பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது… அந்த கண்டனங்களுக்கு அப்பால், அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்… ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.. இந்து சீர்திருத்த போராளிகளான வீர சாவர்க்கர், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோரிடம் மிக்க அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் பாபா சாகேப்…. ”இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தன்மை இழக்க வைத்துவிடும்” என்கிறார். அம்பேத்கர் ஹிந்து சிவில் சட்டத்தின் வரைவில் இந்துக்களை வரையறை செய்யும் போது வீர சாவர்க்கரின் வரையறையின் தாக்கத்தையே அதில் காண்கிறோம்…
View More போதிசத்வரின் இந்துத்துவம் – 1Tag: மகர்
[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்
‘‘….. பண்டிட் நேரு எப்போதும் முஸ்லீம்களின் பக்கம் நிற்பார். முஸ்லீம்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களைவிட அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிற மற்ற வகுப்பினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை அவர்கள் தட்டிச்செல்லக் கூடாது என்றுதான் கூறுகிறேன்….. காங்கிரஸ் அரசாங்கம் அவர்களது குறைகளைத் தீர்க்க முன்வராது என்பதை உணர்ந்தேன். எனவே பதவி விலகுவதென முடிவு செய்தேன். பண்டிட் நேரு எந்தப் பதிலும் எனக்குத் தரவில்லை.’’
View More [பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08
சமூக சமத்துவம் மதமாற்றத்தின் மூலம் சுலபமாகப் பெறப்படும்… துர்பாக்கியவசமாக இந்நாட்டில் மற்ற மதங்களிலும் ஜாதி அமைப்பு ஊடுருவிவிட்டது உண்மைதான்… இந்தியாவில் இருந்து சீக்கியர்களாகவும் முஸ்லீம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் இந்துக்களே… மதத்தில் எந்த உள்ளார்ந்த பொருளும் இல்லை என்றால், விலகப் போகிற மதம் குறித்தும் சேரப் போகிற மதம் குறித்தும் அவர்கள் ஏன் வீணாக வாதிட வேண்டும்?… தீண்டாமை, முன்னேற்ற பாதைக்கு ஒரு நிரந்திரமான தடைக்கல்… என்னைப் பொருத்தவரை, நான் முடிவெடுத்து விட்டேன். நான் மதம் மாறப்போவது நிச்சயம்…
View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07
தீண்டத்தகாதவர்களிடையே நிலவும் இந்தக் கொடுமையான உள்ஜாதியத்திற்கு அதைக் கற்பித்தவர்களே பொறுப்பேற்க வேண்டுமே தவிர, கற்றுக் கொண்டவர்கள் அல்ல… முதலில் அவர்கள் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட், பழங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். பின்பு… அன்றிருந்த சூழலை ஆராயும்போது கட்டாயத்தின் பெயரிலேயே நமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பது தெரிகிறது… இந்துசமூகத்தைச் சீர்திருத்துவது நமது நோக்கமல்ல. நமது நோக்கம் நமது விடுதலை மட்டுமே. சமூகவிடுதலையை மதமாற்றமல்லாமல் வென்று எடுக்க முடியாது.
View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06
மக்கள் மீது எது ஆளுமை செலுத்துகிறதோ, அதுவே மதம்… நீதிமன்றத்தில் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றோ, காவல் நிலையத்தில் சரியாக நடந்து கொள்ளுவார்கள் என்றோ நீங்கள் நம்புகிறீர்களா?… நீங்கள் தீண்டத்தகாதவர்களாகவும் சரிசமம் அற்றவர்களாகவும் கருதப்படுவது நீங்கள் இந்துவாக இருக்கும்போதுதான்… உங்கள் நோக்கங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளும் சுதந்திரம் உண்டா? உங்களுக்கு உரிமையில்லை என்பது மட்டுமல்ல அடிமையை விடவும் கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்… இத்தகைய வெட்கங் கெட்ட சூழலில் இருந்து நீங்க வேண்டுமானால் உங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டுமானால் வாழ்வை கவுரமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இந்து மதத்தையும், இந்த சமுதாயத்தையும் தொலைத்து தலை முழுகுவதுதான்…
View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06