இருளில் இருந்து ஒருவன் விழித்து எழும் தருணமான அதிகாலை வேளையை அவர்கள் “உஷஸ்” என்று குறிப்பிட்டு, அதற்கு ஒரு தனி மகத்துவத்தையும் அளித்தனர். ஏனென்றால் அனைத்து உயிர்களும் அறியாமையில் மூழ்கி இருந்தாலும், வேற்றுமையை மறந்து அப்போது அவர்கள் அனைவரும் ஒரே நிலையில் இருக்கும் அந்த உறக்க நிலையில் இருந்து மாறி, உலக இயல்பின் படி தங்களின் வேற்றுமைகளை விழிப்பு நிலையில் காணப் போவதன் முதல் படி அது. அப்படி என்றால் நமது உண்மை நிலை எது? அனைத்தும் ஒன்றே என்று பார்ப்பதா? அல்லது வேற்றுமைகளைக் காண்பதா? ….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4Tag: ஐம்புலன்கள்
ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3
சூரியன் உலகில் உயிர் வாழ ஆதாரமாக இருப்பதையும், அது தோன்றி மறைவதுடன் நமது பகல்-இரவு வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதையும் கண்ட வேதகால ரிஷிகள், அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்ந்தனர்… வானத்தில் உள்ள சூரியன் போல, உலகில் அக்னியையும், நம்முள்ளே உயிரையும் கண்டார்கள். என்றைக்கு ஒருவனது உயிர் பிரிகிறதோ அன்று சிவம் சவமாகி, அக்னி குளிர்ந்து அணைவதைக் கண்டனர். அதுவரை இந்திரன் நம்முள் இருந்து, பஞ்ச இந்திரியங்கள் மூலம் வெளிப்படுகிறான்….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2
கண்ணதாசனின் பாடலுக்கு வருவோம். அவர் எப்படி ஆரம்பிக்கிறார்? “உலகம் பிறந்தது எனக்காக” என்றுதானே. சாதாரணமாக ‘நான் பிறந்தேன்’, ‘அவர் பிறந்தார்’ என்போம். ஆனால் இங்கோ உலகம் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது உலகம் வரும் முன்பே ‘நான்’ இருந்திருக்கிறேன். அது உதித்து இருப்பது எனக்காக. இப்படியாக ‘நான்’ இல்லையென்றால் உலகம் இல்லை என்றாகிறது. அது உண்மைதானே?… சிறிதானாலும் தன்னால் ஒளியை உருவாக்கலாம், ஆனால் இருளை உருவாக்க முடியாது – ஒளியை மறைத்தே இருளை உருவாக்க முடியும் என்று தெளிகிறான். அதனால், உலகில் சூரியனால் இயற்கையாக நடக்கும் ஒளி-இருளைக் கொண்டு, சூரியனை அறிவாகவும் அது இல்லாது இருப்பதை அறியாமை என்றும் கொள்கிறான்….
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8
புனிதமான கங்கையில் குளித்துவிட்டு ஆச்சாரியார் தன் சீடர்களுடன் வரும்போது, எதிரே ஒரு புலையன் நான்கு நாய்களைப் பிடித்துக் கொண்டு வருகிறான். சீடர்கள் அவனை அவர் மேல் படாதவாறு ஒதுங்கச் சொல்ல, அப்போது அவன் சங்கரரைப் பார்த்து இப்படிக் கேட்கிறான்: “யதிகளில் சிறந்தோரே, அன்ன மயத்தாலான இந்த சரீரத்தை அன்ன மயமான இன்னுமொரு சரீரத்திலிருந்து விலகச் சொல்கிறீர்களா? அல்லது ஒரு சைதன்ய சொரூபத்தில் இருந்து இன்னொரு சைதன்ய சொரூபத்தை அகலும்படிச் சொல்கிறீர்களா? கங்கை நதியில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பம், சண்டாளனின் குடிசையின் பக்கத்தில் இருக்கும் குளத்தில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பத்திலிருந்து வேறாகுமோ? பொன் குடத்தின் உள்ளே இருக்கும் ஆகாசம் மண் குடத்தில் உள்ளதிலிருந்து வேறுபடுமோ? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சத்திய ஆனந்த போதத்தில் திளைத்திருக்கும் உம்மிடம் “இவன் மேலோன், அவன் கீழோன்” என்ற பெரும் மயக்கம் எப்படித் தோன்றுகிறது?” இதைக் கேட்ட ஆச்சாரியார் தன் மனம் ஆன்மாவின் உன்னத நிலையை மறந்து உடலின் தூய்மை பற்றிய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி பாமரத் தன்மை அடைந்ததை உணர்கிறார். அதனை அகற்றி, “பரம்பொருளின் தன்மையை உணர்ந்து உறுதியான போதத்துடன் இருப்பவர் சண்டாளர் ஆயினும், அந்தணர் ஆயினும் அவரை என் குருவெனப் போற்றுகின்றேன்” என்று ஈற்றடி வருமாறு “மனீஷா பஞ்சகம்” என்ற ஐந்து ஸ்லோகங்களை இயற்றுகிறார். ஆக உடல்-ஆன்மா குழப்பம் எப்போதும் வராதவாறு நம்மைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்…..
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 7
“வேதாந்த மார்க்கத்தில் பிரபஞ்சத்தைப் பொய்த் தோற்றம் என்றனர். ஆகையால் பாரதம் அறிவியல் துறையில் வளர்ச்சி அடையாமல் இருந்தது” என்று நமது தத்துவ மேதைகளின் மீது குற்றம் சுமத்துவார்கள் [..] நான்முகக் கடவுளும் உருத்திர மூர்த்தியும் திருமாலின் அம்சங்கள் என்றும், முறையே அவ்விருவர் புரியும் சிருஷ்டி-சங்காரத் தொழில்கள் திருமாலின் தொழிலே என்பதும் [..] விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “கர்த்தர்” (படைப்பவன்) என்ற பெயரும் வரும் [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 7அச்சுதனின் அவதாரப் பெருமை
பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம். நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். “நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை’ என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?” என்று கேட்கலாம்.
View More அச்சுதனின் அவதாரப் பெருமை