ஒரு பொருளின் உண்மைத் தன்மையை அறிய மொத்தம் பத்து அளவைகள் நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளன. அந்த அளவைகள் காட்சி (தர்சனம்), கருதல் (அனுமானம்), உவமம், ஆகமம், அருத்தாபத்தி, இயல்பு, ஐதிகம், அபாவம், மீட்சியால் உணரும் ஒழிவறிவு, மற்றும் தோன்றி உளதாகும் சம்பவம் என்ற பத்துமே அந்த அளவைகளாகும்.
View More மணிமேகலை 28 — சமயக்கணக்கர் திறம் கேட்ட காதைTag: வேதவியாசர்
ஆதிசங்கரர் படக்கதை — 7
“இங்கே உட்கார். யோகசித்தியை எளிதில் வென்றுவிட்டாய்! இனி ஆத்வைத தத்துவத்தை நாடு-நகரமெங்கும் சென்று பரப்புவாயாக!”
“அவ்வாறே செய்கிறேன். ஆசீர்வதியுங்கள்!”
வியாசன் எனும் வானுயர் இமயம்
வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நான்கு “வியாசர்களும்” ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது… “கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை? காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர்! தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை…
View More வியாசன் எனும் வானுயர் இமயம்மஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு
தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு தற்போது இருப்பில் இல்லை. குறைந்த அளவே அச்சிடப் பட்ட முந்தைய வெளியீட்டின் பிரதிகள் அனைத்தும் ஒரு வருடம் முன்பு விற்றுத் தீர்ந்து விட்டன. இந்தப் பொக்கிஷத்தை இப்போது வாசிக்க விரும்புபவர்கள் புத்தகம் கிடைக்காமல் அல்லல் உறுகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இது தொடர்பாக ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ராமன் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் குறைந்தது நூறு பேர் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்து கொண்டால் கண்டிப்பாக வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். விவரங்கள் கீழே…
View More மஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடுஅஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை
இராமனின் முன்னால் சீதையும், பின்னால் இலக்குவனும் நடந்திடும் காட்சியிலும் பண்பினிமைச் சுட்டுண்டு… இராவணனை இராவணனாகவும் இராமனை இராமனாகவும் ஆக்கிய அற்புத உரைகல் சீதாதேவி… ஆண்டுதோறும் இராமாயண அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் நன்முயற்சி இது.
View More அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை