எந்த ஒரு அரசு திட்டமும் செயல்படுத்தப்படும் போது எந்த அளவு ஊழலைக் கொண்டதாக அறியப்படுகிறதோ அந்த அளவு ஜனநாயகத்தன்மையை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல். இந்த உரையாடலை சமூகமும் அரசு இயந்திரமும் ஊடகமும் நடத்திக் கொண்டே இருக்கிறது. அந்த உரையாடலின் திரண்ட பருப்பொருள் வடிவம்தான் ஊழல். ஏன் இன்றைக்கு சுவிஸ் வங்கி கணக்குகள் என்றெல்லாம் பேசப்படுகிறதே. இதன் அடிப்படை பார்வை ஒரு உலகளாவிய பார்வை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் சங்க புலவனின் பார்வையில் தொடங்கிய அந்த நம் பண்டை தொல்மரபை மீட்டெடுத்தவர் ஜவஹர்லால் நேரு என்றே கூறப்படுகிறது.
View More மோடி எனும் அபாயம்Tag: ஊழல்
அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு…. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது….
View More அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை
ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.. ஓ ஹிந்து சகோதர, சகோதரிகளே இன்னுமா காங்கிரசிர்கு ஒட்டு போட வேண்டும் என்கிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் நமது நாடு குழிதோண்டப் படுவது பற்றியும் உங்கள் குழந்தைகளும் உங்களது பேரக்குழந்தைகளும் இரண்டாம்தரக் குடிகளாக வாழ்வதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம்!
View More காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகைஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்
2004ல் ஆட்சியில் அமர்ந்த தினத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் மேல்…
View More ஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டா விருப்பாக சமீபத்தில் நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிகக் குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது. இப்படி ஏலம் குறைந்ததற்குக் காரணங்கள் என்ன என்று அலசுவோம்….. நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு… தற்போது நாடு முழுவதும் 9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இனிமேல் புதிய இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை…
View More 2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்
கருணாவின் கட்சியை காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை அதாவது சில நேரங்களில் அதை சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்தது நினைவிருக்கலாம். அத்தகைய நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவு கரத்தை மீண்டும் துடைத்து கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிருபித்திருக்கிறார் அண்ணன் கருணா. அவரின் ராஜதந்திரத்தை மன்னிக்க “இராச தந்திர”, “இன மான” உணர்வு மிக்க நகர்வை , மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பன பதர்களும் ,மவுண்ட் ரோடு மகா விஷ்ணு வகையறாக்களும் விமர்சிக்கின்றன.
View More காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”!
சல்மான் குர்ஷித், அவர்களே, உங்களுக்கு காசுக்கோ, வசதிக்கோ என்ன குறைவு வந்து விட்டது, அதுவும் ஊனமுற்ற, ஆதரவற்ற குழந்தைகளின் பேரை சொல்லி கொள்ளையடிக்க?… சி.ஏ.ஜி கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்றால் ”என் பேனாவில் இங்க்கிற்கு பதில் கேஜ்ரிவாலின் ரத்தத்தை நிரப்பி எழுதுவேன்… என் தொகுதிக்கு வந்து விட்டு உயிரோடு திரும்பி போய்விடுவீர்களா?” என மீடியாவில் கொலை மிரட்டல் விடுக்கிறீர்களே?… திருட்டுத்தனம் அம்பலப்பட்ட பிறகே குர்ஷித் முழுமையான காங்கிரஸ்காரர் என்பதை அவசரமாக உணர்ந்த சோனியா பாராட்டி உச்சி முகர்ந்து உடனடி பரிசாக வெளி உறவுத் துறையையும் அளிக்கிறார்….
View More நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”!இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]
மின் உற்பத்தி நிறுவனங்களைச் செயல்படாமல் இருத்திவைப்பதன் மூலம், அதிக விலைக்கு பிற மாநிலங்களிடமிருந்தோ, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ மின்சாரம் வாங்குவதனால் அவர்களிடமிருந்து கிடைக்கும் கமிஷனுக்காகவே இது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் கழகங்கள் ஈடுபடுகின்றன… இந்தியாவின் வீடுகளில் உள்ள மின்னணுச் சாதனங்களைப் புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்த ஆய்வின் முடிவில்… நீர் மின் உற்பத்தி நிலையங்களில் பழுது நீக்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுதல் மூலம் அவற்றிலிருந்து மிக மிகக் குறைந்த செலவில் முழு அளவிலான மின்சாரத்தைப் பெறலாம் (யூனிட் 60 பைசா அளவில்)…
View More இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]
அரசு, அதன் செயல்படாத அமைச்சர்கள், செயல்திறமையற்ற அதிகாரிகள் என்ற கேவலமான கூட்டணியால் 6 கோடி மக்கள் தினமும் பரிதவிக்கிறார்கள்… மிகுமின்சார உற்பத்தி மாநிலமாக இருந்த தமிழகத்தை, அதன் பிறகு மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவும், கருணாநிதியும் மின் உற்பத்திக்கான தேவையை சிறிதும் கவனியாமல் விதவிதமான ஊழல்களில் ஊறித்திளைத்து, மக்களைப் பெரும் அவதியில் தள்ளினர்… மத்திய காங்கிரஸ் அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கும், ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் நிச்சயம் ஏற்பட்டு விடவே கூடாது என்ற கருணாநதியின் நல்ல எண்ணமும்தான் ஒட்டுமொத்த இருளுக்கும் காரணம்… காற்றாலை, அனல்மின், நீர்மின் திட்டங்களையும் ஒழுங்காகப் பராமரிக்காமல் கவனமாக வீணாக்கியது…
View More இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்
இந்த சிலிண்டர் கட்டுப்பாடு வெறும் விலை வித்யாசம் மட்டும் தானா? காங்கிரஸின் சதி இதில் என்ன?… பேண்ட் வாசிப்பவனின் மந்திர இசைக்கு மயங்கி ஏமாளி எலிகள் மலையிலிருந்து விழுந்து மாய்த்துக்கொண்டதைப்போல, அயல் நாட்டு சோனியாவின் குரூரமான இசைக்குப் பின்னால் செய்வதறியாது சென்று கொண்டிருக்கிறது தேசம்… தினம் தினம் 42 லட்சம் இல்லங்களைச் சென்றடையும் சிலிண்டர்களின் 150% விலையேற்றம், மக்களிடம் மிக மோசமாக உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும்… அப்படியானால் இது எப்படி ஆம் ஆத்மியின் அரசு என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறீர்கள்? 523 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 6000-க்கும் மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆண்டுக்கு 3,00,000 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் எடுத்துக் கொள்கிறார்கள்…
View More காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்