வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்

மன்னா நான் இப்போது கேட்கப்போகும் கேள்விக்கு சரியான பதிலை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை நூறு சுக்கலாக சிதறடிப்பேன். கோபால் சுப்ரமணியத்தை உச்ச நீதிமன்ற நியமனத்தில் மோதி அரசு நீக்கியதை ஊழலில் திளைத்த காங்கிரஸ் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உடைய திமுக எதிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் …

View More வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்

நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மானுட வாழ்வாதார உரிமைகள் என அடிப்படைகளை இணைக்கும் பார்வையை அவர் தன் பொது வாழ்க்கை முழுவதும் முன்வைத்து வந்தார். தமிழுணர்வாளர்கள், சுதேசி அமைப்பினர் என அனைவருக்கும் அவரது பங்களிப்பும் பார்வையும் முக்கியமானவையாக இருந்தன….. இயற்கை விவசாய மீட்டெடுப்பும் முன்னகர்தலும் இந்த பண்பாட்டு மீட்டெடுப்பில் ஒரு முக்கிய மைய அம்சமாகும். சாதி மத மொழி எல்லைகளுக்கு அப்பால் இந்த மண்ணையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்ட ஒரு ஆன்மிக மக்கள் இயக்கமாக இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த நம்மாழ்வார் வாழ்க்கையே ஒரு தவமாக வாழ்ந்த ரிஷி.

View More நம்மாழ்வார்

மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்

“செலவு? நம்மை போல வளரும் நாட்டின் பொருளாதாரத்துக்கு முடியுமா? அதுவும் அமெரிக்கா விதித்த தடைகள் எல்லாம் இருக்கின்றனவே”…. ”அதையெல்லாம் கவலைப்படாதீர்கள். இந்திய தொழில்நுட்பத்தால் அதிசயங்களை செய்ய முடியும். அரசு முழுமையாக துணை செய்ய வேண்டும்”…. சர்வ சிக்க்ஷா அபியானுக்கும் சந்திரயானுக்கும் இன்றைக்கு மங்கல்யானுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அது இந்த செயல்திட்டங்களின் சிக்கனம் சார்ந்த செயல்திறமை. இயல்பாக நம் பண்பாட்டில் ஊறியது அது. … பாரதத்துக்கும் எனவே இந்துத்துவத்துக்கும், எதிராக மார்க்ஸியர்கள் ஏகாதிபத்தியவாதிகளுடன் கை கோர்ப்பதென்பது வரலாற்றில் எப்போதும் நடக்கும் துரோகம்தானே!

View More மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்

கரங்கள் [சிறுகதை]

“எந்திரங்களும் மனித தன்னுணர்வும் குறித்த புரிதல் முக்கியமானது” என்றார் பண்டிட். லியோன்ஸ்கி அதை ஆமோதித்ததை பாஸு வெளிப்படையான எரிச்சலுடன் எதிர்கொண்டான். “இதற்கும் ஏதாவது வேத ஸ்லோகம் வைத்திருப்பீர்களே”… அவனது தலையிலும் நெற்றியிலும் இருந்து சென்ஸார்கள். அவற்றுடன் பல மெல்லிய பச்சையும் சிவப்புமான இழைகள் இணைந்திருந்தன. அச்சிறுவனிடமிருந்து செல்லும் சென்ஸார்களின் நீட்சிகளே அந்த இழைகள் என ஊகிக்க முடிந்தது… நல்ல காலம் சோவியத் யூனியன் இப்போது இல்லை. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் பூர்ஷ்வா சதிகளல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் எத்தனை கட்சி கமிசார்களிடம் என்னவெல்லாம்…

View More கரங்கள் [சிறுகதை]

சரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு

சிந்துவெளி  நாகரீகத்தின்  உண்மை வரலாற்றைக் கூறும் நூல்.  மார்ச்-30 (வெள்ளி) மாலை 6…

