சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனாவில் மத விவகாகரங்கள் தொடர்பான தேசிய மாநாட்டில்,…
View More இடதுசாரி கம்யூனிஸ்ட் சீனாவின் அறிவுரையை ஏற்குமா?Tag: இடதுசாரி அறிவுஜீவிகள்
கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வை
தேசத்தை நேசிப்பதாகச் சொல்ல்லும் நீங்கள் தேசத்தை உடைப்போம் என்று சொல்லும் இஸ்லாமிய மாவோயிஸ பயங்கரவாதிகளைப் பற்றி ஏன் எதுவும் சொல்வதில்லை;அஃப்சல் குரு போன்ற பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களை எதிர்த்து எதுவுமே நீங்கள் ஏன் பேசுவதில்லை என்ற கேள்விக்கும் சரியான பதில் கமலிடம் இல்லை… ஸ்மிருதி இரானிக்கும் கமலுக்கும் இடையிலான மோதல் என்பதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்ந்து அடிவாங்குவது பொறுக்காமல் அவரை அடித்து வந்த அர்னாபே ஒரு கட்டத்தில் ஸ்மிருதியுடனான பேட்டி என்பதுபோல் அதைக் கொண்டு செல்லவேண்டிவந்துவிட்டது. கமல் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். .. மொத்தத்தில் எளிதில் மடக்க முடிந்த பல்வேறு ஓட்டைக் கருத்துகளுடன் போலி அறிவுஜீவிப் பிம்பத்துடன் வலம் வந்துகொண்டிருக்கும் கமல் சாரிடம் (இப்போது அபாய அரசியலை முன்னெடுக்கும் அயோக்கியனாகவும் ஆகத் தொடங்கியிருக்கிறார்) தமிழிலும் இதுபோல் பேட்டிகள் எடுக்கவேண்டும். ஒருவகையில் இந்த ஆங்கிலப் பேட்டி கூட கொஞ்சம் மிதமானதுதான்…
View More கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வைவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]
பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது, அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், இரண்டையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?… காளிதாஸர், பவபூதி, கம்பர் இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்… ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன. காலக்கணிப்பின் பாற்பட்டு 200 வருஷங்களுக்கு முற்படாத ஒரு கலவை இது….
View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்
பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன..”புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்” என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது… சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன் நடப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்…
View More சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்இந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கை
உலகெங்கும், வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையான மக்களையும், சமூகங்களையும் நினைவில் நிறுத்த வேண்டும் என்ற அறிவார்ந்த கொள்கை செயல்படுகிறது, ஆனால், இந்தியாவிலோ, (இடதுசாரித் தரப்பின் ஆதிக்கத்தால்), வரலாற்றில் கொடுமைகளுக்கு இரையாகி மடிந்தவர்கள், அவர்களது நினைவுகள் மறக்கடிக்கப் படுவதன் மூலமும், சில சமயங்களில் இழிவு செய்யப் படுவதன் மூலமும் இரண்டாவது முறையாக சாகடிக்கப் படும் அவலம் நிகழ்கிறது… மாற்றுக் கருத்து கொண்ட இந்திய வரலாற்றாசிரியர்களை அறிவுபூர்வமாக விமர்சிப்பதற்குப் பதிலாக, இடதுசாரித் தரப்பு அவர்களை தேசியவாதிகள் என்றோ வகுப்புவாதிகள் என்றோ முத்திரை குத்தி நிராகரிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. (காங்கிரசின்) அரசியல் ஆதரவு மூலமாக திணிக்கப் பட்ட கருத்துகளுக்கு ஒத்து ஊத மறுத்ததனால், பல திறமையுள்ள கல்விப்புல அறிஞர்கள் பாதிக்கப் பட்டு, ஒதுக்கி வைக்கப் பட்டனர். நல் வாய்ப்புகளை இழக்குமாறு செய்யப் பட்டனர்…
View More இந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கைஇந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது
ஜனநாயக நாடுகளில், பாசிசம் பழைய பாணியில் இல்லாமல் “கருத்துக்களின் பரவலாக” ஜீவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சிமுறை சார்ந்த இயக்கம் என்ற வகையில், தனது தலைவர்கள் ஆட்சியில் இருந்த வரை, இந்தியாவில் பாசிசம் அமைதியாக, சமர்த்தாக இருந்தது. இந்த பாசிச வர்க்கத்தினரால் விரும்பப் படாத ஒரு தலைவரை 2014ல் மக்கள் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுத்த போது, இந்திய சமுதாயத்தில் இருந்த பெர்லின் சுவர் உடைந்து நொறுங்கியது. இன்னும் முழுதாக சுத்தம் செய்யப் படாமல் அதன் இடிபாடுகள் அங்கங்கு விழுந்து கிடக்கின்றன. பழைய கட்சியாலும், வாரிசு அரசியலாலும், கருத்தியலாலும் ஆதாயம் அடைந்த பத்திரிகையாளர்கள் கூச்சலிடுகிறார்கள்… இந்திய அறிவுஜீவிகள் என்பவர்கள், இந்திய வாக்காளர்களின் தீர்ப்பை சகித்தன்மையுடன் ஏற்க மறுக்கிறார்கள். டிவி ஸ்டுடியோக்களிலிருந்து இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள் இவர்கள். ஜனநாயகம் உண்மையிலேயே முதிர்ச்சியடையும் போது இந்த வகையான அறிவுஜீவிகள் அழிவார்கள்….
View More இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமதுவிருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்
இந்த எழுத்தாளர்கள், தம்மைப் போன்ற இதர கைத்தடி எழுத்தாளர்களுக்கு விருது கொடுப்பது, அடுத்த தலைமுறையிலும் தம்மைப் போலவே ஒத்த “கொள்கையுடைய” நடுவர்களையும் நியமிப்பது என்றுதான் அறுபது எழுபது ஆண்டுகளாக இந்திய அறிவு ஜீவி உலகம் இயங்கி வருகிறது. அதனாலேயே நேரடியாக அரசு தரும் விருதாக இல்லாவிட்டாலும், அரசு தரும் விருதைப் போலவும் தற்போதைய அரசின் மீது அதிருப்தியால் அதைத் திருப்பி தருவதாகவும் ஒரு நாடகத்தை பீகார் தேர்தலுக்கு முன்பாக அரங்கேற்றுகின்றனர்…மோடி ஆட்சியில் எந்தவொரு எழுத்தாளரும் படைப்பாளியும் அச்சுறுத்தப் படவில்லை. எந்தவொரு வலதுசாரி எழுத்தாளர்களும் இன்று வரை எந்தப் பதவிக்கும் தெரிவு செய்யப்படவில்லை. .நரேந்திர மோதி மௌனமாக இதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, தன் பாட்டுக்கு தன் வேலையை செய்வது இவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது…
View More விருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்ஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்
ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption) அமைப்பின் தன்னார்வலர் தில்லிக் காரர் கௌரவ் ஷர்மா இந்தக் கேள்விகளை எழுப்புகிறார் – நீங்கள் பயங்கரவாதிகளை ஆதரிப்பவரா? இல்லை என்றால், எப்படி உச்சநீதி மன்றத்தில் பயங்கரவாதிகளின் வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டிருப்பவரை நிறுவனராகக் கொண்ட கட்சியை ஆதரிக்கிறீர்கள்?… வகுப்புவாதத்தையும் வாக்கு வங்கி அரசியலையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? உ.பி பரெய்லி மதக்கலவரங்களில் நேரடியாக ஈடுபட்ட, பங்களாதேஷி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்ய ஃபத்வா வெளியிட்ட மௌலானா தவ்கீர் ரஜா என்பவரிடம் பிச்சை கேட்காத குறையாக்க் கெஞ்சினார் அர்விந்த் கேஜ்ரிவால். அவரை எப்படி ஆதரிக்கிறீர்கள்?…
View More ஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்முற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்
ஆதாரம் இல்லாத பொய்யான ஆபாச செய்திகளை இந்துத்துவ இயக்கத்தவர்களோடு தொடர்பு படுத்தி வெளியிடுவது, போலியான செய்திகளை ஆதாரமின்றி வெளியிடுவது உள்ளிட்ட கருத்து வேசித்தனத்தில் ஊறியவை ஊடகத்தில் ஊடுருவியிருக்கும் நச்சுக்கள். இவற்றை முற்போக்கு முத்திரைக்காகவும், மதசார்பின்மை மன நோய் காரணமாகவுமே செய்கிறார்கள் என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன் பின்னால் இருப்பது பிரமாண்டமான மத மாற்ற வியாபாரத்தின் கரங்கள்…. கர்நாடக பாஜகவினர் பார்த்த ஆபாச நடனம் என்ற பெயரில் வெளியிட்ட பொய் செய்தி, Kaமல ஹாசன் ராமனுஜர் பற்றி உதிர்த்த முத்துக்கள், அவரின் அருந்தவ புதல்வி என் தகப்பனார் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுக்கலாம் நான் கொடுக்க கூடாதா? என்று பெண்ணுரிமை பேசி கொடுத்துள்ள பேட்டி… கூட்டுக் குடும்பமாக இருந்தால், நுகர்வு பகிரப்பட்டு, குறைவான செலவில் வாழ்க்கை நடத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அழித்து, தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஊக்குவித்து, நுகர்வை பெருக்கி, குடும்ப அமைப்பை சிதைத்து விட்டார்கள் – எல்லாம் தங்கள் சந்தை லாப நோக்கங்களுக்காக. குடும்பங்களின் சிதைவால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் பெரும் நாடுகள் திணறிக் கொண்டிருப்பதை பாருங்கள்…. நித்தியானந்தா விவகாரம் முதல் ஆஷாராம் பாபு, காஞ்சி சங்கராச்சாரியர் உள்ளிட்ட விவகாரங்களில் ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் தினமும் கற்பழித்துக் கொண்டும், அனாதை ஆசிரமம் என்ற பெயரில் இளம் பெண்களை அயல் நாட்டு ஆண்களுக்கும், பாதிரிகளுக்கும் விருந்தாக்கி கொண்டிருக்கும் கிறிஸ்தவ “தொண்டு “ என்ற பெயரில் விபச்சாரம் செய்து கொண்டிருக்கும் சக்திகளை வெளிக்காட்ட ஒரு முயற்சியும் இருப்பதில்லை…. இவர்களுக்கு பெருமளவு பணமும், பரிசுப் பொருட்களும், பன்னாட்டு ஹோட்டல்களில் தங்குமிடமும், வெளிநாட்டு பயணமும், ஊடகங்களில் போதுமான கவனமும் கொடுக்கப் படுகின்றன. இப்போது நீங்கள் ஞாநி, அ.முத்துகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் என்ற புனைபெயர் கொண்ட சாகுல் அமீது இவர்களை எடுத்து கொள்ளுங்கள்….
View More முற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா
தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக போராடி வரும் சுப்பிரமணியன் சுவாமி பலம் படைத்த ஊழல்வாதிகளின் முக்கிய இலக்காக இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை. இருந்தும் அவர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் மதச்சார்பற்ற, இடது சாரிகள் என்பது ஒரு முரண்நகை. அண்மையில் டி.என்.ஏ இதழில் ஹிந்துக்கள் மற்றும் இந்தியாவின் மீது பாயும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். இது இஸ்லாமியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் எதிர்க்கப் பட்டது; விளைவாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவர் நடத்தி வந்த வகுப்புகளை நிறுத்தியது. இது ஒரு இடது சாரிக் குறுங்குழுவின் முயற்சியில் பேச்சுரிமையே தடை செய்யப் பட்டது போல அல்லவா இருக்கிறது!
View More சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா