ஹைதராபாதில் ஸ்ரீ சின்ன ஜீயர் அவர்களின் அருட்தலைமையில் அமைந்து பிரதமர் மோதி அவர்கள் திறந்து வைத்த ஸ்ரீராமானுஜர் சிலைக்கு சமத்துவ மூர்த்தி (Statue of Equality) என்ற திருப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளதே மிகப்பொருத்தமானது என்று இந்த உரையில் அருமையாக விளக்குகிறார் வேத சாஸ்திர அறிஞரும் ஆசாரியருமான டாக்டர் ரங்கன்ஜி அவர்கள். ஆன்மீக சமத்துவம் என்று கூறிவிட்டாலே அதனால் சமூக, பொருளாதார சமத்துவம் வந்துவிடுமா என்று இந்து விரோத “முற்போக்கு” ஆசாமிகளின் கேள்வியையும் எடுத்துக் கொண்டு அதற்கும் அறிவார்ந்த வகையில் விடையளித்திருக்கிறார்….
View More சமத்துவ மூர்த்தி ஸ்ரீராமானுஜர்Tag: பக்தி இயக்கம்
ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்
ஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர். நிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா? தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா?” என வினவினார். அப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்….
View More ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா
வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு… “உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் – உன் கருணை பெருமையோடு பேசப்படும் – என்னால்தான் உனக்குப் பெருமை – உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் – ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்… ”அலமேலு மங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு…”
View More வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையாநமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்
காலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின் மீதான ஒரு தியானமாக, வழிபாடாக குருமண்டலம் (Galaxy of our Gurus) என்ற இந்த போஸ்டரை செய்தேன். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். தமிழ்ஹிந்து வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். பாரத தேசத்தின் அனைத்து பிரதேசங்களையும், அனைத்து முக்கியமான சமயப் பிரிவுகளையும், சம்பிரதாயங்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முயற்சித்திருக்கிறேன்… இந்த குருமார்களின் திருவுருவங்களின் காட்சி அவர்களது நினைவையும், உபதேசங்களையும் நமது நெஞ்சில் எழுப்பும். நமது கலாசாரத்தின் ஆதார சுருதியான “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதையும் இந்த சித்திரம் நமக்கு நினைவுறுத்தும்…
View More நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்என்னதான் செய்தது பக்தி இயக்கம்?
பகுத்தறிவற்ற சடங்குகள் கொண்ட வேள்வி அடிப்படையிலான வைதீக மதத்தில் ஒழுக்க நெறிகளுக்கு இடமில்லை. சமணமும் பௌத்தமும் கொல்லாமையையும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் போதித்தன. அவையே ஒழுக்க நெறிகளை வளர்த்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை வளர்த்தன. ஆனால் பக்தி இயக்கம் என்ன செய்தது? பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்தது. வைதீகத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதனால் சாதியம் எழுந்தது. இன்று எந்த இடதுசாரியும் திராவிடவாதியும் தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் தரக்கூடிய சித்திரம் இதுதான். ஆனால் உண்மையில் வரலாறு சொல்வது என்ன?…. பக்தி இயக்கம் உருவாக்கிய அனைத்திலும், கோவில் சிற்பங்களோ, இலக்கியங்களோ அன்றாட வாழ்க்கை வாழும் சாதாரண எளிய மக்களின் காட்சிகளை காணலாம். கழை கூத்தாடிகள், பிரசவம் பார்க்கும் மருத்துவ மகளிர், உழவர், மாடு மேய்ப்போர், வேடர் – என….
View More என்னதான் செய்தது பக்தி இயக்கம்?இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்
இன்றைய நவீன வாசகர்கள் பலர் இந்து மதத்தை வரலாற்றின் வழியாக, சமூக இயக்கங்களின் வழியாக, ஞான, தத்துவ விவாதங்களின் வழியாக அறிவதில் தான் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய வாசகர்களின் தேடலைப் பூர்த்தி செய்யும் நூல்கள் அத்தியாவசியமானவை. இந்த வருடம் சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்று நூல்கள் இந்த வகையில் வரும்…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை தீவிரமாக மறுதலித்தவர்களில், கேள்விக்கு உள்ளாக்கியவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் , விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், டாக்டர் அம்பேத்கர் போன்று கல்விப் புலங்களுக்கு வெளியே சமூக, ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்களே……”இந்து அடையாளம்” என்கிற அடிப்படையான விஷயம் குறித்து தீர்க்கமான பார்வைகளை முன்வைப்பதாக உள்ளது. இந்துமதத்தின் ஒருமை – பன்முகத் தன்மை, முரண்கள் – இசைவுகள் ஆகியவற்றை அதன் முழுமையான வீச்சுடனும், நடைமுறையில் காணும் உதாரணங்களூடனும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும்…..
View More இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர்… இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது!
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்
தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?… பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்…
View More கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்கோபிகா கீதம்
இன்பம் ஊற்றெடுக்கும் – சோகம் அழிக்கும் – ஸ்வரமெழுப்பும் புல்லாங்குழல் அதை அழுத்தி முத்தமிடும்…. தூய அன்பிற்கு வெளி சாட்சியங்கள், பிரமாணங்கள் தேவையில்லை. அதற்கு அதுவே சாட்சி, அதுவே பிரமாணம்” என்று பக்தி சூத்திரம் இதனை இன்னும் அழகாகச் சொல்கிறது. கோபிகைகளின் பக்தியில் இந்த தத்துவத்திற்கு அற்புதமான உதாரணம் உள்ளது… இந்திய மனதில் “பக்தி” என்ற சொல் “மதரீதியான” குறுகிய பொருள் கொண்டதல்ல; பரந்த ஆழமான பொருள் கொண்டது. அதனால் தான் தேசபக்தி, பதிபக்தி, குருபக்தி ஆகிய சொற்கள் நம் மொழிகளில் புழக்கத்தில் உள்ளன..
View More கோபிகா கீதம்திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று… மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்..
View More திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்