பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர். இன்று இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் புதிதாக அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. வட இந்தியாவின் சாதிய பிரிவினைமிக்க மாநிலங்களில் எல்லாம் தலித்துகள் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், பூசகர்களாகவும் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டில் தான் கோயிலில் திருநீறு பெறவும் அவர்கள் கொடுத்தால் மற்றவர்கள் பெற்றுக்கொள்ளவும் உரிமை கேட்டு போராடுகிறார்கள்…. என் எண்ணம் என்னவென்றால் சோழ மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க பல கோயில்கள் ஒருகால பூஜைக்கும் வழி இல்லாமல் இருக்கிறது. அந்த கோயில்களுக்கு சென்று பூஜை செய்ய விருப்பமிருந்தால் அதற்கான சைவ வைணவ பூஜை முறைகளில் முறையான பயிற்சியை பெற்று அனைத்து சாதியினரும் பூசை செய்யலாம்….
View More அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடுTag: வேத பாடசாலைகள்
வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு
தொல்லியல் ஆராய்ச்சியாளரும் அறிஞருமான டாக்டர் ஆர்.நாகஸ்வாமி எழுதிய “Tamil Nadu – The Land of Vedas” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் நடந்தது. “தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்களிப்பு அளவிலடங்காது. என்னுடைய இந்த நூலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் தமிழகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் வேதங்கள் ஆற்றிய பங்கை தமிழ் இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக நிறுவியுள்ளேன். புறநானூறு முதற்கொண்டு சங்ககால இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆராயந்து சொல்லியிருக்கிறேன். இரண்டாம் பாகத்தில் கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள் மூலம் தமிழகத்துக்கு வேதத்தின் பங்களிப்பையும் நிறுவியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை” என்றார் டாக்டர் நாகஸ்வாமி….
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடுமகாத்மா காந்தியும் மகா பெரியவரும்
போலி மதச்சார்பின்மையாளர்கள் விரும்புவோர் வந்தேமாதரம் பாடலாம் என்று சொன்ன போதும் தேச பிரிவினையின் முன்னோட்டமாக வந்தேமாதரத்தை சிதைத்த போதும் என்ன மனநிலையில் செயல்பட்டார்களோ அதே மனநிலையில்தான் சாதியத்தை ஆதரிப்போர் செயல்படுகின்றனர். சுவாமி தயானந்த சரஸ்வதியும், சட்டம்பி சுவாமிகளும், ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும் கொண்டு வந்த ஞான கங்கை சாதிய ஒழிப்பு. அது பாரம்பரியம் என்கிற பெயரில் உருவான பாலையில் வறண்டு போக விடுவது ஹிந்து சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்…. போலி மதச்சார்பின்மை, சாதியம் – பாபா சாகேப் அம்பேத்கரே இந்த இரண்டு தீமைகளையும் ஹிந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் இணையான வியாதிகள் என்கிறார்….
View More மகாத்மா காந்தியும் மகா பெரியவரும்ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)
வேத நெறிப்படி வாழ நாம் எடுக்கும் சங்கல்பம் அல்லது உறுதியே யக்ஞோபவீத தாரணம் அல்லது பூணூல் அணிதல். உபநயனம் என்ற கல்விக் கண் திறக்கும் சடங்கின் புற அடையாளமாக பூணூல் அணியப் படுகிறது… அதன்படி வருகின்ற ஆவணி மாதம் 4ஆம் நாள் (20/08/2013) செவ்வாய் கிழமை ஆவணி அவிட்டம் நாளில் காலை 9 மணிக்கு யஜுர் வேத உபாகர்மம் நடைபெறும். அது சமயம் புதிதாக பூணூல் அணிய விருப்பம் உள்ளவர்கள் யாரும் இதில் கலந்து கொண்டு யக்ஞோபவீத தாரணம் செய்து கொள்ளலாம். இடம்: சென்னை திருவல்லிக்கேணி ஆரிய சமாஜம் … தகுதி: மனிதராக பிறந்த அனைவரும். தக்ஷிணை : வேதங்கள் காட்டும் வழியில் வாழ்வதே… மேலும் விவரங்கள் கீழே..
View More ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)எழுமின் விழிமின் – 18
தானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவது தான். அதற்கு அடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்… சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…சம்ஸ்கிருத சொற்களின் தொனியினாலேயே இந்த மக்களினத்திற்கு ஒரு கௌரவ உணர்ச்சியும், ஆற்றலும், சக்தியும் கிடைக்கின்றன…
View More எழுமின் விழிமின் – 18இந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012
அதி நவீன அறிவியல் தொழில் நுட்பத்திலும் சரி, இராணுவ தயாரிப்பு நிலையிலும் சரி, தான் யாருக்கும் சளைத்ததல்ல என்று இந்தியா நிரூபித்து விட்டது.. இந்த அளவு தீர்க்கமான வரலாற்று, கலாசார பிரக்ஞையுடன் ஒரு தமிழக முதல்வர் செயல்படுவது தமிழக மக்களுக்குக் கிடைத்த வரம்!… எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியின் கிறிஸ்தவ ஆசிரியர்கள் பள்ளியை முழுவதுமாக கிறிஸ்தவமயமாக்கி விட்டிருந்தனர். எல்லாக் கூட்டங்களிலும் கிறிஸ்தவப் பிரார்த்தனைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை எழுதப் படாத விதி போல… கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) இருந்து மதரஸாக்கள், வேதபாடசாலைகள் இரண்டுக்கும் விதிவிலக்கு – ஏன்?.. பாஜகவின் மாபெரும் மதுரை மாநாட்டை வேண்டுமென்றே தமிழக ஊடகங்கள் புறக்கணித்து இருட்டடிப்பு செய்கின்றன…
View More இந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012வேதம் புனிதமடைந்தது!
இந்து ஆன்மீக சாதகர் சிவானந்த சர்மா அவர்கள், கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார்.. பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார்…இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில்… இதனுடன் நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும்…
View More வேதம் புனிதமடைந்தது!பரமக்குடி முதல் பாடசாலை வரை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது…‘பாரம்பரிய’ வேத பாடசாலைகள் வேதம் ஓதும் உரிமையை தலித்துகளுக்கு மறுப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?
View More பரமக்குடி முதல் பாடசாலை வரை