சாக்கடைகளை சுத்தம் செய்தல், வீட்டுக் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் இவற்றைக் கையாளவும் பல நவீன எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இவற்றை நம் நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் போதிய கவனமும் வேகமும் காட்டப்படவே இல்லை… என் தேசத்தில் கையால் கழிவுகளைக் கையாளும் என் சகோதரர் ஒருவர் கூட இருக்கமாட்டார். என் தேசத்தில் எந்த மழைக்கும் இனி சாலைகளில் நீர் தேங்காது. என் தேசத்தின் ஆறுகளில் நன்னீர் மட்டுமே ஓடும். என் தேசத்தின் ஆறுகளில் நன்னீர் மட்டுமே ஓடும்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 17Tag: பொது சுகாதாரம்
மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?
ஜூலை 2014 இல் மேலும் 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் என அறிவிக்கப்பட்டன. இது அறிவித்தவுடன் மருந்துகம்பெனிகள் மும்பை உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் இதை நீக்க கோரி அணுகின. செப்டம்பர் 2014 இல் மேற்கண்ட உத்தரவுக்கு அரசு ஒரு விளக்கம் அளித்தது. இதிலே ஜூலை 2014 உத்தரவு அப்படியே இருக்கும் ஆனால் மேற்கொண்டு உத்தரவுகள் ஏதும் வராது. எனவே ஏற்கனவே விலை குறைக்கப்பட்ட மருந்துவிலைகள் அப்படியே இருக்கும். லட்சரூபாய் எல்லாம் ஏறவில்லை. ஏறவும் ஏறாது. அது கடைந்தெடுத்த டுப்பாக்கூர்…. இது பற்றி தெரிவதற்கு முன்னர் நானும் ஏமாந்திருக்கேன். ஒரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு 320 கொடுத்து வாங்கினேன். ஆனால் அதே மருந்து 120க்கும் கிடைக்கிறது. அதிலிருந்து மருத்துவர் எழுதிக்கொடுத்தாலும் அங்கிருக்கும் மருந்துக்கடையில் வாங்காமல் வேறு மருந்துக்கடையில் ஜெனிரிக் இருக்கா என கேட்டு குறைந்த விலை மருந்தை வாங்குவது. எல்லாம் அதே தான் ஆனால் விலை மட்டும் தான் வித்தியாசம்…
View More மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்
1950கள் வரை காலரா நோய்க்கான காரணிகள் முழுவதுமாக அறியப் படவில்லை. அந்த அறிதலை அளித்தவர் டாக்டர் சம்பு நாத் டே என்ற இந்திய மருத்துவ அறிவியலாளர். காலராவை உருவாக்கும் நச்சுக்காரணி (Cholera toxin) பற்றிய திட்டவட்டமான முடிவுகளை 1959ல் அறிவித்தார். காலரா தடுப்பூசிகளும், சிகிச்சைக்கான மருந்துகளும் உருவாக இந்தக் கண்டுபிடிப்புகளே மூல காரணம்…. கடுமையான மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே, சொற்பமான உபகரணங்களையும் வசதிகளையும் வைத்துக் கொண்டு தனது ஆய்வுகளை டே நிகழ்த்தினார்… மனித உயிர்களை நோயிலிருந்து காப்பதிலும் மீட்பதிலும், மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர்களையும் விட, சம்பு நாத் டேயின் பங்களிப்பு மிக அதிகமானது, உயர்வானது…
View More காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்