View More சரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2

வளரும் நாடுகளின் அணுசக்தியை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு முடமாக்க முயல்கின்றன் என்பதையும் அதற்காக அவர்கள் ஏற்படுத்தும் மரணங்களை பற்றியும் கண்டோம்.. ஆசியா நாடுகளின் மொத்த மின் உற்பத்தில் 50% மின்சக்தி தரும் நிலக்கரி பூஜ்ஜியத்தை நோக்கி செல்ல தொடங்க உள்ளது… நமது நாட்டில் இருக்கும் நீர்சக்தி அளவும் குறைந்து கொண்டு இருக்கிறது.. இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மிக பெரிய எரிசக்தி பற்றாக்குறையை அணுச்சக்தியால் மட்டுமே தீர்க்க முடியும்…

View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

வரலாற்று சம்பவங்கள் என்பவை என்றுமே முடிந்து போன ஒன்று கிடையாது, அது மீண்டும் மீண்டும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் படுகொலைகள். இந்த படுகொலைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் அவர்கள் நோக்கம் என்ன என்பது ஒரு அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட யூகிக்கமுடியும். இதே பிரச்சனைகள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டது. அணுசக்தியில் ஈரான் தற்பொழுது இருக்கும் நிலையில் தான் 1960 ஆம் ஆண்டு இந்தியாவும் இருந்தது. இது போன்ற மரணங்கள் / படுகொலைகள் அப்பொழுது இந்தியாவிலும் நடை பெற்றன

View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

இந்திய பாரம்பரிய அறிவியல்

இந்தியாவில் எல்லாம் இருந்தது என்று சொல்லாதீர்கள், இந்தியாவில் ஒன்றுமே இல்லையென்றும் சொல்லாதீர்கள்.ஒரு நாகரிகம் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உண்மையிலேயே இங்கே என்ன இருந்தது என்று தெரிந்துகொண்டு அதை மட்டும் சொல்லுங்கள்!… நமது ரிஷிகள் தெளிவாகவே இவை அனைத்தும் வெறும் செவிவழிச் செய்தியல்ல, உலக நன்மைக்காக அனுபவத்தாலும், பயனை திரும்பத்திரும்ப பரீட்சித்துப் பார்த்தும், முறையாக வளர்த்தெடுக்கப்பட்ட அறிவு என்று தெரிவிக்கிறார்கள்… வெவ்வேறு சொற்களைக் கொண்டு எண்களைக் குறிப்பது சுலபம். கூடுதலாக கவியுணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும். படித்து மனனம் செய்யவும் ஏதுவாக இருக்கும்…

View More இந்திய பாரம்பரிய அறிவியல்

மலரும் பிரபஞ்சம்

முயல்களை ஏன் வெள்ளைவாலோடு இறைவன் படைத்தார் தெரியுமா?… சிருஷ்டி-கர்த்தர் என்கிற கோட்பாட்டைத்தான் கேள்விக்குள்ளாக்கி, தெளிவாக மறுத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாவ்கிங்… இந்த உலகத்தை உருவாக்கிய இறைவன், கருணைமிக்க, சர்வசக்தி வாய்ந்த, சர்வ அறிவு பொருந்திய ஒருவர் என்பதாக நாம் கற்பனை செய்கிறோம்… பிரம்மமே இப்பிரபஞ்சமாக வடிவெடுத்தது என்றும் அது பல சுழல்களில் தொடரும் ஓர் உயிரியக்கம் என்றும் பாரத ஞான மரபுகள் ஆதித் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து சொல்லி வருகின்றன… பற்பல பிரபஞ்சங்களை சஹஸ்ரநாமம் கூறுகிறது… கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அவை உருவாகின்றன [உந்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன புவனாவளீ]…

View More மலரும் பிரபஞ்சம்

பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 3 [நிறைவுப் பகுதி]

அனைத்துப் பொருள்களிலும், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் தண்ணீரிலும் வேதிப்பொருள்கள் இருக்கின்றன… சாத்தான்கள் உலகையோ, மனிதர்களையோ அழிக்கப்போவதில்லை. மனித உருக்கொண்ட ‘அறிவியல் எதிர்ப்பு’ சாத்தான்கள்தான் உலகை அழிக்க அரும்பாடு படுகிறார்கள்.. பாகவத புராணத்தில், பொய்களே கலிகாலத்தில் நம்பப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும் பொய்களை மறுதலித்து உண்மைகளை தைரியமாகக் கூற ..

View More பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 3 [நிறைவுப் பகுதி]