பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

பறையொலி கீழானதென்றும் பறை இசைப்போர் கீழானவரென்றும் கருதும் சமுதாயமாக நாம் இருந்திருப்பின் பறை இசை கலைஞர் இப்படி கம்பீரமாக இறை வடிவங்களுக்கொப்ப கோவில் மண்டபத் தூண் சிற்பத்தில் ஏன் காட்டப்பட வேண்டும்?… சுசீந்திரத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த போது ஒரு தலைமுறைக்கு முன்னால் பட்டியல் சமுதாய மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே கோவில் தெருவில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண நாள் குறித்த உரை நடைபெறுகிறது….

View More பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08

சமூக சமத்துவம் மதமாற்றத்தின் மூலம் சுலபமாகப் பெறப்படும்… துர்பாக்கியவசமாக இந்நாட்டில் மற்ற மதங்களிலும் ஜாதி அமைப்பு ஊடுருவிவிட்டது உண்மைதான்… இந்தியாவில் இருந்து சீக்கியர்களாகவும் முஸ்லீம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் இந்துக்களே… மதத்தில் எந்த உள்ளார்ந்த பொருளும் இல்லை என்றால், விலகப் போகிற மதம் குறித்தும் சேரப் போகிற மதம் குறித்தும் அவர்கள் ஏன் வீணாக வாதிட வேண்டும்?… தீண்டாமை, முன்னேற்ற பாதைக்கு ஒரு நிரந்திரமான தடைக்கல்… என்னைப் பொருத்தவரை, நான் முடிவெடுத்து விட்டேன். நான் மதம் மாறப்போவது நிச்சயம்…

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07

தீண்டத்தகாதவர்களிடையே நிலவும் இந்தக் கொடுமையான உள்ஜாதியத்திற்கு அதைக் கற்பித்தவர்களே பொறுப்பேற்க வேண்டுமே தவிர, கற்றுக் கொண்டவர்கள் அல்ல… முதலில் அவர்கள் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட், பழங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். பின்பு… அன்றிருந்த சூழலை ஆராயும்போது கட்டாயத்தின் பெயரிலேயே நமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பது தெரிகிறது… இந்துசமூகத்தைச் சீர்திருத்துவது நமது நோக்கமல்ல. நமது நோக்கம் நமது விடுதலை மட்டுமே. சமூகவிடுதலையை மதமாற்றமல்லாமல் வென்று எடுக்க முடியாது.

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06

மக்கள் மீது எது ஆளுமை செலுத்துகிறதோ, அதுவே மதம்… நீதிமன்றத்தில் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றோ, காவல் நிலையத்தில் சரியாக நடந்து கொள்ளுவார்கள் என்றோ நீங்கள் நம்புகிறீர்களா?… நீங்கள் தீண்டத்தகாதவர்களாகவும் சரிசமம் அற்றவர்களாகவும் கருதப்படுவது நீங்கள் இந்துவாக இருக்கும்போதுதான்… உங்கள் நோக்கங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளும் சுதந்திரம் உண்டா? உங்களுக்கு உரிமையில்லை என்பது மட்டுமல்ல அடிமையை விடவும் கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்… இத்தகைய வெட்கங் கெட்ட சூழலில் இருந்து நீங்க வேண்டுமானால் உங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டுமானால் வாழ்வை கவுரமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இந்து மதத்தையும், இந்த சமுதாயத்தையும் தொலைத்து தலை முழுகுவதுதான்…

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 05

முஸ்லீம்களும் சிறுபான்மைதான். மகர் – மாங்க் ஜாதிகளைப் போலவே முஸ்லீம்களுக்கும் கிராமத்தில் சில வீடுகளே இருக்கின்றன. ஆனால் முஸ்லீம்களுக்குத் தொல்லை தர எவருக்கும் துணிவு வராது. [தலித்துகளான] நீங்கள் மட்டும் எப்போதும் கொடுங்கோன்மைக்குப் பலியாகிறீர்கள். இது ஏன்?

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 05