தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறை பேராசிரியராக உள்ளார் என்றும். சுதந்திரமாக தன் துறைப் பொறுப்பை எப்படியும் சீரமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவருக்குத் தந்துள்ளார் என்பதும், தன் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையைத் துவங்க செ.ராமானுஜத்தை தேர்ந்தெடுத்தது துணைவேந்தரின் வித்தியாசமான நோக்கும், அணுகுமுறையும் என்றெல்லாம் கேள்விப் பட்டேன்… திருச்சூரில் இருந்த வரை அவரால் பெரிதாக ஏதும் சாதித்துவிட முடியவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்போது, இப்போது என்றால், அதை விட்டு வெளிவந்த பின் வருடங்களில் அவர் தானே கண்டு வரித்துக்கொண்ட பாதையைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது… ராமானுஜம் தன் வெறியாட்டம் என்னும் நாடகத்தோடு வந்த போது. அதைப் பார்த்த போது தான் ராமானுஜம் has arrived என்று எனக்குப் பட்டது.. (வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இந்தக் கட்டுரை தான். இதன் அடுத்தடுத்த பகுதிகள் வெளியாவதற்கு முன்பே 21-அக். அன்று வெ.சா மறைந்து விட்டார். இன்னும் ஆறாத கண்ணீருடன் அவரது நினைவைப் போற்றி இப்பகுதியை வெளியிடுகிறோம்).
View More இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2Tag: திருச்சூர்
இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)
வருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) துவங்கியது. சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி! விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் – அரசு கை விரித்தது சரியா? இந்தியாவில் பேச்சுரிமையின் நிலை மோசமடைந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது… மேலும் பல செய்திகள்.
View More இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)