ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்

ஸ்மார்த்த என்ற சொல் அதன் நேர்ப்பொருளில் வேதநெறியைக் கடைப்பிடிக்கும் அனைவரையுமே குறிக்கும். ஆயினும் நடைமுறையில், தத்துவரீதியாக ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை ஏற்று, வைதிக சடங்குகளையும் நெறிகளையும் கடைப்பிடிக்கின்ற, வழிபாட்டு ரீதியாக சிவன், விஷ்ணு முதலான அனைத்து இந்து தெய்வங்களையும் பேதமின்றி வழிபடுபவர்களாக உள்ள பிராமணர்களைக் குறிப்பதாக இச்சொல் புழக்கத்தில் உள்ளது. பொதுவாக ஐயர் என்ற பின்னொட்டுடன் இவர்கள் அழைக்கப் படுகின்றனர்.. ஸ்மார்த்தர்கள் விபூதி அணிவது என்பது தொன்றுதொட்டு வருகின்ற வழக்கம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.. பாரதம் முழுவதும் உள்ள பிராமணர்களை எடுத்துக் கொண்டால், அதில் ஸ்மார்த்த என்ற வகையினரில் வருவோரே மிகப் பெரும்பான்மையினர்…

View More ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்

சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்

சங்கரரைப் பற்றிய சிறப்பான அறிமுக நூல்களில் ஒன்று டி.எம்.பி.மகாதேவன் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஆங்கில நூல். ஒரு இனிய ஆச்சரியமாக, எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு மொழிபெயர்ப்பில் இதன் தமிழாக்கம் வெளிவந்து இணையத்திலும் கிடைக்கிறது (சுட்டி கீழே). தத்துவப் பேராசிரியர் எழுதிய மூலநூல், சிறந்த இலக்கியவாதியின் கவித்துவமிக்க உரைநடையில் தமிழில் ஒரு தனி மெருகைப் பெற்று விட்டது. இந்தச் சிறிய நூலில் முதல் பாதியில் சங்கரரின் வாழ்க்கைச் சரிதமும், பின்பாதியில் தத்துவ தரிசனமும் சிறப்பாக விளக்கப் பட்டுள்ளன…

View More சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்

சிவ மானஸ பூஜா – தமிழில்

முறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது….
இரத்தினங்கள் இழைத்த இருக்கை – பனிநீராடல் – திவ்யமான ஆடைகள் – பல்வேறு மணிகளால் அணிகலன்கள் – கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம் – மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள் – தூபம் தீபம் – தேவா தயாநிதி பசுபதி – இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும் ஏற்றிடுக…

View More சிவ மானஸ பூஜா – தமிழில்

சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை

‘ஓதுகின்ற வேதம்எச்சில்’ என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை… வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை தானே கேள்வி கேட்கும் தைரியம் வேத ரிஷிகளுக்கு உண்டு… முருகனின் அன்னை சித்த சேனானியாகவும் வேதமாதாவாகவும் வேதத்தின் ஆத்மாகாவும் இருப்பாள் என்றால் முருகன் சித்த சேனனாகவும் சுப்ரமணியனாகவும் ஏன் இருக்க முடியாது?…

View More சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை

ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

கோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா
சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்
பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்
மேவியுனைக் காவாது காண்.

கங்கை குளித்தும் கடலில் முழுகினும்
அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும்
ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும்
மோனம்கை கூடாது காண்…

View More ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

ஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்

மரணபயமில்லை எனக்கு சாதிபேதமில்லை தந்தையில்லை எனக்கு
தாயில்லை
பிறப்புமில்லை
உறவில்லை நட்பில்லை
குருவில்லை சீடனுமில்லை
சிதானந்த ரூபச் சிவம் யான்
சிவம் யான்.
ஞானத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் அளிக்கும் இந்த மகத்தான பாடலை காலந்தோறும் வேதாந்திகள் பாடி வந்துள்ளனர். எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், இசை வடிவங்களில் இது வந்துள்ளது….

View More ஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்

தேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி

பகலைப் பிரசவிக்கிறது இரவியென உனது வலது விழி. இரவைப் படைக்கிறது
நிலவென உனது இடது விழி. சிறிதே மலர்ந்த பொற்கமலமென உனது மூன்றாவது விழி பகலுக்கும் இரவுக்குமிடையில் ஊடாடும் அந்தியைச் சமைக்கிறது… செவ்வரியோடிய கண்களில் கருவிழியின் ஒளிதிகழும் தேவியின் பார்வை திரிவேணி சங்கமத்தை ஒத்திருக்கிறது என்று சமத்காரமாகக் கூறுகிறார்.

View More தேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்

கண்களால் காணும்போது ஆகாயம் நீலமாக நம் தலைக்குமேல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு பகுத்து அறியும் திறனற்றோர் (அவிவேகிகள்) நீலநிறம், கவிந்திருப்பது போன்ற தன்மை (concavity) ஆகியவை ஆகாயத்தைச் சார்ந்தது என்கின்றனர். ஆனால் பஞ்சபூதங்களைப் பற்றிய ஞானமுடையவர்கள் ஆகாயம் நிறமும் வடிவமுமற்றது, காட்சிப் பிழையால் (அத்யஸ்தம்) அவ்வாறு தோன்றுகிறது என்று அறிகின்றனர். அதுபோல, ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அனாத்மாவின் (உடல், புலன்கள், உலக வியவகாரங்கள்) ஸ்வரூபத்தையும் பிரித்தறியும் திறன் கொண்ட விவேகிகள், உடல் புலன்கள் ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சேர்ந்தது என்று எண்ண மாட்டார்கள்.. ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள்) அழகிய பற்பல உவமைகளின் மூலமாக வேதாந்த தத்துவத்தின் ஆழமான கருத்துக்களை படிப்படியாக அற்புதமாக விளக்கிச் செல்கிறது…

View More ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்

காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

காஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்… தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ சதி இத்யாதி) என்று சதிவலை தியரிகளை எடுத்துவிடுவது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. கிராம தேவதையான காஞ்சி காமாட்சியை பிராமணர்கள் அபகரித்து விட்டார்கள் என்பதும் இதேபோன்ற ஒரு அவதூற்றுக் கதையே அன்றி வேறில்லை…

View More காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

தேவிக்குகந்த நவராத்திரி — 2

மீனாட்சி அம்மை திக்விஜயம் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறாள். எல்லா மன்னர்களையும் வென்றவள் இப்போது இமயமலையை அடைந்து அங்கிருக்கும் சிவகணங்களின் தலைவனைப் போருக்கழைக்கிறாள். தனது மணாளாகப் போகிறவர் அவரே என்பதை அவள் அறிந்திலள். அவளைத் தடுத்து நிறுத்த இயலாத நந்தி தேவர் சென்று சிவபிரானிடம் முறையீடு செய்ய, அவர் பொருள் செறிந்த சிறுமுறுவல் கொண்டு தாமே எழுந்து மீனாட்சியை எதிர் கொள்ள வருகிறார்.

View More தேவிக்குகந்த நவராத்திரி — 2