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)
உலகு உண்மை ஒருவிதம், ஞானிகளின் உலகமோ வேறு விதம் [..] “பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்” என்பார் ரமணர். அந்த “நான்” இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும்? [..] ருமதி. கனகம்மாள் எழுதிய “ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை”யின் துணை கொண்டு எழுதப் பட்ட அற்புதமான தொடரின் நிறைவு பகுதி இது…
View More ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)ரமணரின் கீதாசாரம் – 14
ரமணரைத் தரிசிக்க வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ரமணரது வாழ்க்கைச் சரிதையை எழுதியிருப்பதாகவும் அதை ரமணரே திருத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமணரும் ஒத்துக்கொண்டு, அதை முடித்து அந்தக் கைப்பிரதியை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அதில் ரமணருக்குப் பல மனைவிகள் உண்டு என்றும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான விவரங்கள் இருந்தன [..]
View More ரமணரின் கீதாசாரம் – 14ரமணரின் கீதாசாரம் – 13
எல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும். […]
View More ரமணரின் கீதாசாரம் – 13ரமணரின் கீதாசாரம் – 12
சிறு வயதில் ரமணர் திருவண்ணாமலையை அடைந்ததுமே தன் கையில் இருந்த சில்லறைக் காசுகளை குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பின் அருணாச்சலக் கோவிலைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார். தொடக்க காலத்தில் ஊரில் உள்ள வீடுகளின் வாயில் முன் நின்று ஏதும் கேட்காது, அவர்களாகவே அளிக்கும் உணவை தன் இரண்டு கைகள் கொள்ளும் அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டுப் போய் விடுவார். பின் அதுவும் இல்லாது பாதாள லிங்கத்தின் அருகே பல நாட்கள் கண்களை மூடி அமர்ந்திருந்த நேரத்தில் [..]
View More ரமணரின் கீதாசாரம் – 12அறியும் அறிவே அறிவு – 11
[…] எந்தச் செயலையும் போலியாக முயன்று தொடங்குபவன் போலவும் இருந்து, வீரா! அவற்றின் உயர்வினிலோ, பெருமையினிலோ பற்றில்லாதவனாக விளையாடுவாயாக.
View More அறியும் அறிவே அறிவு – 11அறியும் அறிவே அறிவு – 9
பிராணாயாம வழிகளில் செல்லும் போது நமது அறிவு முடிவான “உள்ள நிலை”யைத் தெரியாதிருப்பதோ, அல்லது அதைத் தேர்ந்தெடுத்துச் செல்லாதிருப்பதோ மிக அபாயகரமானது… ரமணர், “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்” என்பார்… இருக்கும் எல்லாப் பற்றினுள் தேகப் பற்றே ஆழமானதும் விடுதற்கு அரியதுமானதும் ஆகும்.
View More அறியும் அறிவே அறிவு – 9அறியும் அறிவே அறிவு – 8
மதங்கள் பல விதம். ஆத்மா உண்டென்கிறது ஆஸ்திகம், இல்லை என்கிறது நாஸ்திகம். உருவம் உண்டு என்கிறது சகுண உபாசனா மார்க்கம், நிர்குண உபாசனை ஒன்றே என்பது அத்துவித உண்மை. இரண்டென்பது துவிதம். பலவிதம் என்கிறது விசிஷ்டாத்வைதம். இங்கு அத்துவிதமென்றது மதத்தின் அடிப்படையில் அல்ல. அனுபவ உண்மையே சொல்லப்பட்டது. அத்துவிதம் மதம் அல்ல, அது அனுபவமே.
View More அறியும் அறிவே அறிவு – 8