பணிப்பொன்

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

View More பணிப்பொன்

வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்

வைகாசி மாதம் இரு பெரும் பக்தித் தமிழ் வல்லார்களின் திருநாட்கள் வருகின்ற அற்புத மாதம். ஒருவர் சைவத்திருமுறைகள் அருளிய திருஞானசம்பந்தர். மற்றையவர் சடகோபர் என்றும் தமிழ்மாறன் என்றும் பேசப்படும் நம்மாழ்வார். .. பதினாறாண்டுகள் அம்மரப்பொந்தினுள் அசையாதிருந்த அக்குழந்தை உண்ணாமலும் உறங்கமலும் ஆழ்நிலைத்தியானத்தில் ஆழ்ந்திருந்தது… “சம்” என்றால் நல்ல. “பந்தம்” என்றால் உறவு. எனவே சிவஞானத்துடன் நல்லுறவு கொண்டவர் ஞானசம்பந்தர்…

View More வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்… மரபு என்றால் என்ன? தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்?… சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”, பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள்.

View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை…சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை…

View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1