பி.ஆர்.ராஜமய்யர் வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை… அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும் மூச்சடைக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்ட ஒரு தமிழ் மனம்…
View More பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்Tag: புதினம்
“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை
“அமைதி ஓர் ஆயுதம் ஷிவானி. ஆயுதம்னா தாக்குறதுக்கு மட்டுமில்லை, தற்காப்புக்கு வச்சிருக்கிறதும்தான். எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் உன் மன அமைதி, தெளிவுதான் உன்ன மனுஷனா வச்சிருக்கு. அமைதியா இருக்கும் வரை உனது கட்டுப்பாடு உன் வசம். உன் மன அமைதியை நான் குலைச்சேன்னா உன்னால் தெளிவாக சிந்திக்க முடியாது. உள்ளிருக்கும் மிருகம் வெளிவரும்”… தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் சுதாகர் கஸ்தூரி இந்தக் கதையைச் சொல்லி இருக்கும் விதம் அருமை…இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் எப்படி பல துறைகளுடன் ஒன்றினைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதும், துப்பாக்கிகள், ஓநாய்கள், மருந்துகள், மனதினைப் படிக்கும் கருவிகளைக் குறித்த தகவல்களும், வான மண்டலம் குறித்த தகவல்களும், நிறைந்திருந்தாலும், அதை நமக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் நிச்சயம் வென்றிருக்கிறார்…
View More “7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வைஅழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை யானை
1876 முதல் 1900 வரையிலான பஞ்சங்களில் மட்டும் 2 கோடியே 60 லட்சம் மரணங்கள். மறைந்து போனவர்களில் பெரும்பகுதியினர் இந்திய சமூக அடுக்கின் கீழ்த்தட்டில் இருந்த சாதிகளை, தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்…. இந்த நாவலை வாசிக்கும் எவரையும், அதன் சம்பவங்களும், உக்கிரமான கணங்களும், உணர்ச்சிகளும் அதிர வைக்கும். நெஞ்சழிய வைக்கும். இந்தியர்களின், சாதி இந்துக்களின் மனசாட்சி செத்து சுண்ணாம்பாகி உறைந்து கிடந்தது என்ற முகத்தில் அறையும் உண்மை வாசகர்களை நிலைகுலையச் செய்யும். இந்த நாவலை முன்வைத்து, இந்துத்துவர்களாகிய நாம் நம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் உள்ளன… ஜெயமோகனின் பல படைப்புகளில் வரலாற்றுச் சமநிலை உண்டு. ஆனால் இந்த நாவல், அவ்வாறு இல்லாமல் முழுவதும் ஒரு பக்கச் சாய்வாக உள்ளது என்று கருத இடமிருக்கிறது….
View More அழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை யானைதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4
தமிழ் நாட்டில் நடப்பது ஒரு மோசடி வேலை. அம்பேத்கர், புலே போன்றாரைப் பற்றி பெரியார் பேசத் தொடங்கியதால், திராவிடர் கழகத்தை தலித்துகள் நம்பினார்கள்.[..] ஆனால் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் உயர் சாதி ஹிந்துக்கள், கீழ வெண்மணியிலும், புளியங்குடியிலும் விழுப்புரத்திலும் தலித் மக்களைக் கொலை செய்யத் தொடங்கினர், அப்போது தான் தலித்துகள் இந்த மோசடியை உணர்ந்தனர் [..]
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்
பல இடங்களில் கிட்டத்தட்ட கண்ணீர் உகுத்துவிடுவேனோ என்ற நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது கதை. ”சுயத்தை மற்றும் வாழ்க்கையைத் தேடும்” நாஞ்சில் நாடனின் முயற்சி முதல் நாவலிலேயே சாத்தியமாகியிருக்கிறது. .. முன்னணி இலக்கிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதிவாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இந்த விருது வழங்கப் படுவது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது…
View More நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்இந்துத்துவ முத்திரை
‘உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்’… சாரு நிவேதிதா அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே? அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள்.. இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் – இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட!
View More இந்துத்துவ முத்திரைஅசுர சக்திகளும் தமிழ் வீரர்களும் அரசுரிமையும்: அமரர் கல்கி
… இந்தப் புண்ணிய பரத கண்டத்தின் வடமேற்குத் திசைக்கு அப்பால் மௌடீக அசுர சக்திகள் சில தோன்றியிருப்பதாக அறிகிறேன். அவர்கள் மூர்க்காவேசத்துடன் போர் புரிந்து நகரங்களைச் சூறையாடிக் குற்றமற்ற மக்களைக் கொன்று கோயில்களையும் விக்கிரகங்களையும் உடைத்துத் தகர்த்து நாசமாக்குகிறார்களாம். .. இந்தத் தெய்வத் தமிழ்நாட்டுக்கு அத்தகைய கதி நேராதிருக்கட்டும். அப்படி நேர்வதாயிருந்தால், வீரமறக் குலத்தில் பிறந்த நீங்கள் அந்த அசுர சக்திகளுடன் போராடச் சித்தமாயிருக்க வேண்டுமல்லவா?” …
View More அசுர சக்திகளும் தமிழ் வீரர்களும் அரசுரிமையும்: அமரர் கல்கி