அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது.. அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது… இந்தப் புத்தகத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜே.சாய் தீபக் ஆகிய இரண்டு சிந்தனையாளர்களும் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளனர். புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசும் அந்த இரண்டு முன்னுரைகளையும் கீழே தருகிறோம்..
View More அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்Tag: பாரதீய ஜனதா கட்சி
மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்
சுதந்திர இந்திய வரலாற்றில் தேர்தல் முடிவுகளை ஒட்டி நடந்த மிகக் கொடூரமான வன்முறையாக சமீபத்தில் திரிணாமுல் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய மேற்குவங்க வன்முறைகள் உள்ளன… மாநிலத்தின் பல இடங்களில் கற்பழிப்புகள், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. தேர்தல் நாளன்று பாஜகவின் வாக்குச் சாவடி முகவர்களாக பணியாற்றிய காரணத்துக்காகவே பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்… கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்…
View More மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்
அந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”… காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன….
View More காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.
View More ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…நிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சடங்காகவும், அரசியல் லாபமீட்டுவதற்கான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாகவுமே…
View More நிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி
மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்… 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்….தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும், ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக காட்சியளிக்கும் இடதுசாரிகளின் நிலை கேவலமாகவே காட்சியளிக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் முதல்வர் என பிரகடனப்படுத்தியுள்ள அ.தி.மு.கவை முழுமையாக நம்ம முடியுமா என்பது தெரியவில்லை….
View More மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணிதாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி
பாஜக-வின் தாமரை சங்கமம் (மே 10, 11) மிக வெற்றிகரமாக முடிந்தது பற்றி அனைவரும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் வேளையில், அந்த வெற்றியின் படிப்படியான திட்டமிடல் பற்றியும், அந்த வெற்றித்தேரை ஒவ்வொரு படிநிலைக்கும் கவனமாகவும், ஆழ்ந்த ரசனையோடும், தீவிர முனைப்போடும் கூடிய கடின உழைப்பினால் நிலைசேர்த்த எண்ணிலடங்காத் தொண்டர்களையும், மாவட்ட, மாநில நிர்வாகிகளையும் நன்றியுடன் நினைக்கும் முகமாகவே இந்தக் கட்டுரை… அத்தனை ஊர்களிலிருந்தும் லட்சக் கணக்கில் திரண்ட தொண்டர் கூட்டம், அத்தனை செலவும் 100 சதம் தொண்டர்களின் கைக்காசே…
View More தாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணிதேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!
உமக்குத்தான் துணிவு இல்லை, கொடியேற்றத் தடை விதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கண்டிக்கவும் திராணியில்லை, தடையை மீறி தேசியக் கொடியேற்றச் செல்லும் தேச பக்தர்களை அவமதிக்காமலாவது இருக்க வேண்டாமா நாட்டின் பிரதமர்? தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது?
View More தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்
தனது கொள்கைக்கு நேர் மாறான ஜனசங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களிடம் உதவி கேட்க ஜெ.பியால் முடிகிறது. தாய்நாட்டிற்கு முன்னால் வேறு எதுவும் பெரியதில்லை என ஜெ.பியின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார் வாஜ்பாய்…அடுத்த கிங்மேக்கரான மூப்பனார் முதல் இன்றைய தங்கபாலு மற்றும் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன்வரை எல்லோரும் நேரு, காந்தி பரம்பரைக்கு கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததைப் போல நடந்துகொண்டுள்ளனர்…
View More எமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?
ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது… நக்சல் பாதிப்பு பகுதிகளில் “சிவப்பு” பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதை சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?… உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர்…
View More ”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?