குமரி அன்னையின் மூக்குத்தி ஒளி

கொட்டில்பாடு எஸ் துரைசாமி – வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்ட இம்மனிதரைக் குறித்து ஒரு ஆர்வத்துடன் தேடுகிறார் ஜோ தமிழ்ச்செல்வன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்ட பிரிவின் முதல் செயலாளரும் தலைவருமாக இருந்தவர் இவர்… தொடர்ந்து திராவிட இயக்கங்கள் காமராஜருக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத பிரச்சாரத்தை மேற்கொண்டன என்பது இதுவரை எவரும் வெளிக்கொண்டு வந்திராத ஒரு முக்கிய தகவல்…. இந்த நூல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைவரின் வரலாற்று நினைவுகளை மீட்டெடுக்கும் நூல் மட்டும் அல்ல. அதற்கு மேலாக பல தளங்களில் அது நம்முடன் உரையாடுகிறது….. நேசமணி “நீ யாரைப் பார்த்து பேசுகிறாய் தெரியுமா?” என்று கோபத்துடன் கேட்டார், அதற்கு தாணுலிங்க நாடார், “பள்ளியாடி அப்பாவு நாடார் மகன் நேசமணியைப் பார்த்து பொற்றையடி பரமார்த்தலிங்க நாடாரின் மகன் தாணுலிங்கம் பேசுகிறேன்.” என்றார். நேசமணியின் அடியாட்கள் தாணுலிங்க நாடாரைச் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டார்கள்…

View More குமரி அன்னையின் மூக்குத்தி ஒளி

திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

ஹைதர் அலிக்கும், திப்பு சுல்தானுக்கும் திண்டுக்கல்லில் மணீமண்டபம் அமைக்கப் படும் என்று தமிழ்க முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.. மதவெறியர்களான, வன்முறையாளர்களான இந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தமிழக அரசாலும் மக்களாலும் போற்றத் தகுந்தவர்களா? வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. ஜெர்மன் மிஷநரி எழுதுகிறார் – ”திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது”…. நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள்… யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை ஆளப்பட்டு வந்தது. திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது. அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது…. திப்பு சுல்தானின் சில தனிப்பட்ட நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்… .

View More திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 07

இதில் நாம் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் – நீதிக்கட்சி பெருவாரியாக வெற்றிபெற்றபோது தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகளை அமைச்சராக்கவில்லை என்பதைத்தான். மக்கள் செல்வாக்கு முழுவதும் இழந்துவிட்ட நிலையில் – எப்பொழுது வேண்டுமானாலும் அமைச்சரவை கலைக்கப்படலாம் என்று தெரிந்திருந்தபோதுதான் எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது.

View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 07