தான் உண்மையில் என்ன செய்கிறோம், தனது உண்மையான இலக்கு, கோட்பாடு பற்றியெல்லாம் பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ். பேசுவதே இல்லை. சேவையை ஊருக்குச் சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன என்று ஒரு தியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸின் பலமும் அதுவே, பலவீனமும் அதுவே. தனது ஷாகா அனுபவங்களின் அடிப்படையிலும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஓர் அம்பேத்கரியரின் பார்வை என்ற கோணத்திலும் இந்த நூலை ம.வெங்கடேசன் எழுதியிருக்கிறார்..
View More நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் – புத்தக அறிமுகம்Tag: சங் பரிவார்
சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்
தேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார்… 1969 மாநாட்டில் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானது, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும் பலதரப்பட்ட மக்களிடமும் மிக சகஜமாகப் பழகி வந்தார்….
View More சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்
அந்தப் பையனின் அப்பாவுடையது போன்றது தான் இன்றும் இந்திய சமூகத்தின் பொது மனநிலை. ஆனால் அத்தகைய மன விலகல்களை முறிக்கும் மாமருந்தாகத் திகழ்கிறது இந்துத்துவம். சராசரியை விட அதிகமாக, ஆர் எஸ் எஸ் இயக்கத் தொண்டர்களின் குடும்பங்களில் சாதி இணக்கத் திருமணங்கள் நடக்கின்றன என்பதை சமூகவியலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்… முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுவது எளிது. ஆனால், சாதி பேதம், ஏற்றத் தாழ்வு இவற்றை எதிர்த்துப் போராடுவது ஒரு கடினமான வேலை. காரணம், இந்தப் போராட்டம் நம்மவர்களுக்கு இடையேயானது…. முற்போக்குகளும் சோஷலிஸ்டுகளும் காங்கிரஸ் அரசியல்வாதிகளும் உள்ளூர அம்பேத்கருக்கு இந்த கௌரவம் அளிக்கப் படுவதை விரும்பவில்லை. அதற்கான பழியை இந்துத்துவம் மீது போடுவதற்கான பொன்னான வாய்ப்பை எதிர்பாத்திருந்தனர். ஆனால் ஆர் எஸ் எஸ் அதை முழுவதுமாகப் பொய்யாக்கியது….
View More ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?
“இது ஒரு புரட்சிகரமான இயக்கம். வேறு எந்த இயக்கமும் இதற்கு இணையாகாது. இங்கு ஒழுக்கமும் படிப்பும் நிறைந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். சமூகத்தை மாற்றியமைப்பது இந்த ஒரே இயக்கத்தினால்தான் முடியும்” என்றார் ஜெ.பி… நடுவயது தாண்டிவிட்ட ராகுல் இன்னும் அரசியல் முதிர்ச்சியற்று இருப்பது அவருக்கும் அவருடைய கட்சிக்கும் நல்லதல்ல. “ராகுல் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் ஒரு தேசியவாத இயக்கத்திற்கும் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்.”…
View More ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு
சங்கம் தமிழ்நாட்டின் தலித்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சங்க ஷாகாக்கள் தோன்றிய பிறகு தீண்டாமை மறைந்து விட்ட பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன… அவர்கள் எல்லோரும் பாபரின் வழித்தோன்றல்களோ, டேவிட்டின் சந்ததிகளோ அல்ல. அவர்கள் ராமரின், கிருஷ்ணரின், பரதனின் சந்ததிகள்தாம்… சக்தி உடையவர்களின் குரல்தான் மதிக்கப்படும். என்னதான் உயர்ந்த தத்துவம் இருந்தாலும் நடைமுறையில் அதன் விளைவுகள் தெரிந்தால்தான் உலகம் அதனை ஏற்கும்…
View More ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு