அண்ணாமலை வீரமாமுனிவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? : பதிலடி

நீங்கள் ஒவ்வொருமுறை கே.அண்ணாமலை என்ற பெயரை எழுதும்பொழுதும் கே என்பதில் வரும் இரட்டை சுழியை கொடுத்த வீரமாமுனிவருக்கும் ‘லை’ கொடுத்த பெரியாருக்கும் நன்றி செலுத்த வேண்டும் – என்கிறார் சு.வெங்கடேசன்.. இவர் கூறுவதில் ஏதாவது உண்மை உள்ளதா என்று இந்தக் கட்டுரையில் ஆராய்ந்து பார்க்கலாம்.. இரட்டை சுழி கொம்பு மீனாட்சி அம்மன் கோயில் ஓவியங்களிலேயே காணக்கிடைக்கிறபோது, வரலாற்றுப் புலமையுள்ள மதுரைவாசிக்கு மட்டும் தெரியாமல் போனது வியப்புதான்… பள்ளன் கோயில் செப்பேடு என்று அழைக்கப்படும்
பல்லவர் காலத்திய செப்பேட்டில். ஐந்து விதமான லை எழுத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன…

View More அண்ணாமலை வீரமாமுனிவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? : பதிலடி

தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்

காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது. அரசாணையின்படி, ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல. அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். இதில் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை.. 1971ல் தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரை பதிவுசெய்யப் பட்டுள்ளது. சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்… ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும் பிராம்மணர்களின் போராட்டமாகக் காட்டவும் பிராம்மண – அப்பிராம்மண, சைவ – வைணவ சண்டையாகவும், மாற்றவும் முயற்சி செய்தனர். அவை பெரும் தோல்வி அடைந்தன. அந்த நிலையில், இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையை ஒரு வாய்ப்பாகக் கருதி மக்களைத் திசைத் திருப்ப முயற்சி செய்கின்றனர்….

View More தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்

அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்து

அவதூறுகள் பல வழிகளில் பலவிதங்களில் வருகின்றன. ‘நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா லிங்கத்தோட பொருளை சொல்லுடா’ என்றெல்லாம் கேட்கும் அற்பத்தனமான ஆபாச அறிவின்மை இந்த அவதூறு சங்கிலியின் முதல் கண்டுபிடிப்புமல்ல கடைசி கண்ணியுமல்ல. கம்பீரமான பெரும் ஊர்வலங்கள் மெல்ல நகரும் வீதிகளில் தெருநாய்கள் குரைப்பதற்கும் சுதந்திரம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் …

View More அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்து

பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்

தமிழ்நாட்டின் ஒரு மிக முக்கிய இந்துத்துவ சிந்தனையாளர் தனி உரையாடலில் ‘பெரியார் அன்றைக்கு இந்த மண்ணுக்கு ரொம்ப தேவையாக இருந்தாரப்பா… அவரும் நம்ம சமுதாயத்தை நேசித்தவர்தான்.’ என்றார். ஒரு ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அமைப்பு வெளியிட்ட தேசபக்தர்கள் மகான்கள் பிறந்த நாட்கள் நினைவு நாட்கள் பட்டியலில் ஈ.வே.ராமசாமி பெயரும் இருந்தது. சூழ்நிலை புரிந்திருக்கும். இத்தகைய சூழலில்தான் ”ஈ.வெ.ராவின் மறுபக்கம்” என்ற இந்த புத்தகம் வெளியானது. இன்றைக்கு ஈ.வே.ராமசாமியை எவராவது இந்துத்துவர் ‘பெரியார்’ என்றால் அது பழக்க தோஷமாக மட்டுமே இருக்கும். இந்த நூலை எழுதியவர் நிச்சயமாக திராவிட இயக்க வரலாற்றில் ஊறித் தோய்ந்து போன ஒரு பெரிய வரலாற்றாராய்ச்சியாளராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால் அதுதான் இல்லை. அவர் ஒரு இளைஞர்….இன்றைக்கு நாம் ‘taken for granted’ என எடுத்து கொள்ளும் சாதாரண அடிப்படை உரிமைகள் கூட எப்படி போராடி வெல்லப்பட்டன என்பதை இந்த நூல் வெளிக் கொணர்கிறது. நீதிகட்சியின் பிம்பத்தை உடைக்கும் அதே நேரத்தில் ஹிந்து சமுதாயத்தின் வரலாற்றில் இருக்கும் இருண்ட பக்கங்களையும் நம் முன் நிறுத்துகிறார் ம.வெங்கடேசன்….

View More பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்