சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் ஒரு பகுதியாக, அதன் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது குப்புசாமி சாஸ்திரி சம்ஸ்கிருத ஆய்வு மையம்… நூற்றுக்கணக்கான சுவடிகள் இந்த ஆய்வகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன; இந்த சுவடிகளில் பல 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை… 1995 வரை இந்த ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அளித்து வந்த நிதியுதவி, பிறகு நின்று விட்டது.. முற்றிலும் தனியார் நன்கொடைகளின் உதவியுடனேயே செயல்பட்டு வருகிறது.. நிதியுதவி சீராக இல்லாமல் ஆய்வு மையம் சிரமப் படுகிறது. இந்நிலையில் இந்தியப் பண்பாடு மற்றூம் பாரம்பரியத்தின் மீதும், சம்ஸ்கிருத மொழி மீதும் பற்றுக் கொண்டோர் உதவிட வேண்டுமென இந்த ஆய்வு மையம் கோரிக்கை வைத்துள்ளது….
View More சென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறதுTag: புராண ஆய்வுகள்
Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (3)
மது கைடபர்கள் வந்து தொல்லை கொடுக்கும் போதும் அறிதுயில் உணர ஹிந்து கற்றுக் கொண்டிருக்கின்றான். அவன் மீது வெறுப்பும், பகையும், அலட்சியமும், அழிநோக்கமுமாக, மாற்றார் பண்பாட்டுக் கடலைச் சிலுப்புவதில் எழுந்த விஷ்த்தையும் கழுத்தில் நிறுத்திக் கவனமும் நிதானமும் பேண ஹிந்து ஒருவனே கற்றிருக்கின்றான்… ஹிந்துவினுடைய சாஸ்திரங்களே அவனுடைய வேதாந்தமே விடாப்பிடியான அறிவு நெறிக் கோட்பாட்டுகளினால் ஆக்கப் பட்டவை என்று அவனுக்கு யாரேனும் கஷ்டப் பட்டுப் புரிய வைக்க வேண்டும். இல்லையேல் அறிவு நெறி என்பதெல்லாம் மேற்குலக மாயை என்று அவனை மயக்கி வழிதப்பச் செய்ய, அவனுக்குள்ளும் வெளியேயும் ஆள் இருக்கிறது.
View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (3)Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)
உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை… ‘நம்மவர்’ – ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.
View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)
பெரும் ஆய்வு நாற்காலிகளில் அமர்ந்த இவர்களில் பலர் தம்மைக் கிறித்தவர் என்று கூறிக்கொள்கின்றனரா என்றால் சொல்லமுடியாது. மேலை நாட்டு நிறவெறி, — ’உயர் நாகரிகம் தங்களது; கீழை நாட்டினர் கீழானவர்கள்; நாகரிகம் அற்ற மிருகப் பிராயத்தினர்; காட்டுமிராண்டிகள்; எனவே நாகரிக உலகின் சலுகைகளான பொது நீதி, மதிப்பான அணுகுமுறை, தங்கள் உடைமைகளின் மீதும் கருத்துகளின் மீதும் பிரத்யேக உரிமை பாராட்டத் தகுதியற்றவர்கள்’ — இது போன்ற மனநிலை, இவைதான் அவர்களுக்குள் பொதிந்து இயக்குகிறது என்பது நமது பிரமை பிடித்த பார்வையன்று என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது பல சமயங்களில் அவர்களுடைய சொல்லாடல்களும், அவற்றின் தொனியும்.
View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)